தமிழகத்துக்கு அதிகரித்த காவிரி நீர்.. போராட்டத்துக்கு நடுவே மனம் மாறிய கர்நாடகா? என்ன நடக்கிறது?

  • சென்னை: காவிரியில் தமிழகத்துக்கு 15 நாட்களுக்கு தினமும் 3,500 கனஅடி தண்ணீரை திறந்து விட வேண்டும் எனறு காவிரி மேலாண்மை ஆணையம் கர்நாடகாவிற்கு உத்தரவிட்டுள்ளது. ஆனால் தண்ணீர் திறக்க கர்நாடகா மறுத்து வரும் சூழலில் திடீரென்று ஒகேனக்கல்லுக்கு வரும் நீர் வரத்து அதிகரித்துள்ளது.

    Advertisement

    தமிழகம் - கர்நாடகா இடையே காவிரி நீர் பங்கீட்டு கொள்வதில் பிரச்சனை உள்ளது. தமிழகத்துக்கு 15 நாட்கள் தலா 3,500 கனஅடி தண்ணீர் திறக்க வேண்டும் என்று காவிரி நீர் ஒழுங்காற்று குழு பரிந்துரையை காவிரி மேலாண்மை ஆணையம் ஏற்று உத்தரவிட்டது.

    Advertisement

    ஆனால், தமிழகத்திற்கு காவிரியில் தண்ணீர் திறக்க எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகாவில் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. விவசாய அமைப்பினர், கன்னட அமைப்பினர் தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க கூடாது என்று போர்க்கொடி உயர்த்தி உள்ளனர். அதோடு ஆகஸ்ட் 13ம் தேதி கர்நாடகாவில் பந்த் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் தான், தற்போது கர்நாடகாவின் காவிரி ஆற்றில் இருந்து தமிழகத்துக்கு வரும் தண்ணீரின் அளவு அதிகரித்துள்ளது. ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நேற்று வரை 150 கனஅடிதண்ணீர் வந்து கொண்டிருந்தது. இந்த அளவு தற்போது அதிகரித்துள்ளது. இன்று காலை நிலவரப்படி ஒகேனக்கல் காவிரி ஆற்றுக்கான நீர்வரத்து 500 கனஅடியாக அதிகரித்துள்ளது.

    Advertisement

    நேற்றைய தினம் கர்நாடகா முதல்வர் டிகே சிவக்குமார் அளித்த பேட்டியில், ''தற்போது தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க முடியாத நிலை உள்ளது'' என்று கூறினார். இப்படியான சூழலில் தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளது. இதனால் கர்நாடகா மனம்மாறியதா என்ற கேள்வி பலருக்கும் எழுந்துள்ளது.

    அதாவது கர்நாடகா மனம்மாறி தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விட்டதா? என்று பலருக்கும் கேள்வி எழுந்துள்ளது. இதற்கு விடை என்னவென்றால் கர்நாடகா இன்னும் மனம் மாறவில்லை. தமிழகத்துக்கு தண்ணீர் திறக்கவில்லை என்பது தான். ஏனென்றால் தமிழகத்துக்கு கடந்த மாதம் 29ம் தேதியே 3,500 கனஅடி தண்ணீரை திறக்க வேண்டும் என்று காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டது. ஆனால் அதனை தற்போது வரை கர்நாடகா நிறைவேற்றவில்லை. தமிழகத்துக்கு தண்ணீர் திறக்கவில்லை.

    Advertisement

    மாறாக தற்போது தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் வரத்து அதிகரிக்க முக்கிய காரணம் அங்கு பெய்த கனமழை தான். நேற்று இரவில் கர்நாடகாவில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகள் மற்றும் கர்நாடகாவில் ஓடும் காவிரி ஆற்றை சுற்றிய பகுதிகளில் கனமழை பெய்தது. இந்த கனமழையின் காரணமாக தான் வழிந்தோடி காவிரியில் சேர்ந்த நீரால் தான் தமிழகத்துக்கு அதிகளவிலான தண்ணீர் வந்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது. தற்போதைய சூழலில் குடகு, சிக்கமகளூர், ஹாசன் உள்ளிட்ட காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    English Summary

    The Cauvery Water Management Authority has ordered Karnataka to release 3,500 cubic feet of water daily to Tamil Nadu for the next 15 days, starting today. However, amidst Karnataka's refusal to release the water, there has been a sudden increase in the inflow of water at Hogenakkal.