சென்னை: தமிழ்நாடு உறுதி அளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் தொடர்பான முக்கியமான அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டு உள்ளது. முதல்வர் விஜய் தலைமையிலான அரசு இதை தொடருமா என்ற சந்தேகம் நிலவிய நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.
தமிழக அரசு ஊழியர்களின் நீண்டகாலப் போராட்டங்களுக்கும் கோரிக்கைகளுக்கும் வடிவம் கொடுக்கும் வகையில், 2026 ஜனவரி 1 முதல் புதிய ஓய்வூதியத் திட்டமான 'தமிழ்நாடு உறுதி அளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம்' (Tamil Nadu Assured Pension Scheme - TAPS) அமலுக்கு வரும் என்று அப்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். இந்தத் திட்டத்தின் இறுதி விதிகள் மற்றும் கணக்கீட்டு நடைமுறைகள் முழுமையாக வடிவமைக்கப்பட்டு வரும் நிலையில், இடைப்பட்ட காலத்தில் ஓய்வு பெறும் ஊழியர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் வகையில் முழு இடைக்கால நிவாரணக் கொடுப்பனவு (Interim Payout) அரசாணையை நிதித்துறை (டாப்ஸ்) வெளியிட்டுள்ளது.
அரசாணை எண் 111 (நாள்: 16.06.2026) இன் படி, டாப்ஸ் (TAPS) திட்டத்தின் தற்காலிக மற்றும் அவசர கால வழிகாட்டுதல்கள் மற்றும் தகுதியான பயனாளிகளுக்கான இடைக்கால மாதப் பணம் வழங்கும் நடைமுறைகள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளன. கடந்த 2003 ஆம் ஆண்டு ஏப்ரல் 1 ஆம் தேதிக்குப் பிறகு பணியில் சேர்ந்த அரசு ஊழியர்கள் அனைவரும் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தின் (CPS) கீழ் கொண்டு வரப்பட்டனர். இத்திட்டத்தில் நிலவி வந்த சந்தை சார்ந்த வருவாய் நிச்சயமற்ற தன்மைகள் காரணமாக, பழைய ஓய்வூதியத் திட்டத்தை (OPS) மீண்டும் கொண்டு வரக் கோரி 23 ஆண்டுகளுக்கும் மேலாக ஊழியர்கள் போராடி வந்தனர். இதனைப் பரிசீலித்த தமிழக அரசு, ஊழியர்களின் சமூகப் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் 'டாப்ஸ்' (TAPS) என்ற புதிய உத்தரவாத ஓய்வூதியத் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இந்த டாப்ஸ் திட்டத்திற்கான சட்டரீதியான மற்றும் கணக்கியல் நடைமுறைகளை இறுதி செய்ய, பல்வேறு பங்குதாரர்களுடன் ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இறுதி விதிகள் அறிவிக்கப்பட்டு, ஒவ்வொரு ஊழியருக்கும் அவர்கள் கடைசியாகப் பெற்ற அடிப்படைச் சம்பளத்தில் 50% ஓய்வூதியமாக நிர்ணயிக்கும் பணிக்குச் சற்றுக் கூடுதல் கால அவகாசம் தேவைப்படும். எனவே, 01.01.2026-க்குப் பிறகு ஓய்வு பெற்ற ஊழியர்கள் எவ்விதப் பொருளாதாரப் பற்றாக்குறையும் இன்றி வாழ ஏதுவாக, இந்த இடைக்கால வாழ்வாதார ஆதரவுத் தொகை (Sustenance Support) உடனடியாக வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த