23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்!

  • சென்னை: விஜய் முதலமைச்சராக பொறுப்பேற்று 23 நாட்கள் நிறைவடைந்திருக்கும் நிலையில், தமிழகத்தில் இந்த காலத்தில் மட்டும் சுமார் 20 பாலியல் வன்கொடுமைகள் சம்பவங்கள் நடந்திருக்கின்றன. சட்டம் ஒழுங்கு விஷயத்தில் திமுக ஆட்சியை குறை சொல்லிதான் விஜய் ஆட்சியை பிடித்தார். இப்படி இருக்கையில் அதிகாரத்திற்கு வந்த பின்னரும் ஏன் சட்டம் ஒழுங்கை கட்டுப்படுத்த முடியவில்லை? என்ன பிரச்சனை? விஜய் கோட்டைவிட்ட இடம் எது என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

    சென்னையில் தெருவில் நடந்து சென்ற மூதாட்டியை வட மாநிலத்து இளைஞர்கள் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தது, கோவை சிறுமி பாலியல் வன்கொடுமை கொலை, சென்னையில் காவல்துறையினரால் சிறுவனுக்கு நடந்த பாலியல் வன்கொடுமை என குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இதை தடுக்க முடியாமல் அரசு திணறுவது ஏன்? என எதிர்க்கட்சிகள் சரமாரியாக கேள்வி எழுப்பி வருகின்றன.

    1. ஸ்பெஷல் டீம்கள் கலைப்பு
    2. எஸ்.ஆர் அலர்ட் மெசேஜில் சொதப்பல்

    இந்த இரண்டு காரணங்களால்தான் தமிழகத்தில் காவல்துறையால் சட்டம் ஒழுங்கை முழுமையாக கன்ட்ரோல் செய்ய முடியாததற்கான காரணம் என்று சொல்லப்படுகிறது.

    ஸ்பெஷல் டீம்கள்

    தமிழ்நாட்டின் ஒவ்வொரு மாவட்டத்திலும் குற்றவாளிகளை விரைந்து பிடிக்கவும், ரவுடிசத்தை ஒடுக்கவும், திருட்டு மற்றும் கொலைக் குற்றங்களைத் தடுக்கவும் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அல்லது கூடுதல் அதிகாரிகள் தலைமையில் சிறப்புப் படைகள் இயங்கி வந்தன. இந்தச் சிறப்புப் படைகள் உள்ளூர் காவல் நிலைய எல்லைகளைத் தாண்டி, மாவட்ட அளவில் ரகசியத் தகவல்களைச் சேகரித்து அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வந்தன.

    மடப்புரம் அஜித்குமார் படுகொலை

    எனவே மாநிலம் முழுவதும் இந்த டீமுக்கு சோர்ஸ் மற்றும் அதிகாரம் அதிக அளவில் இருந்தது. ஆனால், அதிகாரம் எங்கு குவிந்து இருக்கிறதோ அங்குதான் பிரச்சனைகளும் இருக்கும். அப்படித்தான் இந்த ஸ்பெஷல் டீம் விஷயத்திலும் நடந்தது. அதாவது, சிவகங்கை மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் காவலாளி அஜித்குமார் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்குப் பிறகு, இந்தச் சிறப்புப் படைகளின் செயல்பாடுகள் குறித்துப் பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன. அதிகார துஷ்பிரயோகத்தில் சிறப்புப் படை ஈடுபட்டதாக புகார் வந்தது.

