சென்னை: தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் ரவுடிகளுக்கு எதிராக அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி மொத்தம் 6,967 ரவுடிகளில் 6,540 பேருக்கு வார்னிங் செய்யப்பட்டுள்ளதோடு, 467 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர்.
தீபாவளி தினத்தன்று தமிழகத்தில் அதிகமான கொலைகள் நடந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இதுதொடர்பாக எதிர்க்கட்சியினர் முதல்வர் விஜய் தலைமையிலான அரசில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என்று கடுமையாக குற்றம்சாட்டி வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக நேற்று முன்தினம் (நவம்பர் 9), நேற்று (நவம்பர் 10) ஆகிய 2 நாட்கள் தமிழகத்தில் மாநிலம் முழுவதும் போலீசார் அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டனர். பல்வேறு குற்றவழக்குகளில் தொடர்புடையவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதோடு, ஜாமீனில் சென்றவர்களுக்கு வார்னிங் விடுக்கப்பட்டது. அதன்படி கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் தமிழகத்தில் மொத்தம் 6,947 ரவுடிகள் பிடிக்கப்பட்டனர். இதில் 467 பேர் கைது செய்யப்பட்டனர். 6,540 ரவுடிகளுக்கு வார்னிங் வழங்கப்பட்டதோடு, 303 பேர் நன்னடத்தை பிணை பத்திரம் எழுதி வாங்கப்பட்டது. 8,626 சரித்திர பதிவேடு குற்றவாளிகள் அதேவேளையில் கடந்த 48 மணிநேரத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கை தொடர்பாக தமிழக காவல்துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: '' நடவடிக்கை குற்றச் செயல்களை கட்டுப்படுத்துதல், போதைப்பொருள் விநியோக வலையமைப்புகளை தகர்த்தல் மற்றும் பொது அமைதியையும் சட்டம் ஒழுங்கையும் உறுதிப்படுத்துதல் ஆகிய நோக்கங்களுடன் மேற்கொள்ளப்பட்ட இந்த 48 மணி நேர நடவடிக்கையில் நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர். குற்றச் செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வந்த பலர் நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டனர். தமிழகம் முழுவதும் காவல்துறையினர் ஒருங்கிணைந்து 8,626 சரித்திரப் பதிவேடு குற்றவாளிகளை கண்காணித்து சோதனை செய்தனர். இதன் விளைவாக, 443 குற்றவாளிகள் உடனடியாகக் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டனர். மேலும், 796 தொடர் குற்றச் செயல்களில் ஈடுபடும் வழக்கமான குற்றவாளிகள் மீது நன்னடத்தை உறுதி நடவடிக்கை எடுக்கப்பட்டு அவர்கள் தீவிர கண்காணிப்பின் கீழ் கொண்டுவரப்பட்டனர். போதைப்பொருள் விற்றதாக 77 பேர் கைது போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனை, கொடுங்குற்றங்கள் ஆகியவற்றுக்கு எதிராக சமரசமற்ற வகையில், தமிழ்நாடு காவல்துறை இலக்கு நிர்ணயிக்கப்பட்ட தீவிர சோதனைகளை மேற்கொண்டது. இந்தச் சிறப்பு நடவடிக்கையின் போது, மாநிலம் முழுவதும் 1,624 போதைப்பொருள் குற்றவாளிகள் கண்காணிக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டனர். இதன் விளைவாக, சட்டவிரோதமாகப் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட 77 நபர்கள் கைது செய்யப்பட்டனர். 