கோழி வளர்த்தே கோடீஸ்வரர் ஆகலாம்.. பாதிக்குப் பாதி மானியம்! தமிழக அரசு தரும் சூப்பர் வாய்ப்பு!

  • சென்னை: கிராமபுறங்களில் சிறிய அளவிலான நாட்டுக் கோழிப்பண்ணை 50% மானியத்தில் நிறுவ விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது எனவும், விதவைகள், ஆதரவற்றோர், திருநங்கைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

    Advertisement

    இதுதொடர்பாக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில்," 2026-27-ஆம் நிதியாண்டில் கிராமப்புறங்களில் சிறிய அளவிலான (250 கோழிகள் / அலகு) நாட்டுக் கோழிப்பண்ணை நிறுவ 50% மானியம் (ரூ.1,47,175/-) வழங்கும் திட்டம் செயல்படுத்துவது தொடர்பான விவரங்கள் மற்றும் வழிமுறைகள் கீழ்கண்டவாறு தெரிவிக்கப்படுகிறது.

    Advertisement

    நாட்டுக்கோழி வளர்ப்பு பண்ணைகளை நிறுவுவதற்கு தேவையான கோழி கொட்டகை கட்டுமானச் செலவு மற்றும் 4 மாதங்களுக்கு தேவையான தீவன செலவு ஆகியவற்றிற்கான மொத்த செலவில் 50% மானியம் மாநில அரசால் வழங்கப்படும். திட்டத்தின் மீதமுள்ள 50% பங்களிப்பை வங்கி மூலமாகவோ (அ) தனது சொந்த ஆதாரங்கள் மூலமாகவோ பயனாளி திரட்ட வேண்டும்.

    ஒவ்வொரு பயனாளிக்கும் 250 எண்ணிக்கையிலான 4 வார வயதுடைய நாட்டுக்கோழி குஞ்சுகள் மாவட்ட கால்நடை பண்ணையிலிருந்து 50% மானிய விலையில் வழங்கப்படும். பயனாளிகளிடம் கோழி கொட்டகை கட்ட குறைந்தபட்சம் 625 சதுர அடி நிலம் இருக்க வேண்டும். இந்தப் பகுதி மனித குடியிருப்பு மற்றும் நீர்நிலைகளிலிருந்து விலகி இருக்க வேண்டும்.

    Advertisement

    மேலும் பயனாளி அந்த கிராமத்தில் நிரந்தரமாக வசிப்பவராக இருக்க வேண்டும். விதவைகள், ஆதரவற்றோர், திருநங்கைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும். 2023-24, 2024-25 மற்றும் 2025-26 ஆகிய ஆண்டிற்கான நாட்டுக்கோழி வளர்ப்பு திட்டத்தின்கீழ் பயனடைந்த பயனாளிகளாகவோ அல்லது அவரது குடும்பத்தினரோ பயனடைந்திருக்கக் கூடாது. கட்டுமானப்பணிகள் மற்றும் தீவனம் போன்ற அனைத்து செயல்முறைகளும் பயனாளியால் செய்யப்பட வேண்டும்.

    மேலும், விண்ணப்பிக்கும் நபர் ஆதார் அட்டை நகல், பண்ணை அமையவிருக்கும் இடத்திற்கான சிட்டா / அடங்கல் நகல், 50% தொகை அளிப்பதற்கான ஆதார ஆவணங்கள் (வங்கி இருப்பு விவரம் / வங்கி கடன் ஒப்புதல் விவரம்) 3 வருடத்திற்கு பண்ணையை பராமரிப்பதற்கான உறுதிமொழி, 2023-24, 2024-25 மற்றும் 2025-26 ஆகிய ஆண்டிற்கான நாட்டுக்கோழி வளர்ப்பு திட்டத்தின் கீழ் பயனடையவில்லை என்பதற்கான சான்றிதழ் ஒப்படைக்க வேண்டும்.

    Advertisement

    மேற்படி திட்டத்தில் நாட்டுக்கோழி வளர்ப்பில் ஆர்வமுள்ளவர்கள் தங்களுக்கு அருகாமையிலுள்ள கால்நடை மருந்தக, கால்நடை உதவி மருத்துவரை அணுகி பயன்பெறலாம்" என அறிவிக்கப்பட்டுள்ளது.

    English Summary

    Tamil Nadu offers 50% subsidy up to ₹1.47 lakh for 250-bird country chicken farms, prioritising widows, transgender persons and disabled applicants.