தமிழகத்தில் 13 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்.. வெயிட்டிங் லிஸ்டில் இருந்த ஸ்டாலின் ஐபிஎஸ்க்கு பொறுப்பு

  • சென்னை: தமிழகத்தில், 13 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. சேலம் மாநகர காவல் ஆணையராக உள்ள ஜோசி நிர்மல் குமார் காவல்துறை நவீனமாயக்கல் ஐஜியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். சென்னை மாநகர காவல்துறை கூடுதல் ஆணையர் ஏஜி பாபு சேலம் மாநகராக காவல் ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    Advertisement

    இதே போன்று சேலம் சரக டிஐஜி சந்தோஷ் ஹடிமானி சென்னை பெருநகர உளவுப் பிரிவு இணை ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். லஞ்ச ஒழிப்புத்துறை டிஐஜி தேவராணி சேலம் சரக டிஐஜியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். கோவை பயங்கரவாத தடுப்புப் பிரிவு எஸ்பி பத்ரிநாராயனன் அடையாறு துணை ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். சென்னையில் பொருளாதார குற்றிப் பிரிவு எஸ்பியாக ஆர்.ஸ்டாலின் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    Advertisement

    13 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்

    நிர்வாக காரணங்களுக்காக காவல்துறையில் அவ்வப்போது உயர் பதவியில் இருக்கும் ஐபிஎஸ் அதிகாரிகள் முதல் சப் - இன்ஸ்பெக்டர் ரேங்கில் உள்ளவர்கள் வரை பணியிட மாற்றம் செய்யப்படுவது வழக்கம். அந்த வகையில், தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 13 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். சேலம் கமிஷனர் ஜோஷி நிர்மல்குமார், ஏ.ஜி.பாபு, தேவராணி, பத்ரிநாராயணன் உள்ளிட்டோர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

    ஜோஷி நிர்மல்குமார், ஏ.ஜி.பாபு, தேவராணி..

    சேலம் போலீஸ் கமிஷனராக பணியாற்றிய ஜோஷி நிர்மல்குமார், சென்னை நவீனமயமாக்கல் பிரிவு ஐ.ஜி.யாக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
    சென்னை தலைமையக கூடுதல் கமிஷனராக பணியில் உள்ள ஏஜி பாபு, சேலம் போலீஸ் கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார்.

    Advertisement

    சென்னை லஞ்ச ஒழிப்பு பிரிவு டி.ஐ.ஜி.யாக உள்ள தேவராணி, சேலம் சரக டி.ஐ.ஜி.யாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
    சேலம் சரக டி.ஐ.ஜி.யாக பணியாற்றி வரும் சந்தோஷ் ஹதிமானி, சென்னை உளவுப்பிரிவு இணை கமிஷனராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

    சீனிவாசன், கார்த்திகேயன்..

    கோவை பயங்கரவாதிகள் தடுப்புப்பிரிவு சூப்பிரண்டாக உள்ள பத்ரிநாராயணன், சென்னை அடையாறு துணை கமிஷனராக மாற்றப்பட்டுள்ளார்.
    காத்திருப்போர் பட்டியலில் இருக்கும் கார்த்திகேயன், சீருடை பணியாளர் தேர்வாணைய சூப்பிரண்டாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    பரங்கிமலை துணை கமிஷனராக உள்ள சீனிவாசன், சென்னை போதைப்பொருள் தடுப்புப் பிரிவு சூப்பிரண்டாக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
    சென்னை போதைப்பொருள் தடுப்புப்பிரிவு சூப்பிரண்டாக பணியாற்றி வரும் மதிவாணன் பரங்கிமலை துணை கமிஷனராக பதவியேற்க உள்ளார்.

    Advertisement

    சீருடை பணியாளர் தேர்வாணைய சூப்பிரண்டாக பணியாற்றும் கே. ஸ்டாலின், சி.பி.சி.ஐ.டி. தென்மண்டல சூப்பிரண்டாக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
    சென்னை வண்ணாரப்பேட்டை துணை கமிஷனராக பணியாற்றி வரும் வி.பாஸ்கரன், சேலம் வடக்கு துணை கமிஷனராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

    அங்கித்சிங், ஆர். ஸ்டாலின்..

    சென்னை பாதுகாப்பு பிரிவு துணை கமிஷனராக பணியாற்றி வரும் சுந்தரவடிவேல், சென்னை நலப்பிரிவு துணை கமிஷனராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
    சேலம் வடக்கு துணை கமிஷனராக உள்ள அங்கித்சிங், சென்னை வண்ணாரப்பேட்டை துணை கமிஷனராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
    காத்திருப்போர் பட்டியலில் உள்ள டாக்டர் ஆர். ஸ்டாலின், சென்னை பொருளாதார குற்றப்பிரிவு வடக்கு மண்டல சூப்பிரண்டாக நியமிக்கப்பட்டுள்ளார்.. என்று கூறப்பட்டுள்ளது.

    English Summary

    IPS officers transferred: The Tamil Nadu government has issued orders transferring 13 IPS officers. Joshi Nirmal Kumar, currently the Salem City Police Commissioner, has been transferred as the Inspector General (IG) of Police Modernisation. A.G. Babu, Additional Commissioner of the Chennai City Police, has been appointed as the Salem City Police Commissioner.