தமிழகத்தில் பருவமழை தொடங்கியது முதல் இதுவரை 14 பேர் உயிரிழப்பு'' அமைச்சர் செங்கோட்டையன் சொன்ன தகவல்

  • சென்னை: தமிழ்நாட்டில் பருவமழை தொடங்கியதில் இருந்து இடி, மின்னல் தாக்கியது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இதுவரை 14 பேர் உயிரிழந்துள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

    Advertisement

    மழை குறித்த தெளிவான தகவல்களை அரசு வழங்கி வருகிறது என்றும், கோவை, நீலகிரியில் கனமழையால் தேங்கிய தண்ணீர் அகற்றப்பட்டதால் மக்களின் இயல்பு வாழ்க்கை திரும்பியது என்றும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

    Advertisement

    வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் செங்கோட்டையன் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், "வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு, அனைத்து துறைகளும் ஒருங்கிணைத்து செயல்பட்டு வருகிறது. தமிழகத்தில் இடி, மின்னல் உள்ளிட்ட காரணங்களால் இதுவரை 14 பேர் பலியாகியுள்ளனர். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    முதலமைச்சர் விஜய்யின் அறிவுறுத்தலின்படி பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. நீலகிரியில் 62 இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் மண் சரிவு ஏற்பட்ட அனைத்து இடங்களும் சீரமைக்கப்பட்டுவிட்டன. நீலகிரி மண் சரிவில் சிக்கி உயிரிழந்த பேருந்து ஓட்டுநரின் குடும்பத்தினருக்கு ரூ.4 லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.

    Advertisement

    திருப்பூர், கோவையில் நேற்று கூடுதலாக மழை பெய்துள்ளது. கோவை மற்றும் திருப்பூரில் தேங்கிய மழைநீர் அதிகாலையிலேயே அகற்றப்பட்டு விட்டது. மக்களின் இயல்பு வாழ்க்கை திரும்பியது. மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் திடீரென கூடுதலாக மழை பெய்ய வாய்ப்புள்ளது. பயிர்ச் சேதம் குறித்து மழைக்காலம் முடிந்த பிறகு கணக்கிடப்படும்.

    மேயர் பிரியாவுக்கு இதே வேலையா போச்சு.. கடுகடுத்த செங்கோட்டையன்.. விஜய் என்ன சொன்னார்

    பருவமழை தொடங்கியதில் இருந்து இடி, மின்னல் தாக்கி இதுவரை 14 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம் நிவாரண நிதி வழங்கப்பட்டுள்ளது. வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கையின் அடிப்படையில், அரசு அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது.

    Advertisement

    நீலகிரி, கொடைக்கானல், ஏலகிரி பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அத்தியாவசியப் பணிகளுக்கு மட்டுமே அங்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சுற்றுலாப்பயணிகள் அங்கு சென்று புகைப்படங்கள் எடுப்பதை தற்காலிகமாக நிறுத்திக் கொள்ள வேண்டும். அப்பகுதிகளில் முழு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது" எனத் தெரிவித்துள்ளார்.

    English Summary

    Minister Sengottaiyan has stated that 14 people have died in Tamil Nadu since the onset of the monsoon, due to various reasons including lightning strikes.