167 பேர் கைது பழிவாங்கும் நோக்கிலான குற்றங்களை தடுத்து, பொது அமைதியைப் பாதுகாக்கும் வகையில், கொலை மற்றும் காயம் ஏற்படுத்துதல் தொடர்பான வழக்குகளில் ஏற்கனவே தொடர்புடைய, சிறையிலிருந்து சமீபத்தில் விடுதலையானவர்கள் உட்பட 2,924 குற்றவாளிகள் தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டனர். இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையின் மூலம் 163 புதிய வழக்குகள் பதிவு செய்யப்பட்டதுடன், 167 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட்டனர். தீவிர வாகனச் சோதனைகளின் மூலம் போக்குவரத்து விதிகளை மீறிய ஆயிரக்கணக்கான வாகன ஓட்டிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. மாநிலம் முழுவதும் 2,865 மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டிய வழக்குகளும், 1,243 அதிவேகமாகவும் ஆபத்தான முறையிலும் வாகனம் ஓட்டிய வழக்குகளும், 998 நிர்ணயிக்கப்பட்ட வேக வரம்பை மீறிய வழக்குகளும்) பதிவு செய்யப்பட்டன. பொது இடத்தில் மதுஅருந்தியவர்கள் கைது குடியிருப்புப் பகுதிகள் மற்றும் வணிக வளாகங்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில், காவல்துறையினர் ட்ரோன்களைப் பயன்படுத்தி திறந்தவெளிகளில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் செயல்களை கண்காணித்து நடவடிக்கை மேற்கொண்டனர். இதன் அடிப்படையில், பொது இடங்களில் மது அருந்தியதற்காக 1,859 வழக்குகள் பதிவு செய்யப்பட்டதுடன், 195 நபர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டனர். அனைத்து மாவட்டங்கள் மற்றும் மாநகரங்களிலும் ட்ரோன் மூலம் கண்காணிப்புப் பணிகள் திறம்பட மேற்கொள்ளப்பட்டன. பிடியாணை நிறைவேற்றல் குற்றசம்பவங்கள் தொடர்பான அச்சுறுத்தல்கள் முறியடிப்பதற்கும் நீதிமன்ற உத்தரவுகளை நிறைவேற்றுவதற்கும், சிறப்புப் பிரிவுகள் மற்றும் உள்ளூர் காவல் நிலையங்கள் ஒருங்கிணைந்து செயல்பட்டன. ஆழமாக வேரூன்றிய குற்றவியல் குழுக்களுடன் தொடர்புடைய 1,057 குற்றவாளிகள், அவர்கள் குற்றச் செயல்களில் ஈடுபட்டு பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிப்பதற்கு முன்பாகவே காவல்துறையினரால் தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டனர். நீண்டகாலமாக நிலுவையில் இருந்த நீதிமன்ற நடவடிக்கைகளை விரைந்து முடிக்கும் வகையில், தலைமறைவாக இருந்த அல்லது நீதிமன்ற உத்தரவுகளுக்கு இணங்காத குற்றவாளிகளுக்கு எதிராகப் பிறப்பிக்கப்பட்ட 73 பிணையில் வெளிவர முடியாத பிடியாணைகள் (Non-Bailable Warrants NBW), இந்த இரண்டு நாள் சிறப்பு நடவடிக்கையின்போது நிறைவேற்றப்பட்டன. தமிழ்நாடு காவல்துறை, மாநிலத்தில் சட்டம் ஒழுங்கைப் பேணுதல், சமூக அமைதியை உறுதிப்படுத்துதல் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பைப் பாதுகாத்தல் ஆகியவற்றில் தனது உறுதியான அர்ப்பணிப்பை மீண்டும் வலியுறுத்துகிறது. பொது அமைதிக்கும் பாதுகாப்பிற்கும் குந்தகம் விளைவிக்க முயற்சிக்கும் எந்தவொரு சமூக விரோத சக்திகளுக்கும் எதிராகவும், இதுபோன்ற தீவிரமான, முன்னெச்சரிக்கை அடிப்படையிலான திடீர் சோதனை மற்றும் அதிரடி நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும்'' என கூறப்பட்டுள்ளது.
சமூக விரோத செயல்களில் ஈடுபடுவோருக்கு எதிராக இரண்டு நாட்கள் (நவம்பர் 9 மற்றும் நவம்பர் 10) தமிழ்நாடு காவல்துறை மாநிலம் தழுவிய சிறப்பு
யை மேற்கொண்டது. இந்த நடவடிக்கையின் போது 15,000-க்கும் மேற்பட்ட சமூக விரோத செயல்களில் ஈடுபடுவோர் மற்றும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் தீவிரமாக சோதனை செய்யப்பட்டன.