டெல்லி போலீஸ் மாதிரியே.. தமிழ்நாடு போலீஸ்! நேம் பேட்ச் எங்கே? தவெக அரசுக்கு கேள்வி!

  • சென்னை: நேற்று முன்தினம் நாடாளுமன்றம் நோக்கி மாணவர்கள் பேரணியாக சென்றபோது டெல்லி போலீஸ் தடியடி நடத்தியிருந்தது. இதில் ஈடுபட்ட காவலர்கள் நேம் பேட்சை அணியாமல் இருந்தனர். அதேபோல இன்று தமிழகத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை கைது செய்த தமிழக போலீசாரும் நேம் பேட்ச் அணியாமல் இருந்துள்ளனர். இது விமர்சனங்களை ஏற்படுத்தியிருக்கிறது.

    Advertisement

    நீட், சிபிஎஸ்இ தேர்வு குளறுபடிகளுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ய வேண்டும் என்று மாணவர்கள், இளைஞர்கள் கரப்பான் ஜனதா கட்சியின் சார்பில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    Advertisement

    இந்த போராட்டம் நேற்று முன்தினம் உச்சக்கட்டத்தை எட்டியது. அதாவது, மாணவர்களும் இளைஞர்களும் நாடாளுமன்றம் நோக்கி பேரணியாக சென்றனர். காவல்துறையின் வைத்திருந்த தடுப்புகளை மீறி அவர்கள் முன்னேறி சென்றபோது.. போலீசார் தடியடி நடத்தினர். இதில் சுமார் 80க்கும் அதிகமானோர் பாடுகாயமடைந்தனர். போராட்டக்காரர்களை தடுக்க துணை ராணுவப்படையினர் பெல்லட் துப்பாக்கியை பயன்படுத்தியதாகவும் குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது.

    மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் தீவிர போராட்டங்களை முன்னெடுத்திருந்தனர்.

    இதன் தொடர்ச்சியாக தமிழ்நாட்டிலும் டெல்லி மாணவர்களுக்கு ஆதரவாக போராட்டங்கள் சூடுபிடிக்க தொடங்கியிருக்கின்றன. சென்னை, மதுரை, திருச்சி, தஞ்சை, திருவண்ணாமலை என பல்வேறு மாவட்டங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. ஆனால், மாணவர்களின் போராட்டத்திற்கு போலீசார் அனுமதி அளிக்கவில்லை. எனவே போராட்டத்தில் ஈடுபட்டவர்களை வலுக்கட்டாயமாக போலீசார் கைது செய்து வருகின்றனர்.

    Advertisement

    மதுரையில், காமராஜர் பல்கலைக்கழகத்திற்குள் நுழைந்து மாணவர் தலைவர்களை கைது செய்ய முயற்சிகள் நடந்தாக மாணவர் அமைப்புகள் குற்றம் சாட்டியுள்ளன.

    சென்னையில் மாணவர்களை கைது செய்த காவலர்கள் நேம் பேட்ச் அணியாமல் இருந்திருக்கின்றனர். அப்படியெனில், டெல்லி போலீசாரின் அணுகுமுறையை தமிழக போலீசும் பின்பற்றுகிறதா? அதற்கு முதலமைச்சர் விஜய் அனுமதியளித்துள்ளாரா? என்று பல்வேறு தரப்பினரும் கேள்விகளை எழுப்பியிருக்கின்றனர்.

    English Summary

    Tamil Nadu Police: Delhi Police resorted to a lathi-charge when students marched towards Parliament the day before yesterday; the officers involved were not wearing name badges. Similarly, Tamil Nadu police personnel who arrested students protesting in the state today were also not wearing name badges. This has drawn criticism.