சென்னை: தமிழ்நாட்டின் தொழில் துறை முன்னெப்போதும் இல்லாத வகையில் மிக மோசமான சரிவைச் சந்தித்து வருகிறதா என்ற அச்சம் இப்போது மாநிலம் முழுவதும் எழுந்துள்ளது. இந்தியாவின் "டெட்ராய்ட்" என்று பெருமையோடு அழைக்கப்பட்ட சென்னை மற்றும் தமிழ்நாட்டின் மோட்டார் வாகனத் தொழில் மண்டலம், தனது செல்வாக்கை அண்டை மாநிலங்களிடம் வேகமாக இழந்து வருகிறது.
ஏற்கனவே தமிழ்நாட்டின் அடையாளமான ராயல் என்ஃபீல்டு தனது ₹2,200 கோடி புதிய ஆலையை ஆந்திராவுக்குக் கொண்டு சென்றது. அதனைத் தொடர்ந்து டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனம் தனது பிரம்மாண்ட தலைமை நிர்வாக மற்றும் தொழில்நுட்ப அலுவலகத்தை பெங்களூருவுக்கு மாற்றியது. கடந்த சில தினங்களுக்கு முன்பு, ₹7,000 கோடி மதிப்பிலான ஹையர் நிறுவனத்தின் மாபெரும் எலக்ட்ரானிக்ஸ் ஆலையும் சென்னை எல்லை வரை வந்து ஆந்திராவின் சத்தியவேடுக்குச் சென்றது.
இந்த அதிர்ச்சிகள் அடங்குவதற்குள், தற்போது அடுத்த பேரடியாக, புகழ்பெற்ற சர்வதேச கார் நிறுவனங்களான ஹூண்டாய் மற்றும் கியா ஆகியவற்றிற்கு உதிரிபாகங்கள் தயாரித்து வழங்கும் மூன்று முன்னணி தென் கொரிய நிறுவனங்கள் தமிழ்நாட்டைப் புறக்கணித்து ஆந்திராவைத் தேர்ந்தெடுத்துள்ளன. தவெக அரசின் தொழில்துறை அமைச்சர் எஸ். கீர்த்தனா பொறுப்பேற்ற பிறகு, அடுத்தடுத்து நடக்கும் இந்த தொடர் சறுக்கல்கள் தமிழ்நாட்டின் தொழில் துறைக்கு ஒரு இருண்ட காலத்தை உருவாக்குகிறதோ என்ற பெரும் கேள்வியை எழுப்பியுள்ளது. ஹூண்டாய் மற்றும் கியா நிறுவனங்களின் கார்களுக்குத் தேவையான மிக முக்கியமான உதிரிபாகங்களை உற்பத்தி செய்யும் தென் கொரியாவைச் சேர்ந்த மூன்று நிறுவனங்கள் தங்களது புதிய உற்பத்தி ஆலை விரிவாக்கத்திற்குத் தமிழ்நாட்டையும் பரிசீலித்தன. ஸ்ரீபெரும்புதூர், ஒரகடம் போன்ற தமிழ்நாட்டின் ஆட்டோமொபைல் மையங்களில் இந்த ஆலைகள் அமையலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஆந்திர அரசு உடனடியாகக் களத்தில் இறங்கி, அந்நிறுவனங்களுடன் தீவிரப் பேச்சுவார்த்தை நடத்தி ஒப்பந்தங்களை முழுமையாகத் தட்டிச் சென்றுள்ளது. ஆந்திர மாநிலம் அனந்தபூர் மாவட்டத்தில் இந்த மூன்று ஆலைகளும் அமைய உள்ளன. இதற்காக ஆந்திர அரசுடன் மொத்தம் ₹1,614 கோடி மதிப்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் (MoUs) கையெழுத்தாகியுள்ளன. ஹ்வாஷின்: இந்த நிறுவனம் அதிகபட்சமாக ₹850 கோடி முதலீடு செய்யவுள்ளது; இதன் மூலம் சுமார் 100 பேருக்கு நேரடி வேலைவாய்ப்பு கிடைக்கும். இந்த மூன்று திட்டங்களின் மூலம் மொத்தம் ₹1,614 கோடி புதிய மூலதனமும், நேரடியாக 1,418 இளைஞர்களுக்குப் புதிய வேலைகளும் உருவாகின்றன. இது தவிர, ஆயிரக்கணக்கான மறைமுக வேலைகளும் ராயலசீமா பகுதி மக்களுக்குக் கிடைக்கப் போகின்றன. அனந்தபூரின் பெனுகொண்டா பகுதியில் ஏற்கனவே பிரம்மாண்டமான கியா கார் தொழிற்சாலை வெற்றிகரமாக இயங்கி வருகிறது. அதனைச் சுற்றி ஒரு பலமான சப்ளையர் நெட்வொர்க்கை ஆந்திர அரசு மிகத் திட்டமிட்டு உருவாக்கி வருகிறது. தமிழ்நாட்டில் பல ஆண்டுகளாக ஹூண்டாய் கார்ப்பரேஷன் வெற்றிகரமாக இயங்கி வந்தாலும், அதன் சப்ளையர் நிறுவனங்களின் புதிய விரிவாக்கங்களை தமிழ்நாட்டிற்குள் ஈர்க்க நமது தொழில் துறையால் முடியவில்லை. ஆந்திர முதல்வரும் அம்மாநில தொழில் துறை அதிகாரிகளும் வெளிநாட்டு முதலீட்டாளர்களை நேரில் சந்தித்து, 24 மணி நேர ஒற்றைச் சாளர அனுமதி, உடனடியாக நிலம், மலிவான மின்சாரம் மற்றும் வரிச் சலுகைகளை உத்தரவாதமாக