அவசரக்கால மற்றும் தற்காலிக நடைமுறைகள் பின்வரும் ஊழியர்களுக்கு மட்டுமே பொருந்தும்: 01.04.2003 அன்று அல்லது அதற்குப் பிறகு வழக்கமான ஊதிய விகிதத்தில் (Regular Scale of Pay) மாநில அரசின் சிவில் பணிகள் அல்லது பணியிடங்களில் நியமிக்கப்பட்டு, பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தின் (CPS) கீழ் இருந்தவர்கள். 01.01.2026 அன்று பணியில் நீடித்து, அதற்குப் பிறகு வயது முதிர்வு காரணமாக (Superannuation) ஓய்வு பெற்றவர்கள். குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் தகுதிவாய்ந்த பணிக்காலத்தை (Qualifying Service) நிறைவு செய்திருக்க வேண்டும். பணியின் போது மரணமடைந்த அரசு ஊழியர்களின் (Death-in-harness) தகுதியான குடும்ப உறுப்பினர்கள். வயது முதிர்வு (Superannuation) அல்லது பணியிடை மரணம் (Death-in-harness) தவிர்த்த பிற வழிகளில் (உதாரணமாக: விருப்ப ஓய்வு அல்லது ராஜினாமா) பணியில் இருந்து விலகியவர்கள். தமிழ்நாடு குடிமைப் பணிகள் (ஒழுங்கு மற்றும் மேல்முறையீடு) விதிகளின் கீழ் விதி 17(பி)-இன் படி ஒழுங்கு நடவடிக்கை நிலுவையில் உள்ள நிலையில் வயது முதிர்வு எய்திய ஊழியர்கள். 01.01.2026-க்கு முன்னதாகவே பணியிலிருந்து ஓய்வு பெற்றவர்கள் அல்லது விலகியவர்கள். குறிப்பு: ஒழுங்கு நடவடிக்கைக்கு உள்ளானவர்களுக்கும், இதர வழிகளில் விலகியவர்களுக்கும் தனி உத்தரவுகள் பின்னர் பிறப்பிக்கப்படும். முழுமையான டாப்ஸ் விதிகள் நடைமுறைக்கு வரும் வரை, தகுதியான ஊழியர்களுக்கான இடைக்கால மாதப் பணம் பின்வருமாறு கணக்கிடப்படும்: பணியில் இருந்து ஓய்வு பெற்ற ஊழியர் கடைசியாகப் பெற்ற அடிப்படைச் சம்பளத்தில் 30% (30% of Basic Pay) அல்லது ரூ. 10,000 (இவற்றில் எது அதிகமோ அது) இடைக்காலத் தொகையாக நிர்ணயிக்கப்படும். இத்துடன், நடப்பில் உள்ள 60% அகவிலை நிவாரணமும் (Dearness Relief - DR) சேர்த்து மாதந்தோறும் வழங்கப்படும். டாப்ஸ் திட்டத்தின் கீழ் இடைக்கால ஓய்வூதியம் பெற்று வந்த ஊழியர், 01.01.2026 அன்று அல்லது அதற்குப் பிறகு மரணமடைந்தால், அவரின் தகுதியான குடும்ப உறுப்பினருக்கு, அந்த ஊழியர் பெற்று வந்த இடைக்காலத் தொகையில் 60% (60% of interim monthly payout) குடும்ப ஓய்வூதியமாக வழங்கப்படும். பணியின் போது மரணமடைந்த ஊழியரின் (Death-in-harness) குடும்பத்தினருக்கான தொகை: டாப்ஸ் (TAPS) திட்டத்திலிருந்து வெளியேறுவதற்கான இருகட்ட தேர்வுகள் (Two-Stage Exit Option) முழுமையான டாப்ஸ் விதிகள் வெளியாகும் வரை காத்திருக்க விரும்பாத ஊழியர்கள் அல்லது அவர்களின் குடும்பத்தினர், CPS இறுதித் தீர்வுப் படிவத்தை (Form-III / IV) சமர்ப்பித்து உடனடியாக டாப்ஸ் திட்டத்திலிருந்து வெளியேறலாம். அவ்வாறு