புதிதாக பதவியேற்ற 23 அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு.. யார் யாருக்கு எந்த இலாகா? முழு லிஸ்ட்

  • சென்னை: தமிழக முதல்வர் விஜய் தலைமையிலான அமைச்சரவை இன்று காலை 10 மணிக்கு விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. மொத்தம் 23 பேர் புதிய அமைச்சர்களாக பொறுப்பேற்றுள்ளனர். இந்நிலையில் தான் முதல்வர் விஜய் உள்பட அமைச்சரவையில் மொத்தம் 33 பேர் அமைச்சர்களாக உள்ளனர். இவர்களுக்கு ஒதுக்கப்பட்ட துறைகளின் விவரம் வருமாறு:

    Advertisement

    * * முதல்வர் ஜோசப் விஜய் - பொது நிர்வாகம், இந்திய ஆட்சிப் பணி, இந்தியக் காவல் பணி, இந்திய வனப் பணி, மாவட்ட வருவாய் அலுவலர்கள், காவல்துறை, உள்துறை, சிறப்புத் திட்டச் செயலாக்கம், மகளிர் நலன், இளைஞர் நலன், குழந்தைகள் நலன், முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலன், நகராட்சி நிர்வாகம், நகர்ப்புறம் மற்றும் குடிநீர் வழங்கல் உள்ளிட்ட துறைகளை நிர்வகிக்க உள்ளார்.

    Advertisement

    * புஸ்ஸி ஆனந்த் - ஊரக வளர்ச்சி, பஞ்சாயத்து மற்றும் பஞ்சாயத்து யூனியன், நீர்ப்பாசனம், நீர்பாசனத்துறை திட்டத்துடன் கூடிய சிறிய நீர்ப்பாசனத்துறை

    * ஆர் நிர்மல்குமார் - மின்சாரம் மற்றும் சட்டத்துறை
    * செங்கோட்டையன் - நிதித்துறை பறிக்கப்பட்டு வருவாய்த்துறை துறை வழங்கப்பட்டுள்ளது.
    * ஸ்ரீநாத் - தூத்துக்குடி எம்எல்ஏ – மீன்வளத்துறை
    * கமலி - அவிநாசி எம்எல்ஏ – கால்நடைத்துறை
    * சி விஜயலட்சுமி - குமாரபாளையம் எம்எல்ஏ – பால்வளத்துறை
    * ரஞ்சித் குமார் - காஞ்சிபுரம் எம்எல்ஏ - வனத்துறை
    * வினோத் - கும்பகோணம் எம்எல்ஏ - விவசாயம் மற்றும் உழவர் நலத்துறை
    * ராஜீவ் - திருவாடானை எம்எல்ஏ - சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம் துறை
    * ராஜ் குமார் - கடலூர் எம்எல்ஏ - வீட்டு வசி மற்றும் நகர்புற மேம்பாட்டு துறை
    * காந்திராஜ் - அரக்கோணம் எம்எல்ஏ - கூட்டுறவுத்துறை

    Advertisement

    * மதன் ராஜா - ஒட்டப்பிடாரம் எம்எல்ஏ - சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்துறை
    * ஜெகதீஷ்வரி - ராஜபாளையம் எம்எல்ஏ - சமூக நலத்துறை மற்றும் பெண்கள் மேம்பாட்டு துறை
    * ராஜேஷ் குமார் - கிள்ளியூர் எம்எல்ஏ (காங்கிரஸ்) - சுற்றுலாத்துறை
    * விஜய் பாலாஜி - ஈரோடு கிழக்கு எம்எல்ஏ - கைத்தறி, ஜவுளித்துறை
    * லோகேஷ் தமிழ் செல்வன் - ராசிபுரம் எம்எல்ஏ - வணிக வரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை
    * விஜய் தமிழன் பார்த்திபன் - சேலம் தெற்கு எம்எல்ஏ - போக்குவரத்து துறை
    * ரமேஷ் - ஸ்ரீரங்கம் எம்எல்ஏ - இந்து சமய அறநிலையத்துறை
    * விஸ்வநாதன் - மேலூர் எம்எல்ஏ (காங்கிரஸ்) - உயர்கல்வித்துறை
    * குமார் - வேளச்சேரி எம்எல்ஏ - ஏஐ, தகவல் தொழில்நுட்ம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை
    * தென்னரசு - ஸ்ரீபெரும்புதூர் எம்எல்ஏ - வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை
    * சம்பத்குமார் - கோவை வடக்கு எம்எல்ஏ -பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை
    * முகமது பர்வாஸ் - அறந்தாங்கி எம்எல்ஏ - தொழிலாளர் நலத்துறை மற்றும் திறன் மேம்பாட்டு துறை
    * சரத்குமார் - தாம்பரம் எம்எல்ஏ - மனிதவள மேம்பாட்டு துறை
    * மரிய வில்சன் - ஆர்கே நகர் எம்எல்ஏ - நிதி மற்றும் திட்டமிடல் துறை
    * விக்னேஷ் - கிணத்துக்கடவு எம்எல்ஏ - மதுவிலக்கு மற்றும் கலால் துறை ஆகியவை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

    Advertisement

    இவர்கள் தவிர கடந்த 10ம் தேதி ஏற்கனவே அமைச்சர்களாக பதவியேற்றவர்களின் இலாக்களின் விவரம் பின்வருமாறு:
    *ஆதவ் அர்ஜூனா - பொதுப்பணிகள் (கட்டிடங்கள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள்) மற்றும் விளையாட்டு மேம்பாடு

    * கேஜி அருண் ராஜ் - மமருத்துவம், மருத்துவக் கல்வி மற்றும் குடும்ப நலத்துறை
    * வெங்கட்ரமணன் - உணவு மற்றும் குடிமைப் பொருட்கள் வழங்கல், நுகர்வோர் பாதுகாப்பு துறை

    * ராஜ்மோகன் - பள்ளி கல்வி, தொல்லியல், தமிழ் ஆட்சிமொழி மற்றும் தமிழ்ப் பண்பாடு, தகவல் மற்றும் விளம்பரம், திரைப்படத் தொழில்நுட்பம் மற்றும் திரைப்படச் சட்டம், செய்தித்தாள் அச்சுத்தாள் கட்டுப்பாடு, எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறை, அரசு அச்சகம் உள்ளிட்ட துறைகள் வழங்கப்படுகின்றன.
    * டி.கே.பிரபு - கனிமங்கள் மற்றும் சுரங்கத்துறை
    * கீர்த்தனா - தொழில்துறை மற்றும் முதலீட்டு மேம்பாட்டுத்துறை உள்ளிட்டவற்றை நிர்வகித்து வருகின்றனர். இன்னும் அமைச்சரவையில் 2 இடங்கள் காலியாக உள்ளன. அதில் ஒரு இடம் விசிகவிற்கும், இன்னொரு இடம் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    English Summary

    The cabinet led by Tamil Nadu Chief Minister Vijay was expanded this morning at 10:00 AM. A total of 23 individuals have assumed office as new ministers. Consequently, the cabinet now comprises a total of 33 ministers, including Chief Minister Vijay. The details of the portfolios allocated to them are as follows: