சென்னை: தமிழ்நாடு காவல்துறையில் 3 ஐ.பி.எஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து, தமிழ்நாடு அரசின் உள்துறைச் செயலாளர் கார்த்திக் உத்தரவிட்டுள்ளார்.
ஜோசப் விஜய் தலைமையிலான தவெக ஆட்சியில் காவல்துறையின் முக்கிய அதிகாரிகள் அவ்வப்போது இடமாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், 3 ஐ.ஜி ரேங்க் ஐபிஎஸ் அதிகாரிகள் தற்போது மாற்றப்பட்டுள்ளனர்.
அதன்படி, பொருளாதார குற்றப்பிரிவு ஐ.ஜி.யாக இருந்த சந்தோஷ்குமார் பணியிட மாற்றம் செய்யப்பட்டு, ரூபேஷ்குமார் மீனாவிற்கு பதிலாக குடிமைப் பொருள் வழங்கல் பிரிவு சி.ஐ.டி. ஐ.ஜி ஆக நியமனம் செய்யப்பட்டுள்ளார். குடிமைப் பொருள் வழங்கல் பிரிவு சி.ஐ.டி ஐ.ஜி ஆக இருந்த ரூபேஷ்குமார் மீனா, திருச்சி மாநகர காவல் ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். திருச்சி காவல் ஆணையராக இருந்த காமினி ஐ.பி.எஸ் காவல்துறை தலைமையக நிர்வாக ஐ.ஜி. ஆக நியமனம் செய்யப்பட்டுள்ளார். தமிழ்நாடு அரசின் உள்துறை முதன்மைச் செயலாளர் பிறப்பித்துள்ள இந்த உத்தரவைத் தொடர்ந்து, பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ள மூன்று மூத்த ஐபிஎஸ் அதிகாரிகளும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட புதிய பொறுப்புகளை உடனடியாக ஏற்றுக்கொள்ள உள்ளனர்.