செய்யும் பட்சத்தில், அவர்களின் சிபிஎஸ் (CPS) கணக்கில் உள்ள ஊழியர் மற்றும் அரசின் பங்களிப்புத் தொகை, அதற்குரிய வட்டியுடன் நடப்பு சிபிஎஸ் விதிகளின்படி முழுமையாகத் தீர்வு செய்யப்படும். இந்தத் தேர்வு இறுதியானது மற்றும் மாற்ற முடியாதது (Irrevocable); இதற்குப் பிறகு டாப்ஸ் திட்டத்தின் எந்தவொரு பலனையும் அவர்கள் கோர முடியாது. தற்போது இடைக்கால ஓய்வூதியப் பலன்களைப் பெறும் ஊழியர்கள், டாப்ஸ் திட்டத்தின் விரிவான இறுதி விதிகள் அரசாங்கத்தால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட பிறகு, இத்திட்டத்திலேயே நிரந்தரமாக நீடிப்பதா அல்லது இதிலிருந்து வெளியேறி சிபிஎஸ் (CPS) கணக்குத் தொகையைப் பெற்றுக் கொள்வதா என்பதைத் தேர்வு செய்ய மீண்டும் ஒரு இறுதி வாய்ப்பு அளிக்கப்படும். நிதித்துறையின் உத்தரவில் குடும்ப ஓய்வூதியத்திற்குத் தகுதியான உறுப்பினர்கள் யார் யார் என்பது தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ளது: ஆண் ஊழியரின் மனைவி அல்லது பெண் ஊழியரின் கணவர். 25 வயதை எட்டாத மகன்கள் மற்றும் திருமணமாகாத மகள்கள் (சட்டப்பூர்வமாகத் தத்தெடுக்கப்பட்ட பிள்ளைகள் மற்றும் சட்டப்பூர்வமான திருமண பந்தத்திற்கு வெளியே பிறந்த பிள்ளைகளும் இதில் அடங்குவர்). வாழ்நாள் முழுவதும் சுயமாய் உழைத்து வாழ இயலாத அளவுக்குப் பார்வை குறைபாடு, மனநல பாதிப்பு, அறிவுசார் குறைபாடு அல்லது நடமாடும் திறன் குறைபாடு போன்ற உடல்/மன ரீதியான மாற்றுத்திறனுடைய பிள்ளைகள் (வயது வரம்பு இல்லை). 25 வயதைக் கடந்தும் திருமணமாகாத, விதவையான அல்லது விவாகரத்து பெற்ற மகள்கள் (அரசின் வருமான வரம்பு மற்றும் நிபந்தனைகளுக்கு உட்பட்டு வாழ்நாள் முழுவதும் தகுதியுடையவர்). திருமணமாகாத அரசு ஊழியர்களின் பெற்றோர் (தாய், தந்தை மற்றும் மாற்றாந்தாய் உட்பட). திருமணமாகாத ஊழியர்களின் சட்டப்பூர்வ தத்துப்பிள்ளைகள் மற்றும் பெற்றோர் இல்லாத பட்சத்தில், தங்களை முழுமையாகச் சார்ந்திருந்ததாக அறிவிக்கப்பட்ட உடன் பிறந்தவர்கள். இந்த இடைக்கால ஓய்வூதியப் பலனைப் பெற விரும்பும் ஊழியர்கள் அல்லது அவர்தம் குடும்பத்தினர், நிர்ணயிக்கப்பட்ட படிவத்தில் (Form-I/II) தங்கள் விருப்பப் பிரகடனத்தை வழங்க வேண்டும். ஏற்கனவே (01.01.2026-க்குப் பிறகு) ஓய்வு பெற்ற அல்லது மரணமடைந்த ஊழியர்களின் குடும்பத்தினர், இந்த அரசாணை வெளியான தேதியிலிருந்து 60 நாட்களுக்குள் விருப்பப் படிவத்தை சமர்ப்பிக்க வேண்டும். இனிமேல் ஓய்வு பெறப் போகும் ஊழியர்கள், ஓய்வு பெற்ற அல்லது மரணமடைந்த தேதியிலிருந்து 60 நாட்களுக்குள் இப்பெயரிலான விருப்பப் படிவத்தை அளிக்க வேண்டும். இந்த இடைக்காலப் பணப் பட்டுவாடாவானது, ஊழியர் பணியிலிருந்து விடுவிக்கப்பட்ட அல்லது மரணமடைந்த தேதிக்கு அடுத்த