வழங்குகின்றனர். இதனால் தமிழ்நாட்டின் தொழில் மண்டலங்களில் வர வேண்டிய திட்டங்கள் சுலபமாக ஆந்திரா பக்கம் சாய்ந்து விடுகின்றன. தமிழ்நாட்டில் புதிய அரசு பொறுப்பேற்று, இளம் அமைச்சர் எஸ். கீர்த்தனா வசம் தொழில்துறை ஒப்படைக்கப்பட்ட போது, இளைஞர்களுக்குப் பல்லாயிரக்கணக்கான வேலைகள் உருவாக்கப்படும் என்று கூறப்பட்டது. ஆனால், கடந்த சில மாதங்களாக நடக்கும் சம்பவங்கள் நேர்மாறாக உள்ளன: 1. ராயல் என்ஃபீல்டு: சென்னையில் மட்டுமே பைக்குகளை உற்பத்தி செய்த நிறுவனம், புதிய ஆலைக்கு ஆந்திராவின் சத்தியவேடைத் தேர்வு செய்தது. ஒரே ஆண்டில் மட்டும் பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் முதலீடுகளும், சுமார் 25,000-க்கும் மேற்பட்ட நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகளும் தமிழ்நாட்டின் கண்களுக்கு முன்பாகவே அண்டை மாநிலங்களுக்குப் பறிபோயுள்ளன. தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் பல லட்சம் இளைஞர்கள் பொறியியல், பாலிடெக்னிக் மற்றும் ஐடிஐ படிப்புகளை முடித்துவிட்டு வேலை தேடி வருகின்றனர். சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் கோவை போன்ற மாவட்டங்களைச் சேர்ந்த இளைஞர்களுக்கு ஆட்டோமொபைல் துறைதான் தலையாய வாழ்வாதாரமாக விளங்கி வந்தது. தற்போது ஆட்டோமொபைல் உதிரிபாக ஆலைகளும், ஆராய்ச்சிப் பணிகளும் கர்நாடகாவுக்கும் ஆந்திராவுக்கும் இடம் பெயர்ந்து கொண்டே போனால், தமிழக இளைஞர்கள் மீண்டும் வேலைக்காக பெங்களூருவுக்கும் ஹைதராபாத்துக்கும் குடிபெயர வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்படுவார்கள். "பழைய புகழை மட்டுமே பேசிக் கொண்டிருக்காமல், நடைமுறை எதார்த்தத்திற்கு ஏற்ப தமிழக அரசு மாற வேண்டும்" என்பது தொழில் துறையினரின் ஒருமித்த கருத்தாக உள்ளது. அண்டை மாநிலங்கள் மிகவும் துடிப்பாகச் செயல்படும்போது, தமிழ்நாட்டில் நிலம் கையகப்படுத்துதல், அரசு ஒப்புதல்கள் பெறுதல் ஆகியவற்றில் இருக்கும் தாமதங்கள் முதலீட்டாளர்களை அச்சுறுத்துகின்றன. அமைச்சர் கீர்த்தனா உடனடியாக தொழில்துறை பிரதிநிதிகளை நேரில் சந்தித்துப் பேசி, தமிழகத்தில் உள்ள குறைபாடுகளைக் களைய போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால், இந்தியாவின் முதன்மை உற்பத்தி மாநிலமாக விளங்கிய தமிழ்நாடு, தனது முதலிடத்தை நிரந்தரமாக இழந்து பெரும் பொருளாதார தேக்க நிலையைச் சந்திக்க நேரிடும்.அனந்தபூருக்குச் சென்ற ₹1,614 கோடி கொரிய முதலீடு
இந்த முதலீடுகளின் முழு விவரம்:
சியோன்: இந்நிறுவனம் ₹514 கோடி முதலீட்டில் தனது ஆலையை அமைக்கிறது; இதன் மூலம் சுமார் 918 பேருக்கு நேரடி வேலைகள் உருவாகும்.
இவாமெட் : இந்நிறுவனம் ₹250 கோடி முதலீடு செய்கிறது; இதன் மூலம் 400 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.கியா சுற்றுச்சூழல் அமைப்பை வளைத்துப் போட்ட ஆந்திரா!
தொடரும் பின்னடைவுகள்: அமைச்சர் கீர்த்தனாவுக்கு அதிகரிக்கும் அழுத்தம்
2. டிவிஎஸ் மோட்டார்ஸ்: சென்னையில் உள்ள தனது முக்கிய நிர்வாகம் மற்றும் மென்பொருள் ஆராய்ச்சி விரிவாக்கத்தை பெங்களூரு ஹெப்பால் பகுதிக்கு மாற்றியது.
3. ஹையர் நிறுவனம்: 21,000 வேலைவாய்ப்புகளைத் தரும் மிகப்பெரிய வீட்டு உபயோக சாதன ஆலை சென்னை எல்லை வரை வந்து ஆந்திராவுக்குச் சென்றது.
4. மூன்று தென் கொரிய நிறுவனங்கள் : ஹூண்டாய்-கியா உதிரிபாக ஆலைகளும் தமிழ்நாட்டின் கைகளை விட்டு நழுவி ஆந்திராவின் அனந்தபூருக்குச் சென்றுவிட்டன.வேலைவாய்ப்பு இழப்பும் தமிழ்நாட்டின் எதிர்காலமும்
தொழில் துறை சுதாரிக்குமா?