எம்எல்ஏக்களுக்கு கார்..எக்ஸ்ட்ரா 1 லட்சம்! அரசுக்கு எவ்வளவு செலவு? இத்தனை நலத் திட்டங்களை செய்யலாமா?

  • சென்னை: தமிழக சட்டசபை கூட்டத் தொடரில் மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வரும் நிலையில் எம்எல்ஏக்கள் அனைவருக்கும் கார் வழங்கப்படும் எனவும், ஓட்டுனர், எரிபொருள், உள்ளிட்ட செலவுகளோடு, உதவியாளர் நியமனத்துக்கு 25,000 ரூபாய் என மொத்தம் 1 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என அறிவித்துள்ளார் முதல்வர் விஜய்.

    Advertisement

    தொகுதிப் பணிகளை மேற்கொள்ள எம்எல்ஏக்களுக்கு வாகன வசதி அவசியம் என்ற கருத்து ஒருபுறம் இருந்தாலும், அரசின் தற்போதைய கடன் சுமையில் இது தேவையில்லாத செலவு என்ற விமர்சனம் எழுந்துள்ளது.

    Advertisement

    மேலும் கார் வாங்க மட்டுமே கிட்டத்தட்ட 20 கோடி தேவைப்படும் என்ற நிலையில் கூடுதல் படியால் ஆண்டுக்கு 246 கோடி ரூபாய் கூடுதல் செலவு ஏற்படும் என்கின்றனர். இந்த நிதியை வைத்து அரசு பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறை, கழிப்பறை என பல திட்டங்களை செயல்படுத்த முடியும் என்கின்றனர்.

    முதல்வர் விஜய்

    தமிழக பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெற்று வரும் நிலையில் தற்போது துறை வாரியாக மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இதற்கிடையே சில தினங்களுக்கு முன்பு பேசிய எம்எல்ஏ ஜோதிமணி தனக்கு கார் இல்லை எனவும், வசதி இல்லாத எம்எல்ஏக்களுக்கு கார்கள் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். இந்த நிலையில் இன்று சட்டசபை தொடங்கியதும் தமிழ்நாடு முதலமைச்சர் சி.ஜோசப் விஜய் 110க்கு தொகுதியின் கீழ் ஒரு அறிவிப்பை வெளியிட்டார்.

    Advertisement

    எம்எல்ஏக்களுக்கு கார்

    அதில் சட்டப்பேரவை உறுப்பினர்கள் தங்கள் தொகுதிகளில் பணிகளை சிறப்பாக மேற்கொள்வதற்காக அரசு சார்பில் வாகனம் வழங்கப்படும் எனவும், அதோடு ஓட்டுநர் மற்றும் எரிபொருள் செலவுக்காக மாதம் 75 ஆயிரம் ரூபாயும், உதவியாளர் நியமனத்திற்காக 25,000 என மொத்தம் ஒரு லட்சம் கூடுதல் படியாக வழங்கப்படும் என அறிவித்துள்ளார். ஏற்கனவே எம்எல்ஏக்களுக்கு 1.5 லட்சம் ரூபாய் ஊதியத்துடன் படி வழங்கப்பட்டுள்ள வரும் நிலையில் தற்போது கூடுதல் படி மற்றும் கார் வழங்கப்படும் என்ற அறிவிப்பால் அரசுக்கு மாதாந்திர செலவு கணிசமாக அதிகரித்துள்ளது.

    தமிழக அரசு

    ஏற்கனவே நிதி நெருக்கடியில் தமிழக அரசு சிக்கித் தவிக்கும் நிலையில் கூடுதலாக 150 கோடி ரூபாய் வரை செலவாகும் என்ற விமர்சனம் முன்வைக்கப்படுகிறது. தமிழக சட்டசபையில் மொத்தம் 234 உறுப்பினர்கள் இருக்கும் நிலையில், முதலமைச்சர், அமைச்சர்கள், எதிர்க்கட்சித் தலைவர், சபாநாயகர் உள்ளிட்ட முக்கிய பதவிகள் இருப்பவர்களுக்கு ஏற்கனவே அரசு சார்பில் வாகன வசதி வழங்கப்பட்டிருக்கிறது.

    Advertisement

    நிதி நெருக்கடி

    அவர்களைத் தவிர்த்து எனவே புதிய வாகன வசதி வழங்கப்படும் உறுப்பினர்களின் எண்ணிக்கை 200 என கணக்கில் வைத்துக் கொண்டால், கூட ஒரு காருக்கு சராசரியாக 10 லட்சம் ரூபாய் செலவாகும். அந்த அடிப்படையில் அரசு, 200 கார்களை வழங்குவதால் ஒரு முறை செலவு மட்டும் கிட்டத்தட்ட 20 கோடி வரும். இது வாகனங்களை வாங்குவதற்கான செலவு மட்டும் என்பது குறிப்பிடத்தக்கது. கார் வாங்குவதுடன் அரசின் செலவும் முடிந்து விடாது. கூடுதல் பொருட்கள், வாகனங்களுக்கான பராமரிப்பு, காப்பீடு உள்ளிட்ட செலவுகளும் ஏற்படும்.

    எவ்வளவு செலவு?

    அதை விடுத்து சட்டப்பேரவை உறுப்பினருக்கு மாதம் ஒரு லட்சம் ரூபாய் கூடுதலாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஏற்கனவே சட்டப்பேரவை உறுப்பினருக்கு மாதம் சுமார் ஒரு லட்சத்து ஐந்தாயிரம் ரூபாய் ஊதியம் மற்றும் படிகள் வழங்கப்படுகிறது. தற்போது கூடுதலாக படிகள் வழங்கப்படும் போது அமைச்சர் உள்ளிட்ட அனைவருக்குமே 1 லட்சம் ரூபாய் வழங்கப்படும். இது ஆண்டுக்கு சுமார் 2 கோடியே 34 லட்சம் ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது.

