நாளை பக்ரீத்.. தமிழகத்தில் பொது இடங்களில் மாடுகளை வெட்ட தடை.. ஐகோர்ட் போட்ட முக்கிய உத்தரவு!

  • சென்னை: இஸ்லாமியப் பெருமக்களால் நாடு முழுவதும் நாளை பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படவுள்ள நிலையில், சென்னை உயர் நீதிமன்றம் மிக முக்கியமான அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. பக்ரீத் பண்டிகையின் போது, தெருக்களிலோ அல்லது மற்ற பொது இடங்களிலோ மாடுகளை வெட்டக் கூடாது என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

    Advertisement

    இறைச்சிக் கூடங்களாக அறிவிக்கப்படாத இடங்களில் பசுக்கள் மற்றும் கன்றுகளை வெட்டுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகக் குற்றம் சாட்டி, கோவையைச் சேர்ந்த ஒருவர் தாக்கல் செய்த மனுவில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

    Advertisement

    வழக்கு என்ன?

    கோயம்புத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த இந்து மக்கள் கட்சியின் இளைஞரணி பொதுச் செயலாளரான சூர்யபிரசாந்த் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார்.

    அவரது மனுவில் குறிப்பிட்டிருந்ததாவது: "கடந்த 2025-ஆம் ஆண்டு பக்ரீத் பண்டிகையின் போது, கோவை செல்வபுரம் பகுதியில் எவ்வித அனுமதியும் இன்றி தற்காலிகமாகத் தகரக் கொட்டகைகள் அமைக்கப்பட்டு, விதிகளை மீறி மாடுகள் வெட்டப்பட்டன. அப்போது உள்ளூர் காவல் துறையிடம் புகார் அளித்து, 7 மாடுகள் மீட்கப்பட்டு கோசாலைக்கு அனுப்பப்பட்டன.

    பொது இடங்களில்

    இந்த ஆண்டிலும் கோவையின் முக்கியப் பகுதிகளான உக்கடம், செல்வபுரம், துடியலூர் சந்தை, ரத்தினபுரி மசூதி, குனியமுத்தூர், கள்ளமேடு, கோட்டைமேடு, போத்தனூர் ஆகிய இடங்களில் சட்டவிரோதமாக பொது இடங்களில் மாடுகளை வெட்டுவதற்குத் திட்டமிட்டு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இது குறித்து செல்வபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் முறையான நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

    Advertisement

    எனவே, இந்த விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட்டு, பொது இடங்களில் மாடுகள் வெட்டப்படுவதைத் தடுத்து நிறுத்த உத்தரவிட வேண்டும் என்று மனுதாரர் கோரியிருந்தார்.

    தற்காலிக கொட்டகைகளுக்குச் சட்ட அங்கீகாரம் இல்லை

    இந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஜி.ஆர். சுவாமிநாதன் மற்றும் வி. லட்சுமிநாராயணன் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. விசாரணையின் போது, செல்வபுரம் காவல் நிலைய ஆய்வாளர் தாக்கல் செய்த பதில் மனுவில், பக்ரீத் பண்டிகைக்காகச் சில தற்காலிக இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. இதைக் கண்டு அதிருப்தியடைந்த நீதிபதிகள், காவல் துறையின் இந்த அணுகுமுறையைக் கடுமையாக விமrசித்தனர்.

    Advertisement

    "விலங்குகளை எங்கு வெட்ட வேண்டும் என்று முடிவு செய்யும் அதிகாரம் காவல் துறைக்குக் கிடையாது. அது உள்ளாட்சி அமைப்புகளுக்கு மட்டுமே உரியது. தற்காலிகமாக அமைக்கப்படும் கொட்டகைகளை எப்படிச் சட்டப்பூர்வமான இடமாக மாற்ற முடியும்?" என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். மேலும், "உங்களுக்குப் பிடித்த எந்தவொரு இடத்திலும் மாடுகளை வெட்ட முடியாது" என்றும் அமர்வு குறிப்பிட்டது.

    நீதிமன்றம் சுட்டிக்காட்டிய முக்கியச் சட்ட விதிகள்

    விலங்குகளைப் பலியிடுவது மற்றும் இறைச்சிக்காக வெட்டுவது தொடர்பாக ஏற்கனவே அமலில் உள்ள சட்ட நடைமுறைகளை நீதிபதிகள் தங்களது தீர்ப்பில் சுட்டிக்காட்டினர்.

    2020-ஆம் ஆண்டு தீர்ப்பு: பொது இடங்களில் விலங்குகளைப் பலியிடக் கூடாது எனச் சென்னை உயர் நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் அமர்வு ஏற்கனவே தெளிவான தடை உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

    Advertisement

    1976-ஆம் ஆண்டு அரசாணை: தமிழ்நாட்டில் பசு வதையைத் தடுத்து, அதற்கான விதிமுறைகளை வகுத்து 1976-லேயே அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் பசு வதைக்கு முழுமையான தடை இல்லை என்றாலும், சட்டத்தில் கூறப்பட்டுள்ள கடுமையான நிபந்தனைகளை நிறைவு செய்தால் மட்டுமே அது அனுமதிக்கப்படும்.

    தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் விதிகள் (2023): இந்த விதிகளின்படி, அங்கீகரிக்கப்பட்ட மற்றும் உரிமம் பெற்ற அரசு இறைச்சிக் கூடங்களில் (Slaughter houses) மட்டுமே மாடுகளை வெட்ட அனுமதி உண்டு.

    தலைமைச் செயலர், டிஜிபி-க்கு அவசர உத்தரவு

    இந்த வழக்கு கோவை மாவட்டத்தைச் சார்ந்தது என்றாலும், இதில் உள்ள சட்ட விதிகள் ஒட்டுமொத்தத் தமிழ்நாட்டிற்கும் பொருந்தும் என்று நீதிபதிகள் குறிப்பிட்டனர்.

    Advertisement

    எனவே, இந்த பக்ரீத் பண்டிகையின் போது, தமிழ்நாடு முழுவதும் அனுமதிக்கப்பட்ட இறைச்சிக் கூடங்களைத் தவிர, வேறு எந்தவொரு பொது இடத்திலோ அல்லது திறந்த வெளியிலோ மாடுகள் வெட்டப்படவில்லை என்பதைத் தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலரும், டிஜிபியும் விழிப்புடன் இருந்து கட்டாயம் உறுதி செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தனர்.

    English Summary

    Madras High Court directed the Tamil Nadu Chief Secretary and Police DGP to ensure that cow slaughter is not carried out in public places or other non-designated areas during Bakrid.