6 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்.. திருச்சி உட்பட 4 மாவட்டங்களுக்கு புதிய எஸ்பிக்கள் நியமனம்!

  • சென்னை: தமிழக அமைச்சரவையில் புதிய அமைச்சர்கள் இன்று பொறுப்பேற்றிருக்கும் நிலையில், தற்போது 6 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டிருப்பதாக உத்தரவு வெளியாகியுள்ளது.

    Advertisement

    6 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றத்துடன், திருச்சி, பெரம்பலூர், தென்காசி, திருப்பத்தூர் என 4 மாவட்டத்திற்கு புதிய எஸ்பிக்கள் நியமனம் செய்யப்பட்டிருக்கின்றனர்.

    Advertisement

    புதிய உத்தரவின்படி, காத்திருப்போர் பட்டியலில் இருந்த செந்தில் குமாரி, சாலை பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து பிரிவு ஐஜியாக மாற்றப்பட்டிருக்கிறார். அதேபோல, ஊழல் தடுப்பு கண்காணிப்பு துறை எஸ்பி டோங்கரே பிரவின் உமேஷ், திருச்சி மாவட்ட எஸ்பியாக மாற்றப்பட்டிருக்கிறார்.

    இதுதவிர, திருப்பத்தூர் மாவட்ட எஸ்பி சியாமளா தேவி, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கெதிரான குற்றத்தடுப்பு பிரிவு எஸ்பியாகவும், கோவை நகர போக்குவரத்து துணை ஆணையராக இருந்த அசோக் குமார், தென்காசி மாவட்ட எஸ்பியாகவும், ஓசூர் சப்டிவிசன் ஏஸ்பி அக்சய் அனில் வக்காரே பதவி உயர்வு பெற்று திருப்பத்தூர் மாவட்ட எஸ்பியாகவும் மாற்றப்பட்டிருக்கின்றனர்.

    Advertisement

    மேலும், நாகர்கோவில் சப்டிவிசன் ஏஎஸ்பி லலித் குமார் பதவி உயர்வு பெற்று பெரம்பலூர் மாவட்ட எஸ்பியாகவும் மாற்றம் செய்யப்பட்டிருக்கின்றனர். திருச்சி மாவட்ட எஸ்பியாக இருந்த செல்வநாக ரத்தினம், பெரம்பலூர் மாவட்ட எஸ்பியாக இருந்த பிரபாகர் ஆகியோர் மாற்றப்பட்டு எந்த பொறுப்பும் வழங்கப்படவில்லை.

    English Summary

    As new ministers assume office in the Tamil Nadu Cabinet today, an order has been issued transferring six IPS officers. In addition to the transfer of these six IPS officers, new Superintendents of Police (SPs) have been appointed for four districts: Trichy, Perambalur, Tenkasi, and Tirupattur.