சென்னை: தமிழக காவல்துறையில் உதவி காவல் கண்காணிப்பாளர் (ASP) அந்தஸ்தில் உள்ள 15 ஐபிஎஸ் அதிகாரிகளை புதிய பணியிடங்களுக்கு மாற்றி தமிழக அரசு இன்று அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. தூத்துக்குடி ஊரக உதவி காவல் கண்காணிப்பாளராக அன்ஜித் நாயர், திருநெல்வேலி ஊரக உதவி காவல் கண்காணிப்பாளராக பிஸ்வாஜித் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மதுரை, நெல்லை உள்ளிட்ட 15 மாவட்டங்களில் 15 ஐபிஎஸ் அதிகாரிகளைக் காவல் உதவிக் கண்காணிப்பாளர்களை தமிழக அரசு நியமித்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசின் உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் கே. மணிவாசன் ஆணை வெளியிட்டுள்ளார்.
தூத்துக்குடி ஊரக உட்கோட்டத்தின் உதவிக் காவல் கண்காணிப்பாளராக அஞ்சித் ஏ.நாயர் நியமிக்கப்பட்டுள்ளார். பட்டுக்கோட்டை உட்கோட்டத்தின் உதவிக் காவல் கண்காணிப்பாளராக பி.அங்கிதா நியமனம் செய்யப்பட்டுள்ளார். நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு உட்கோட்டத்தின் உதவிக் காவல் கண்காணிப்பாளராக எஸ்.அஸ்வினி நியமிக்கப்பட்டுள்ளார். திருநெல்வேலி ஊரக உட்கோட்டத்தின் உதவிக் காவல் கண்காணிப்பாளராக பிஸ்வாஜித் பண்டா நியமனம் செய்யப்பட்டுள்ளார். கடலூர் மாவட்டம், சிதம்பரம் உட்கோட்டத்தின் உதவிக் காவல் கண்காணிப்பாளராக டிஜே. சத்ரிய கவின் நியமிக்கப்பட்டுள்ளார். திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் உட்கோட்டத்தின் உதவிக் காவல் கண்காணிப்பாளராக எஸ்.இன்பா நியமிக்கப்பட்டுள்ளார். திண்டுக்கல் உட்கோட்டத்தின் உதவிக் காவல் கண்காணிப்பாளராக பி.மஞ்சுமா நியமிக்கப்பட்டுள்ளார். நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் உட்கோட்டத்தின் உதவிக் காவல் கண்காணிப்பாளராக மண்ணம் சுஜித் சம்பத் நியமிக்கப்பட்டுள்ளார். தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி உட்கோட்டத்தின் உதவிக் காவல் கண்காணிப்பாளராக நீல் சர்மா நியமிக்கப்பட்டுள்ளார். ராமநாதபுரம் உட்கோட்டத்தின் உதவிக் காவல் கண்காணிப்பாளராக கே.நேகா நியமிக்கப்பட்டுள்ளார். நாகப்பட்டினம் உட்கோட்டத்தின் உதவிக் காவல் கண்காணிப்பாளராக பிரியங்கா பார்கவ் நியமிக்கப்பட்டுள்ளார். திருவண்ணாமலை ஊரக உட்கோட்டத்தின் உதவிக் காவல் கண்காணிப்பாளராக ராகுல் வி கோபால் நியமிக்கப்பட்டுள்ளார். விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் உட்கோட்டத்தின் உதவிக் காவல் கண்காணிப்பாளராக சைந்தானே ஸ்வப்னிலா அனில் நியமிக்கப்பட்டுள்ளார். மதுரை மாவட்டம், ஊமச்சிகுளம் உட்கோட்டத்தின் உதவிக் காவல் கண்காணிப்பாளராக தனூ சிங் நியமிக்கப்பட்டுள்ளார். மதுரை மாநகரம், அண்ணா நகர் சரகத்தின் உதவிக் காவல் கண்காணிப்பாளராக ஆஷிஷ் புனியா நியமிக்கப்பட்டுள்ளார்.