தமிழ்நாட்டை போலீஸ் ஸ்டேட்டாக மாற்ற முயற்சி! தவெக அரசின் அரசாணையை கடுமையாக கண்டித்த கம்யூனிஸ்ட் எம்பி

  • சென்னை: சட்டம் ஒழுங்கு விவரங்களை ஆர்.டி.ஐ சட்டத்தில் வராமல் விலக்கு அளிப்பது, தமிழ்நாட்டை 'போலீஸ் ஸ்டேட்டாக' மாற்றத் துணியும் வெளிப்படையான முயற்சி என சிபிஎம் சு வெங்கடேசன் எம்பி அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், ஆர்.டி.ஐ சட்டத்திலிருந்து பொதுத்துறையின் சட்டம் ஒழுங்கு விவகாரங்களுக்கு விலக்கு அளிக்கும் உத்தரவை உடனடியாக அரசு திரும்பப்பெற வேண்டும்" எனவும் கூறியுள்ளார்.

    Advertisement

    தமிழக அரசின் பொதுத் துறையின் கீழ் இயங்கும் மிக முக்கியமான பிரிவான பொது சட்டம் - ஒழுங்கு துறைக்கு, தகவல் அறியும் உரிமை (ஆர்.டி.ஐ) சட்டத்தில் இருந்து முழு விலக்கு அளித்து அதிகாரப்பூர்வ அரசாணையானது வெளியிடப்பட்டுள்ளது. இதன் படி, இனிமேல் சட்டம் ஒழுங்கு, காவல் துறை நிர்வாகம் மற்றும் மாநில பாதுகாப்பு தொடர்பான பல்வேறு முக்கியமான விவரங்களை RTI சட்டம் மூலம் மக்கள் கேட்டுப் பெற முடியாது.

    Advertisement

    தவெக அரசு வெளிப்படைத்தன்மையுடன் செயல்படும் என விஜய் கூறி வரும் நிலையில், வெளிப்படைத்தன்மையைக் காக்கும் ஒரு சட்டத்தில் இப்படி ஒரு கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருப்பது கடும் விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது. சிபிஎம் சு வெங்கடேசன் எம்பியும் இவ்விகாரத்தில் அரசுக்கு கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளார். மேலும் இது தமிழ்நாட்டை "போலீஸ் ஸ்டேட்டாக" மாற்றத்துணியும் வெளிப்படையான முயற்சி என தெரிவித்துள்ளார்.

    சு வெங்கடேசன் கூறியிருப்பதாவது:- "தகவல் அறியும் உரிமைச் சட்டத்திலிருந்து பொதுத்துறையின் சட்டம் ஒழுங்கு விவகாரங்களுக்கு மட்டும் விலக்களிக்கப்பட்டுள்ளது. இடதுசாரி அமைப்புகளைக் கண்காணிக்க அரசு அதிகாரிகள் உத்தரவிடுகிறார்கள். காவல் மரணங்கள் நடக்கின்றன. மாணவர் போராட்டங்களை ஒடுக்க கல்வித்துறைக்கு உத்தரவிடப்பட்டுகிறது.

    Advertisement

    கல்லூரி வளாகங்களுக்குள் புகுந்து மாணவர்களைக் கைது செய்கிறது காவல் துறை. நியாயமான உரிமைக்கான போராட்டங்கள் வன்முறை கொண்டு ஒடுக்கப்படுகிறது. இந்நிலையில் சட்டம் & ஒழுங்கு விவகாரங்களுக்கு தகவல் அறியும் உரிமைச் சட்டத்திலிருந்து விலக்களிப்பது கடும் கண்டனத்துக்குரியது. இது தமிழ்நாட்டை "போலீஸ் ஸ்டேட்டாக" மாற்றத்துணியும் வெளிப்படையான முயற்சி. இந்த உத்தரவை உடனடியாக அரசு திரும்பப்பெற வேண்டும்." என்று கூறியுள்ளார்.

    English Summary

    CPM MP Su Venkatesan has urged the Tamil Nadu government to immediately withdraw its order exempting law and order-related information in the public sector from the RTI Act, alleging that the move could turn Tamil Nadu into a “police state.”