பெண்களுக்கான கடன் வட்டி குறைப்பு.. தமிழக அரசு வெளியிட்ட ‘ஜாக்பாட்’ அறிவிப்பு!

  • சென்னை: வெற்றி மகளிர் தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்டம் மூலம் ரூபாய் 500 கோடி கடன் வழங்கவுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இதன் கீழ் வட்டி விகிதம் ஆண்டுக்கு 10.20%-ல் இருந்து 9.95% ஆக குறைக்கப்பட்டுள்ளது.

    Advertisement

    பெண்களின் முன்னேற்றத்திற்காக மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு திட்டத்தை செயல்படுத்தி வருகின்றன. அந்த வகையில் பெண்கள் சுயமாக முன்னேற்ற வேண்டும் என்பதற்காக மானிய கடன் உதவி திட்டம், சுய வேலைவாய்ப்பு உதவி திட்டம் என பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    Advertisement

    பெண் தொழில் முனைவோர்கள் எளிதாக தொழில் கடன் உதவி பெற தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் மூலம் இத்திட்டத்தின் கீழ் ரூ.500 கோடி கடனுதவி வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும், இதன் கீழ் வட்டி விகிதம் ஆண்டுக்கு 10.20%-ல் இருந்து 9.95% ஆக குறைக்கப்பட்டுள்ளது.

    இது தொடர்பாக தொழில் துறை அமைச்சர் கீர்த்தனா வெளியிட்ட அறிவிப்பில், தமிழ்நாட்டில் மகளிர் தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் விதமாக "வெற்றி மகளிர் தொழில் முனைவோர் மேம்பாட்டுத் திட்டம்" என்ற புதிய திட்டத்தின் மூலம் தொழில் முனைவோர்களுக்கு தொழில் முனைவோர் மேம்பாட்டு பயிற்சி வழங்கி, குறைந்த வட்டி விகிதத்தில் கடன் உதவி, கடன் பங்களிப்பு தொகையில் சலுகை மற்றும் பிணையச் சொத்து வழங்குதலில் சலுகை ஆகிய உதவிகளுடன் மகளிர் தொழில் முனைவோர்கள் எளிதாக தொழில் கடன் உதவி பெற வழி வகை செய்யப்படும். தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் மூலம் இத்திட்டத்தின் கீழ் ரூ.500 கோடி கடனுதவி வழங்கப்படும். 500-க்கும் மேற்பட்ட மகளிர் தொழில் முனைவோர்கள் பயன்பெறுவார்கள்.

    Advertisement

    தமிழ்நாட்டில் மகளிர் தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் விதமாக புதிய குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களை நிறுவுவதற்கும், ஏற்கனவே உள்ள மகளிர் தொழில் நிறுவனங்களை விரிவுபடுத்துவதற்கும் நவீனமயமாக்குவதற்கும் நடப்பு நிதியாண்டில் மற்றும் தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் "வெற்றி மகளிர் தொழில்முனைவோர் மேம்பாட்டுத் திட்டம்" மூலம் மகளிர் தொழில்முனைவோருக்கு தொழில்முனைவோர் மேம்பாட்டு பயிற்சி வழங்கி, தொழில்முனைவோரின் பங்களிப்பு 35 சதவீதத்திலிருந்து 20 சதவீதமாகவும், பிணையச் சொத்து 50 சதவீதத்திலிருந்து 40 சதவீதமாகவும் மற்றும் வட்டி விகிதம் ஆண்டுக்கு 10.20 சதவீதத்திலிருந்து 9.95 சதவீதமாகவும் தளர்வு செய்யப்பட்டு, எளிய முறையில் தொழில்முனைவோர்களுக்கு மகளிர் கடனுதவி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Advertisement

    மேலும் நடப்பாண்டில், "வெற்றி மகளிர் தொழில்முனைவோர் மேம்பாட்டுத் திட்டத்தின்" மூலம் தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகத்தால் 500 கோடி மதிப்பிலான கடனுதவி வழங்கப்படும். இதன் மூலம் 500-க்கும் மேற்பட்ட மகளிர் தொழில் முனைவோர்களால் நிர்வகிக்கப்படும் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் பயன்பெறுவதோடு, 3,500-க்கும் மேற்பட்ட புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் எனவும் அமைச்சர் கீர்த்தனா தெரிவித்துள்ளார்.

    இது மட்டுமில்லாமல் நாமக்கல் மாவட்டத்தில், ரூ.1,000 கோடி முதலீடு ஈர்ப்பதுடன், 3,500 புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில் லத்துவாடி பகுதியில், சுமார் 245 ஏக்கர் நிலப்பரப்பில் சிப்காட் தொழிற்பூங்கா அமைக்கப்படும், விழுப்புரம் மாவட்டத்தில், ரூ.1,000 கோடி முதலீடு ஈர்ப்பதுடன், 3,200 புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில் ஓமந்தூர் பகுதியில் சுமார் 229 ஏக்கர் நிலப்பரப்பில் சிப்காட் தொழிற்பூங்கா அமைக்கப்படும் எனவும் அறிவித்துள்ளார்.

    English Summary

    Tamil Nadu government has announced that loans amounting to ₹500 crore will be provided under the Vettri Women Entrepreneurs Development Scheme. Under this scheme, the annual interest rate has been reduced from 10.20% to 9.95%.