தமிழகத்தின் புதிய அமைச்சர்களாக நடிகர் ஸ்ரீநாத் உள்பட 23 பேர் பதவியேற்பு.. முழு லிஸ்ட் இதோ

  • சென்னை: தமிழக முதல்வர் விஜய் தலைமையிலான அமைச்சரவை இன்று காலை 10 மணிக்கு விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. மொத்தம் 23 பேர் புதிய அமைச்சர்களாக பொறுப்பேற்றுள்ளனர். அமைச்சராக பதவியேற்றுள்ளவர்களின் பெயர் விவரங்கள் பின்வருமாறு:

    Advertisement

    தமிழக முதல்வராக தவெக தலைவர் விஜய் கடந்த 10ம் தேதி பதவியேற்றார். இவருடன் 9 பேர் அமைச்சர்களாக பதவியேற்றுள்ளனர். தமிழக அமைச்சரவையை பொறுத்தவரை முதல்வருடன் சேர்த்து மொத்தம் 35 பேர் வரை இடம்பெறலாம். ஆனால் தற்போது வரை 10 பேர் மட்டுமே பொறுப்பில் உள்ளனர். இன்னும் 25 இடங்கள் காலியாக உள்ளன.

    Advertisement

    இந்நிலையில் தான் முதல்வர் விஜய் தலைமையிலான அமைச்சரவை இன்று முதல் முதலாக விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ளது. அதன்படி இன்று காலை 10 மணிக்கு அமைச்சரவை விரிவாக்கம் தொடங்கி நடைபெற்று வருகிறது. மொத்தம் 23 பேர் அமைச்சர்களாக பதவியேற்றுள்ளனர். இதில் 21 பேர் தவெகவை சேர்ந்த எம்எல்ஏக்கள் ஆவார்கள். 2 பேர் காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏக்கள் ஆவார்கள்.

    இவர்கள் 23 பேருக்கும் சென்னை மக்கள் பவனில் (ஆளுநர் மாளிகை) ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் பதவி பிரமாணம் மற்றும் ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்துள்ளார். அதன்படி புதிதாக அமைச்சர்களாகி உள்ள 23 எம்எல்ஏக்களின் பெயர் விவரங்கள் வருமாறு:

    Advertisement

    ஸ்ரீநாத் - தூத்துக்குடி எம்எல்ஏ
    கமலி - அவிநாசி எம்எல்ஏ
    சி விஜயலட்சுமி - குமாரபாளையம் எம்எல்ஏ
    ரஞ்சித் குமுார் - காஞ்சிபுரம் எம்எல்ஏ
    வினோத் - கும்பகோணம் எம்எல்ஏ
    ராஜீவ் - திருவாடானை எம்லெ்ஏ
    ராஜ் குமார் - கடலூர் எம்எல்ஏ
    காந்திராஜ் - அரக்கோணம் எம்எல்ஏ

    மதன் ராஜா - ஒட்டப்பிடாரம் எம்எல்ஏ
    ஜெகதீஷ்வரி - ராஜபாளையம் எம்எல்ஏ
    ராஜேஷ் குமார் - கிள்ளியூர் எம்எல்ஏ (காங்கிரஸ்)
    விஜய் பாலாஜி - ஈரோடு கிழக்கு எம்எல்ஏ
    லோகேஷ் தமிழ் செல்வன் - ராசிபுரம் எம்எல்ஏ
    விஜய் தமிழன் பார்த்திபன் - சேலம் தெற்கு எம்எல்ஏ
    ரமேஷ் - ஸ்ரீரங்கம் எம்எல்ஏ
    விஸ்வநாதன் - மேலூர் எம்எல்ஏ (காங்கிரஸ்)
    குமார் - வேளச்சேரி எம்எல்ஏ
    தென்னரசு - ஸ்ரீபெரும்புதூர் எம்எல்ஏ
    சம்பத்குமார் - கோவை வடக்கு எம்எல்ஏ
    முகமது பர்வாஸ் - அறந்தாங்கி எம்எல்ஏ
    சரத்குமார் - தாம்பரம் எம்எல்ஏ
    மரிய வில்சன் - ஆர்கே நகர் எம்எல்ஏ
    விக்னேஷ் - கிணத்துக்கடவு எம்எல்ஏ என மொத்தம் 23 பேர் இன்று அமைச்சர்களாக பதவியேற்றுள்ளனர். இதில் 21 பேர் தவெகவை சேர்ந்தவர்கள். 2 பேர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் ஆவார்கள்.

    English Summary

    Tamil Nadu Ministry: The cabinet led by Tamil Nadu Chief Minister Vijay is scheduled to be expanded today at 10:00 AM. Between 19 and 23 individuals are expected to take oath as new ministers. Against this backdrop, a tentative list of potential ministerial candidates from the TVK has emerged. The official list is expected to be released shortly.