    Advertisement

    49.20 கோடி செலவு

    இதில் ஏற்கனவே சொன்னது போல முதலமைச்சர் அமைச்சர்களை கழித்தால் 200 பேருக்கு கூடுதல் படியாக மட்டும 2 கோடியே 10 லட்சம் ரூபாய் வழங்கப்படும். இது ஒரு ஆண்டுக்கு மட்டுமே. ஐந்தாண்டுகள் கொண்ட ஒரு சட்டப்பேரவை காலத்துக்கு இந்த செலவு சுமார் 126 கோடியாக இருக்கும். தற்போது அறிவிக்கப்பட்டுள்ள ஒரு லட்சம் கூடுதல் படியையும் சேர்த்தால் ஒவ்வொரு எம்.எல்.ஏ வுக்கு மாதம் சுமார் 2 லட்சம் என்ற அளவில் ஊதியம் மற்றும் படிகள் கிடைக்கும் என வைத்துக்கொண்டால், 2.5 லட்சம் என்ற வகையில் ஒரு ஆண்டுக்கு 49.20 கோடியும் செலவாகும்.

    Advertisement

    நிதிச் சுமை

    ஐந்து ஆண்டுகளில் மொத்தமாக 246 கோடி ரூபாய் செலவாகும். ஏற்கனவே இருந்த 126 கோடி ரூபாய் செலவை கழித்தால், புதிய கூடுதல் படிகளால் மட்டும் ஐந்து ஆண்டுகளில் அரசுக்கு சுமார் 120 கோடி ரூபாய் நிதிச் சுமை ஏற்படும். இதனுடன் சேர்த்து புதிதாக கார் வாங்க 20 கோடி ரூபாய் என கொள்முதல் செலவையும் சேர்த்தால் அரசுக்கு சுமார் ஏறக்குறைய 140 கோடி ரூபாய் செலவு ஏற்படும். இது தோராயமான கணக்கு மட்டும்தான். உண்மையான செலவு, எத்தனை எம்எல்ஏக்களுக்கு வாகனங்கள் வழங்கப்படுகின்றன, கார்களின் விலை, இன்சூரன்ஸ், பராமரிப்பு உள்ளிட்ட அம்சங்களை பொறுத்து இந்த தொகை அதிகரிக்க கூடும்.

    11 லட்சம் கோடி கடன்

    முதல்வரின் இந்த புதிய அறிவிப்பின் மூலம் எம்எல்ஏக்கள் பொதுமக்களை நேரடியாக சந்திக்கலாம் என ஒரு கருத்து முன்வைக்கப்பட்டாலும் தமிழக அரசின் நிதிநிலை குறித்து ஒரு விமர்சனமும் முன் வைக்கப்படுகிறது. தமிழக அரசின் நிலுவை கடன் சுமார் 11 லட்சம் கோடி அளவில் இருப்பதாக சொல்லப்படுகிறது. இதோடு வருவாய் மற்றும் நிதி பற்றாக்குறை உள்ளிட்ட பல்வேறு சவால்களும் அரசுக்கு இருக்கின்றன.

    140 கோடி ரூபாய்

    ஏற்கனவே ஒவ்வொரு குடிமகனின் தலையிலும் 5 லட்சம் ரூபாய் வரை கடன் இருப்பதாக சொல்லப்படும் நிலையில், இந்த கூடுதல் செலவை வைத்து வேறு பணிகள் செய்யலாம் என்கின்றனர். எம்எல்ஏக்களுக்கான கார் மற்றும் கூடுதல் பணிகளுக்காக 5 ஆண்டுகளில் சுமார் 140 கோடி ரூபாய் செலவை பொதுமக்களுக்கு பயனளிக்கும் வேறு திட்டங்களை மேற்கொள்ளலாம் என்ற கருத்து முன் வைக்கப்படுகிறது.

    நலத்திட்டங்கள்

    உதாரணமாக பள்ளிக்கல்வித்துறையில் அரசு பள்ளிகளுக்கு கணினி ஆய்வகங்கள், ஸ்மார்ட் வகுப்பறைகள், கழிப்பறை வசதி உள்ளிட்டவற்றை செய்யலாம். சுகாதாரத் துறையில் கிராமப்புற அரசு சுகாதார நிலையங்கள் மேம்படுத்துதல், அங்கன்வாடிகளை மேம்படுத்துதல், அவசர மருத்துவ சேவைகளை வலுப்படுத்துதல், கூடுதல் ஆம்புலன்ஸ் வாங்குவது, அரசு போக்குவரத்து கழகங்களுக்கு புதிய பேருந்துகள் வாங்குவது, கிராமப்புறங்களில் குடிநீர் கட்டமைப்பை மேம்படுத்துவது போன்ற பணிகளுக்கு நிதி ஒதுக்க முடியும்.

    மக்கள் வரிப்பணம்

    மக்கள் வரிப்பணத்தில் இருந்து செலவழிக்கப்படும் ஒவ்வொரு ரூபாய்க்கும் அரசு கணக்க காட்ட வேண்டியது அவசியம். அதே நேரத்தில் ஏற்கனவே எம்எல்ஏக்கள் பலர் வசதியானவர்களாக இருக்கும் நிலையில் வறிய நிலையில் அல்லது குறைந்த வருமானம் கொண்ட எம்எல்ஏக்களுக்கு மட்டும் கார் வழங்கலாம் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்படுகிறது.

    English Summary

    Tamil Nadu government’s new car and ₹1 lakh monthly allowance for MLAs may add around ₹140 crore in five years.