    சிறப்பு படைகள் கலைப்பு

    சில மாவட்டங்களில் இத்தகைய சிறப்புப் படைகளில் இருக்கும் காவலர்கள் தங்களின் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துவதாகவும், உள்ளூர் காவல் நிலைய அதிகாரிகளுக்குத் தெரியாமல் தன்னிச்சையாகச் செயல்படுவதாகவும், கட்டப்பஞ்சாயத்து உள்ளிட்ட புகார்களில் சிக்கியதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதன் விளைவாக, காவல்துறையின் நற்பெயரைக் காக்கவும், நிர்வாகத்தை முறைப்படுத்தவும் அந்தந்த மாவட்டங்களில் இருந்த தற்காலிக சிறப்புப் படைகள் கலைக்கப்பட்டு, அவர்கள் மீண்டும் வழக்கமான சட்டம் ஒழுங்கு பணிக்குத் திருப்பி அனுப்பப்பட்டனர்

    மறுபுறம் டி.எஸ்.ஆர் எனப்படும் அலர்ட் மெசேஜுகளில் உண்மைத்தன்மை இல்லாதது, சட்டம் ஒழுங்கு குறித்த கிரவுண்ட் ரிப்போர்ட் காவல்துறை தலைமைக்கு தெரியாமல் போவதற்கு காரணமாக அமைந்துவிட்டது.

    டி.எஸ்.ஆர் அலர்ட்

    தினசரி சூழ்நிலை அறிக்கையைதான் டி.எஸ்.ஆர் என்று சொல்வார்கள். ஒவ்வொரு மாவட்டத்திலும் கடந்த 24 மணி நேரத்தில் நடைபெற்ற கொலை, கொள்ளை, சாதி/மத ரீதியான மோதல்கள், அரசியல் போராட்டங்கள், விபத்துகள் மற்றும் சட்டம் ஒழுங்கு பாதிப்புகள் குறித்த அனைத்து முக்கிய விவரங்களும் இந்த அறிக்கையில் தொகுக்கப்படும்.

    தினமும் காலை ஒவ்வொரு மாவட்ட எஸ்பி மற்றும் மாநகரக் காவல் ஆணையர் அலுவலகங்களில் இருந்து இந்த அலர்ட் மெசேஜ்கள் நேரடியாகச் சென்னை மயிலாப்பூரில் உள்ள மாநிலக் காவல் தலைமை இயக்குநர் அலுவலகத் தலைமைத் கட்டுப்பாட்டு அறைக்கு அனுப்பி வைக்கப்படும்.

    கிரவுண்ட் ரிப்போர்ட்

    மாநிலத்தின் எந்தப் பகுதியில் சட்டம் ஒழுங்குப் பிரச்சனை நிலவுகிறது, எங்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு தேவை என்பதை டிஜிபி மற்றும் உளவுத்துறை அதிகாரிகள் உடனுக்குடன் அறிந்துகொள்ள இந்த டி.எஸ்.ஆர் மெசேஜ்கள் உதவுகின்றன. இதன் மூலம், ஒரு சிறிய அசம்பாவிதம் கூட பெரிய கலவரமாக மாறாமல் தடுக்க முன்கூட்டியே டிஜிபி அலுவலகத்திலிருந்து மாவட்டங்களுக்கு அதிரடி உத்தரவுகள் பிறப்பிக்கப்படும்.

    இதுதான் பிரச்சனை

    ஆனால், இந்த ரிப்போர்டில் உண்மை நிலவரங்கள் மறைக்கப்படுகின்றன என்று விமர்சனங்கள் எழுந்துள்ளன. ரிப்போர்ட் சரியாக இருந்தால், ஆக்ஷனும் சரியாக இருக்கும். ஆனால், ரிப்போர்ட்டில் எந்த பிரச்சனையும் இல்லாத மாதிரி சொல்லிவிடுகிறார்கள். மறுபுறம் பிரச்சனைகள் மீடியாக்கள் மூலம் வெளிச்சத்திற்கு வந்துவிடுகிறது. இது இரண்டும் சரியாக இருந்தால் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சரியாக இருக்கும் என்று பல்வேறு தரப்பினரும் கூறுகின்றனர்.

    English Summary

    Vijay: As 23 days have now elapsed since Vijay assumed office as Chief Minister, approximately 20 incidents of sexual violence have occurred across Tamil Nadu during this brief period alone. Vijay rose to power precisely by criticizing the previous DMK administration's handling of law and order. Given this context, why has he been unable to bring law and order under control even after coming to power? What exactly is the problem? Details have now emerged regarding the specific area where Vijay has faltered.