சென்னை: மகளிர் வெற்றிப் பயண திட்டத்தின் கீழ் இயங்கும் பேருந்துகளில் ஆண்களுக்கான டிக்கெட் கட்டணம் ரூ 15 வரை குறைந்துள்ளது. கடந்த திமுக ஆட்சியில் சாதாரண கட்டண பேருந்துகளில் மகளிர் இலவசமாக பயணிக்கும் வகையில் விடியல் பயணம் தொடங்கப்பட்டது.
இந்த நிலையில் தற்போது தவெக ஆட்சியில் அது வெற்றிப் பயணம் என்ற பெயரில் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. அரசு விரைவு பேருந்துகள், எல்எஸ்எஸ், டீலக்ஸ் ஆகிய பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணிக்கலாம்.
இந்த திட்டத்தை கடந்த 2ஆம் தேதி முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார். அதன்படி மாநகர் மற்றும் நகர் பகுதிகளில் இயக்கப்படும் சாதாரண , சொகுசு பஸ்களிலும் மாவட்டங்களுக்கு இடையேயான புறநகர் மற்றும் மலைப் பகுதி சாதாரண பேருந்துகளிலும் பயணம் செய்யலாம். இதனால் சென்னையில் டீலக்ஸ் பேருந்துகளிலும் மாவட்டங்களில் சாதாரண கட்டண பேருந்துகளிலும் பெண் பயணிகளின் கூட்டம் அதிகரித்தது. இந்த பேருந்துகளை பயணிகள் அடையாளம் கண்டு கொள்ளும் வகையில் பேருந்துகளின் நேம் போர்ட்டில் வெற்றி பயணம் என குறிப்பிடப்பட்டுள்ளது. வெற்றி பயணம் திட்டத்தில் 12,695 பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்ய அனுமதிக்கப்படுகிறது. இதில் மாவட்டங்கள், முக்கிய நகரங்கள் இடையே இயக்கப்படும் 2,390 புறநகர் சாதாரண கட்டண பேருந்துகளும் உண்டு. தற்போது 340 விரைவு, சொகுசு புறநகர் பேருந்துகள், சாதாரண கட்டணத்திற்கு மாற்றப்பட்டுள்ளன. இந்த பேருந்துகளில் பயணம் செய்யும் ஆண்களுக்கு தூரத்திற்கு ஏற்றாற் போல் ரூ 10 முதல் 15 வரை கட்டணம் குறைந்துள்ளது. இதனால் ஆண்கள் மகிழ்ச்சியாக பயணம் செய்கிறார்கள். இந்த திட்டத்தின் கீழ் வெளியிட்டுள்ள விதிகளை பார்க்கலாம். வெற்றிப் பயணம் திட்டத்தில் இடம்பெறும் வழித்தடங்களின் Route Master / Service Master விவரங்கள் புதுப்பிக்கப்பட்டு, ஒவ்வொரு தகுதியான சேவையும் ETM / மென்பொருள் அமைப்பில் சரியாக இணைக்கப்பட வேண்டும். ZERO Ticket உருவாக்கம் முன்கூட்டியே சோதித்து உறுதி செய்யப்பட வேண்டும். தேவையான அளவு செயல்படும் ETM கருவிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு, அவற்றின் சார்ஜிங் / இணைப்பு வசதிகள் செயல்பாட்டில் இருப்பது உறுதி செய்யப்பட வேண்டும். ETM பழுது ஏற்பட்டால் உடனடியாக Service Call பதிவு செய்து, மாற்று நடைமுறை மூலம் ZERO Ticket வழங்கல் தடையின்றி தொடரப்பட வேண்டும். டிஜிட்டல் வழித்தட பலகை உள்ள பேருந்துகளில் "வெற்றிப் பயணம்" தெளிவாகக் காட்சிப்படுத்தப்பட வேண்டும். டிஜிட்டல் வழித்தட பலகை இல்லாத பேருந்துகளில் அங்கீகரிக்கப்பட்ட "வெற்றிப் பயணம்" ஸ்டிக்கர் மட்டும் ஒட்டப்பட வேண்டும். ஓட்டுநர்கள், நடத்துநர்கள், பரிசோதகர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட பணியாளர்களுக்கு திட்டத்தின் தகுதி, ZERO Ticket வழங்கும் முறை, பயணிகள் சேவை மற்றும் புகார் கையாளும் நடைமுறை குறித்து பணிமனை அளவில் முன்கூட்டியே விளக்கக் கூட்டம் நடத்தப்பட வேண்டும். மகளிர் மற்றும் திருநர் பயணிகளிடமிருந்து எந்தக் கட்டணமும் வசூலிக்கக் கூடாது. ஒவ்வொரு தகுதியான பயணத்திற்கும் ZERO Ticket கட்டாயமாக வழங்கப்பட வேண்டும். ZERO Ticket வழங்காமல் விடுதல் அல்லது தவறாகப் பயன்படுத்துதல் விதிகளின்படி நடவடிக்கைக்குரியதாகும். முக்கிய பேருந்து நிலையங்கள், கல்வி நிறுவனங்கள், தொழிற்பகுதிகள், மருத்துவமனைகள் மற்றும் சந்தைப் பகுதிகளில் கள கண்காணிப்பு மேற்கொள்ளப்பட வேண்டும். நெரிசல், நீண்ட காத்திருப்பு, தாமதம் மற்றும் சேவை குறைபாடுகள் கண்டறியப்பட்டால் உடனடியாகத் திருத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும். ஓட்டுநர்கள் நிர்ணயிக்கப்பட்ட வழித்தடம் மற்றும் நேர அட்டவணைப்படி பேருந்துகளை இயக்க வேண்டும். பேருந்துகள் நிர்ணயிக்கப்பட்ட நிறுத்தங்களிலேயே நிறுத்தப்பட்டு, பயணிகள் பாதுகாப்பாக ஏறவும் இறங்கவும் போதுமான நேரம் வழங்கப்பட வேண்டும். அனைத்து வெற்றிப் பயணம் பேருந்துகளும் நல்ல பராமரிப்பு மற்றும் இயக்கத் தகுதி நிலையில் இருக்க வேண்டும். தேவையான ஓட்டுநர்கள், நடத்துநர்கள் மற்றும் மாற்றுப் பேருந்துகளுக்கான ஏற்பாடுகள் முன்கூட்டியே செய்யப்பட வேண்டும். இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளன.ராமநாதபுரம் கலெக்டர் ஆபீசுக்கு.. சீர்வரிசை தட்டுகளுடன் வந்த 50+ இஸ்லாமிய பெண்கள்.. எதுக்காக தெரியுமா
தாய் மாமன் சீர், அண்ணன் சீர்லாம் வேண்டாம்.. பெண்கள் யார் கையையும் எதிர்பார்க்கக் கூடாது! கனிமொழி