சென்னை: பயிர்க்கடன் தள்ளுபடி அறிவிப்பில் மாற்றம் செய்து தமிழக முதல்வர் விஜய் அறிவித்துள்ள நிலையில் 5 சவரன் நகைகளையும் தள்ளுபடி செய்யுமாறு பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த கோரிக்கைக்கு ஏற்கெனவே அமைச்சர் மரியவில்சன் பதிலளித்துள்ளார்.
தமிழகத்தில் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள், கூட்டுறவு சங்கங்களில் விவசாயிகளுக்கு பயிர்க்கடன் வழங்கப்படுகிறது. இந்த பயிர்க்கடன்களை தமிழக அரசு அவ்வப்போது தள்ளுபடி செய்து வருகிறது. இந்த நிலையில் விவசாயிகளுக்கு தலா ரூ 75 ஆயிரம் வரை பயிர்க்கடனை தள்ளுபடி செய்து முதல்வர் விஜய் உத்தரவிட்டார்.
இதுகுறித்து அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: கூட்டுறவு நிறுவனங்களின் மூலம் பயிர்க்கடன் பெற்ற அனைத்து விவசாயிகளுக்கும் பாகுபாடின்றி ரூ 75 ஆயிரம் வரை பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்படுகிறது. தள்ளுபடிக்கு தகுதியான பயிர்க்கடன்களுக்கான காலவரையறை 01.05.2025 முதல் 31.03.2026 வரை நீட்டிக்கப்படுகிறது. விவசாயிகளின் பயிர்க்கடன் தள்ளுபடிக்காக அரசு ஒட்டுமொத்தமாக ரூ. 9,062.83 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில் 5 சவரன் நகைக் கடன் தள்ளுபடி செய்யுமாறு பொது மக்கள் தமிழக அரசிடம் கோரிக்கை விடுத்து வருகிறார்கள். முன்னதாக ஏற்கெனவே இந்த கோரிக்கை எழுந்க போது நிதிநிலை சரியானவுடன் இவை கருத்தில் கொள்ளப்படும் என நிதியமைச்சர் மரியவில்சன் தெரிவித்திருந்தார். கூட்டுறவு துறையில் தமிழக கூட்டுறவு மாநில வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கி கட்டுப்பாட்டில் மாநிலம் முழுவதும் 22 மண்டல அலுவலகங்கள்,180 தொடக்க கூட்டுறவு வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கிகள் உள்ளன. இந்த வங்கிகள் மூலம் வாடிக்கையாளர்களுக்கு நகைக் கடன் வழங்கப்பட்டு வருகின்றன. தங்கம் விலை உயர்ந்ததால் தேசிய வங்கிகள், தனியார் வங்கிகள் நகைக் கடன் உச்சவரம்பா அதிகரித்தன. ஆனால் கூட்டுறவுத் துறையில் நகைக் கடன் உச்சவரம்பு அதிகரிக்கப்படாததால் வாடிக்கையாளர்கள் பாதிக்கப்பட்டனர். இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு, ஒரு கிராமுக்கு ரூ 10 ஆயிரமாக கூட்டுறவுத் துறை உயர்த்தியது. தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள், நகர கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் கடந்த திமுக ஆட்சியில் 31.03.2021-க்கு முன்பு பெறப்பட்ட நகைக் கடன்கள் மட்டுமே தள்ளுபடிக்குத் தகுதியானவை என சொல்லப்பட்டது. அந்த வகையில் 10.18 லட்சம் நபர்களின் நகைக் கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. அது போல் தவெக ஆட்சியிலும் நகைக் கடன் தள்ளுபடி செய்யப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.விவசாயிகளுக்கு தமிழக அரசின் “தீபாவளி ஜாக்பாட்”.. கடன் பெற்ற அனைவருக்கும் ரூ.75,000 வரை தள்ளுபடி!
தங்கத்தை அடகு வைக்க போறீங்களா? நகைக்கடனில் இந்த தவறுகளை மட்டும் செய்துடாதீங்க