நாள் முதல் கணக்கிடப்பட்டு, நிலுவைத் தொகையுடன் (Arrears) தகுதியான நபர்களுக்கு வழங்கப்படும். டாப்ஸ் (TAPS) திட்டத்தின் விரிவான விதிகள் அறிவிக்கப்பட்டவுடன், இந்த இடைக்காலப் பலன்கள் யாவும் மறுபரிசீலனை செய்யப்பட்டு இறுதி ஓய்வூதியத் தொகையுடன் முழுமையாகச் சரிசெய்யப்படும். இடைக்காலத் தொகைக்கும் இறுதித் தொகைக்கும் இடையே ஏதேனும் வித்தியாசம் இருப்பின், அது நிலுவைத் தொகையாகவோ (Arrears) அல்லது திரும்பப் பெறுதலாகவோ (Recovery) வட்டியுடன் சரிசெய்யப்படும். தவறுதலாகத் தகுதியற்ற நபர்களுக்குப் பணம் வழங்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டால், அத்தொகை வட்டியுடன் முழுமையாக மீட்டெடுக்கப்படும். கணக்குத் தலைப்பு விவரங்களின்படி, இதற்கான நிதியானது இதர வைப்புத்தொகைகள் கணக்கின் கீழ் இயங்கும் "FO Pooled Corpus for Interim Payout" (IFHRMS Code: 8342 00 120 FO - 80101 / 80201) என்ற பிரத்யேக வைப்பு நிதியிலிருந்து எடுக்கப்பட்டு விநியோகிக்கப்படும். ஆளுநரின் ஆணைப்படி, தமிழக அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் எம்.ஏ.சித்திக் (M.A. SIDDIQUE) இந்த முக்கிய அரசாணையைப் பிறப்பித்துள்ளார். அரசின் இந்த அதிரடி நடவடிக்கை, டாப்ஸ் திட்டத்தின் இறுதி விதிகளுக்காகக் காத்திருக்கும் ஆயிரக்கணக்கான ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களின் குடும்பங்களுக்கு மிகப்பெரிய பொருளாதாரப் பாதுகாப்பையும், மன அமைதியையும் தந்துள்ளதாகப் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.இடைக்கால அரசாணையின் பின்னணியும் அவசியமும்
இந்தத் திட்டம் யாருக்கெல்லாம் பொருந்தும்? (தகுதி வரம்புகள்)
யாருக்கெல்லாம் பொருந்தாது?
இடைக்கால ஓய்வூதியக் கணக்கீடு எவ்வாறு அமையும்?
ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கான கணக்கீடு:
ஓய்வூதியதாரர் மரணமடைந்தால் குடும்பத்தினருக்கான தொகை:
பணியின் போது மரணமடைந்த ஊழியரின் குடும்பத்தினருக்கு வாழ்வாதார உதவியாக, தற்காலிக ஏற்பாட்டின் கீழ், அந்த ஊழியரின் கடைசி அடிப்படைச் சம்பளத்தில் 30% அல்லது ரூ. 10,000 (எது அதிகமோ அது) மற்றும் அதனுடன் 60% அகவிலை நிவாரணமும் சேர்த்து மாதந்தோறும் வழங்கப்படும்.
அரசு ஊழியர்கள் டாப்ஸ் திட்டத்தில் தொடர விரும்பவில்லை என்றால், அவர்கள் இத்திட்டத்திலிருந்து நிரந்தரமாக வெளியேற இரண்டு வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன:முதல் கட்டம் (Stage-I: உடனடி வெளியேறும் வாய்ப்பு):
இரண்டாம் கட்டம் (Stage-II: விதிகள் அறிவிக்கப்பட்ட பின் வெளியேறும் வாய்ப்பு):
"தகுதியான குடும்ப உறுப்பினர்" யார்?
விருப்பப் படிவம் சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு
நிதி ஒதுக்கீடும் இறுதி சரிசெய்தல்களும்