ஆண்டுக்கு ரூ.67,000 கோடி வட்டி கட்டும் தமிழ்நாடு.. வெள்ளை அறிக்கையில் தகவல்

  • சென்னை: புதிதாக பொறுப்பேற்றுள்ள முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக அரசின் 2026-2027 ம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் விரைவில் தாக்கல் செய்யப்பட உள்ளனர். இந்நிலையில் தான் பட்ஜெட்டுக்கு முன்பாக தமிழகத்தின் நிதி நிலைமை எப்படி உள்ளது? கடன் எவ்வளவு? அதற்கான வட்டி எவ்வளவு? வருவாய் எவ்வளவு? என்பது பற்றிய விவரங்களை மக்களுக்கு தெரியப்படுத்தும் வெள்ளை அறிக்கை இன்று வெளியிடப்பட்டது. அதில் தமிழக அரசு ஆண்டுக்கு ரூ.67,000 கோடி வட்டி செலுத்துகிறது என்று நிதி அமைச்சர் மரிய வில்சன் தெரிவித்துள்ளார்.

    Advertisement

    இதுதொடர்பாக நிதி அமைச்சர் மரிய வில்சன் வெளியிட்டுள்ள வெள்ளை அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: ''தமிழ்நாட்டின் மொத்த நிலுவை கடன் ரூ.10 லட்சம் கோடியாகும். கடந்த 2021-22 முதல் 2025-26 வரை 5 ஆண்டுகளில் மொத்த கடன் ரூ.5 லட்சம் கோடியில் இருந்து ஏற்த்தாள ரூ.10 லட்சம் கோடியாக இருமடங்கு அதிகரித்துள்ளது.

    Advertisement

    அதேபோல், தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனங்களின் கடன் பொறுப்புகளை சேர்த்தால் தமிழ்நாட்டின் மொத்த கடன் அளவு ரூ.13.18 லட்சம் கோடியாக இருக்கிறது. தமிழகத்தில் ஒவ்வொரு தனி மனிதன் மீதும் ரூ.1 லட்சத்து 28 ஆயிரத்து 934 கடன் உள்ளது. கடந்த ஆட்சியில் தனி நபர் கடன் 92 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. இந்த கடனுக்கு அரசு சார்பில் வட்டி செலுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் மொத்த வருவாய் வரவுகளில் வட்டி செலவீனத்தின் சதவீதம் 22.8 சதவீதமாக உள்ளது. ஆண்டுக்கு அரசு சார்பில் ரூ.67,000 கோடி வட்டி கட்டப்பட்டு வருகிறது.

    English Summary

    The Tamil Nadu budget for the 2026-2027 fiscal year, under the leadership of the newly sworn-in Chief Minister Vijay, is set to be presented soon. Against this backdrop, a white paper was released today to inform the public about the state's financial position-including details on debt, interest payments, and revenue-prior to the budget presentation. Finance Minister Maria Wilson stated in the report that the Tamil Nadu government pays ₹67,000 crore annually in interest.