Murders: 11 இல்லை! தீபாவளி அன்று 8 கொலைகள் மட்டுமே! தமிழக காவல் துறை விளக்கம்

  • சென்னை: தமிழகத்தில் தீபாவளி பண்டிகையின் போது ஒரே நாளில் 11 கொலைகள் நடந்திருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டியுள்ள நிலையில் 8 கொலைகள் மட்டுமே நடந்ததாக காவல் துறை விளக்கமளித்துள்ளது.

    Advertisement

    இதுகுறித்து காவல் துறை அளித்த விளக்கத்தில் கூறியிருப்பதாவது: கடந்த ஆண்டுகளிலும் தீபாவளி நாள்களில் கொலைகள் நடந்துள்ளன. கடந்த 2022-ஆம் ஆண்டில் 9 கொலைகள், 2023- ஆம் ஆண்டில் 4 கொலைகள், 2024ஆம் ஆண்டில் 10 கொலைகளும், 2025-ஆம் ஆண்டில் 6 கொலைகள் நடந்துள்ளன.

    Advertisement

    அதுபோல, கடந்த 2025-ஆம் ஆண்டில் 1,232 கொலைகள், 2026-ல் 1267 கொலைகள் நடந்திருக்கின்றன என்றும் தமிழ்நாடு காவல்துறை தனது செய்திக் குறிப்பில் கூறியிருக்கிறது.

    தமிழகத்தில் தீபாவளி நாளான ஞாயிற்றுக்கிழமை மட்டுமே 11 கொலைகள் நடந்ததாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன. தேனி எஸ்எஸ்ஐ செந்தில்குமார் உள்பட 11 பேர் அன்று ஒரே நாளில் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதாகவும் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிப்பதாகவும் அதிமுக, திமுக, அமமுக, நாதக, பாஜக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் விமர்சித்திருந்தன. அவை என்னென்ன என்பதை பார்க்கலாம்.

    தேனியில் எஸ்எஸ்ஐ அடித்துக் கொலை

    தேனி சமதர்புரம் பகுதியில் சாலையில் பட்டாசு வெடித்து ரீல்ஸ் எடுத்து கொண்டிருந்த கும்பலை எஸ்எஸ்ஐ செந்தில் குமார் தட்டி கேட்டதற்கு அவர் அந்த கும்பலால் அடித்துக் கொல்லப்பட்டார்.

    Advertisement

    மானாமதுரையில் இரு கொலைகள்

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் ஜாமீனில் வெளியே வந்த ரவுடி விக்னேஷ் வெட்டிக் கொல்லப்பட்டார். அது போல் கல்லல் அருகே நவீன் என்ற ரவுடியும் படுகொலை செய்யப்பட்டார்.

    திருவள்ளூரில் கொலை

    திருவள்ளூர் சென்றான்பாளையம் அருகே ஆந்திராவை சேர்ந்த மேகலா என்ற இளம்பெண் பிரசாத் என்பவரால் கத்தியால் குத்திக் கொல்லப்பட்டார்.

    கன்னியாகுமரி: பெண் காவலரை லாரி ஏற்றி கொலை செய்ய முயற்சி.. கனிமவள லாரி உரிமையாளர் அதிரடி கைது!

    வியாசர்பாடியில் ஒருவர் கொலை

    சென்னை வியாசர்பாடியில் முன்விரோதம் காரணமாக சிலம்பரசன் என்பவரை தாக்க வந்த கும்பல் வெட்டியதில் அவரது தம்பி தனுஷ் (18) என்பவர் உயிரிழந்தார்.

    Advertisement

    கடலூரில் ஒரு கொலை

    கடலூர் பெரியகட்டுப்பாளையம் பகுதியில் நண்பர்களுடன் மது அருந்தும் போது ஏற்பட்ட தகராறில் பிரித்திவிராஜ் என்ற இளைஞர் வெட்டிக் கொல்லப்பட்டார். இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்டதாக ரவுடி அருளரசு, அவரது தம்பி அன்பரசன் ஆகியோரை போலீஸார் தேடி வருகிறார்கள்.

    திருச்சியில் 3 பேர் கொலை

    திருச்சி சமயபுரம் டோல்கேட் அருகே கூலி வேலை செய்து வந்த இரு சிறுவர்கள் ராகுல், விஷால் ஆகிய இருவர் கொலை செய்யப்பட்டனர். திருச்சி புறத்தாக்குடி பகுதியில் கிறிஸ்டோபர் என்ற ஐடி ஊழியர் மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

    தலைநகரில் ஷாக்.. ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை செய்யப்பட்ட இளைஞர்! கொலையாளிகளைத் தேடும் போலீஸ்
    Advertisement

    கள்ளக்குறிச்சியில் ஒருவர் கொலை

    கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அருகே நின்னையூர் பகுதியில் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் பாலசுப்பிரமணியன் (65) பொது கிணற்றுக்கு தண்ணீர் பாய்ச்சுவது குறித்த முன்விரோதம் காரணமாக அவரது தம்பி மகன் தணிகைவேல் என்பவரால் கொல்லப்பட்டார்.

    குமரியில் ஒன்று!

    கன்னியாகுமரி திருவட்டார் பகுதியில் பாதை பிரச்சினை காரணமாக தாய்மாமன் ஜோதி (52) என்பவரை அவரது மருமகன் முருகேசன் கல்லை தூக்கி போட்டு கொலை செய்தார்.

    English Summary

    Tamil nadu Police claims that there was only 8 murders registered on Diwali festival. But oppositions are saying 11 murders in a single day.