ஜிஎஸ்டி வருவாய் வீழ்ச்சி.. “தவெக அரசு பதில் சொல்லவேண்டும்”.. தங்கம் தென்னரசு எழுப்பிய கேள்வி!

  • சென்னை: "3 மாதங்களாகத் தொடர்ந்து சரியும் தமிழ்நாட்டின் ஜிஎஸ்டி வருவாய், செப்டம்பரில் மட்டும் 5% வீழ்ச்சியடைந்துள்ளது. தமிழ்நாட்டின் உள்நாட்டு பொருளாதாரம் ஏன் தேய்கிறது என்பதற்கு தவெக அரசு பதில் சொல்ல வேண்டும்" என திமுக முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு வலியுறுத்தியுள்ளார்.

    Advertisement

    தமிழ்நாட்டில் கடந்த ஜூலை முதல் செப்டம்பர் வரையில் மாதாந்திர சரக்கு மற்றும் சேவை வரி (GST) வசூல் முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் தொடர்ந்து குறைந்து வருவதாக அண்மையில் குற்றச்சாட்டு எழுந்தது. கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் இந்த ஆண்டு ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் ஜிஎஸ்டி வசூல் 1 சதவிகிதமும் செப்டம்பர் மாதம் 5 சதவிகிதமும் குறைந்ததாக சொல்லப்பட்டது.

    Advertisement

    இதுதொடர்பாக முன்னாள் நிதி அமைச்சகர் தங்கம் தென்னரசு தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "ஒரு மாநிலத்தில் வசூலிக்கப்படும் மொத்த ஜிஎஸ்டி என்பது, அதன் மொத்த பொருளாதார நடவடிக்கைகளை பிரதிபலிப்பதாகும். எனவே, மாநிலத்திற்குள் நடைபெறும் பொருட்கள் மற்றும் சேவைகளின் பரிவர்த்தனைகள் தொடர்ந்து குறைவது குறித்தும், உள்நாட்டு பொருளாதாரச் செயல்பாடுகள் குறித்தும் இதனால் முக்கியமான கேள்விகள் எழுகின்றன.

    வரி விகிதக் குறைப்புக்குப் பிறகும் இந்தச் சரிவு தொடர்கிறது. ஆனால், உண்மையான பொருளாதார நிலையைப் பேசாமல் 'Post Settlementக்குப் பிறகு 17% உயர்வு ஏற்பட்டுள்ளது என்ற கணக்கை மட்டும் முன்வைத்து சமூக வலைதளங்களில் பல காணொளிகளைக் கொண்டு சிலர் இதை நியாயப்படுத்தி வருகின்றனர்.

    Advertisement
    தமிழகத்தில் தொடர்ந்து ஜிஎஸ்டி வரி வசூல் சரிவு.. நிர்வாக கோளாரின் அடையாளம்.. தங்கம் தென்னரசு

    17% பிந்தைய வருவாய் உயர்வைக் காட்டிக் குழப்புவது உண்மையை மறைக்காது. மாநிலத்திற்குள் வரி வசூல் ஏன் தொடர்ந்து குறைகிறது என்பதற்கு பதில் சொல்லாமல், வெளிமாநிலங்களில் இருந்தும் இறக்குமதி மூலமாகவும் பெறப்படும் பொருட்கள் மீதான IGST வருவாய் எண்ணிக்கையைக் காட்டுவது எந்த வகையிலும் நமது மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சி நிலைக்கான முழுமையான விளக்கம் அல்ல!

    வருவாய் எண்ணிக்கைகளில் விளையாடுவதை விட்டுவிட்டு, தமிழ்நாட்டின் உள்நாட்டு பொருளாதாரம் ஏன் தேய்கிறது என்பதற்கு தவெக அரசு பதில் சொல்ல வேண்டும்!" என்று தெரிவித்துள்ளார்.

    English Summary

    “Tamil Nadu’s GST revenue, which has been steadily declining for three months, fell by 5% in September alone. The TVK government must explain why Tamil Nadu’s domestic economy is shrinking,” urged former DMK Minister Thangam Thennarasu.