மூடப்பட்ட டாஸ்மாக் கடைகளில் பணியாற்றியவர்களுக்கு மாற்றுப்பணி.. முதல்வர் விஜய் அதிரடி

  • சென்னை: தமிழக முதல்வர் விஜய் கல்வி அலுவலங்கள், கோயில்கள் அருகே இருக்கும் 717 டாஸ்மாக் மதுபான கடைகளை மூட உத்தரவிட்டு இருந்தார். இதில் அங்கு பணியாற்றும் ஊழியர்களுக்கு மாற்றுப்பணி வழங்க வேண்டும் என தொடர்ந்து அரசுக்கு கோரிக்கை வைத்து வந்தனர். இந்த நிலையில் மூடப்படும் கடைகளில் பணியாற்றும் டாஸ்மாக் ஊழியர்களுக்கு மாற்றுப்பணி வழங்க முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.

    Advertisement

    தமிழகத்தில் மூடப்பட்ட டாஸ்மாக் மதுக்கடைகளில் பணியாற்றிய பணியாளர்களுக்கு மாற்றுப்பணி வழங்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. குறிப்பாக மதுக்கடைகளில் பணியிடங்களை நிரப்புவதுடன், டாஸ்மாக் குடோன்கள் மற்றும் அலுவலகப் பணிகளிலும் ஊழியர்களை நியமிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    Advertisement

    தமிழக முதல்வராக விஜய் பொறுப்பேற்றதும் 717 டாஸ்மாக் மதுபான கடைகளை மூட உத்தரவு பிறப்பித்தார். பள்ளிகள், பேருந்து நிலையங்கள், கோவில்கள் ஆகியவற்றிற்கு அருகாமையில் உள்ள டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என்று விஜய் உத்தரவிட்டார். இதையடுத்து, அதற்கான கணக்கெடுப்பு பணிகள் தொடங்கி நடைபெற்றது. வழிபாட்டு தலங்களுக்கு 500 மீட்டர் தூரத்திற்குள் உள்ள கடைகள் மூடப்பட்டு வருகிறது.

    அதேநேரத்தில் டாஸ்மாக் கடைகள் மூடப்படுவதால் அதில் பணியாற்றும் ஆயிரக்கணக்கான ஊழியர்களுக்கு மாற்றுப்பணி வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இந்த கோரிக்கையை வலியுறுத்தி டாஸ்மாக் ஊழியர்கள் போராடவும் செய்தனர். இந்த நிலையில்தான், மூடப்படும் கடைகளில் பணியாற்றும் டாஸ்மாக் ஊழியர்களுக்கு மாற்றுப்பணி வழங்க முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.

    Advertisement

    இது தொடர்பாக தமிழக அரசின் உத்தரவில் கூறியிருப்பதாவது:- மூடப்பட்ட கடைகளில் பணிபுரிந்த கடைப்பணியாளர்களை பணிமூப்பு அடிப்படையில் பட்டியல் தயார் செய்து, மூடப்பட்ட கடைகளுக்கு அருகிலுள்ள மதுபான சில்லறை விற்பனை கடைகளில் விற்பனை கூடுதல் ஏற்படும் மதுபான கடைகளில் மூடப்பட்ட கடைப்பணியாளர்களை பணிமூப்பின் அடிப்படையில் பணிநிரவல் செய்யப்படவேண்டும்.

    மூடப்பட்ட கடைப்பணியாளர்களில் எஞ்சிய பணியாளர்களை காலி பணியிடம் உள்ள மதுபான சில்லறை விற்பனை கடைகளில் பணிநிரவல் செய்திடவும், மீதமுள்ள பணியாளர்கள் கையிருப்பில் இருந்தால் அப்பணியாளர்களை கிடங்கு பணிகளிலும் மாவட்ட அலுவலக பணிகளிலும் இப்பணியாளர்களை பணிநிரவல் செய்திட அனைத்து மாவட்ட மேலாளர்களை அறிவுறுத்தப்படுகிறார்கள்"என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    English Summary

    TASMAC: The Tamil Nadu government is taking steps to provide alternative jobs to employees affected by the closure of TASMAC liquor shops across the state. Authorities are planning to appoint workers in existing TASMAC outlets, warehouses, and administrative offices to ensure continued employment opportunities.