கூடுவாஞ்சேரி நிஷாவின் தலையை கொடுத்துடுங்க! சிகப்பு சூட்கேஸ் குறித்து ஆக்ரா போலீஸுக்கு கடிதம்

  • சென்னை: சென்னை கூடுவாஞ்சேரியில் கொலை செய்யப்பட்ட பெண்ணின் தலையையும் சூட்கேஸில் உள்ள அவரது உடல் பாகங்களையும் தருமாறு ஆக்ரா போலீஸாருக்கு தமிழக போலீஸார் கடிதம் எழுதியுள்ளனர்.

    Advertisement

    சென்னை கூடுவாஞ்சேரியில் பெண்ணை கொன்று பிரியாணி டபராவில் போட்டு சமைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இப்படியும் கொடூர புத்தி கொண்டவர்கள் இருப்பார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.

    Advertisement

    கடந்த ஆகஸ்ட் 2ஆம் தேதி சென்னை சென்ட்ரலில் இருந்து ஆக்ரா சென்ற தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில் ஒரு சிகப்பு நிற சூட்கேஸில் பெண்ணின் உடல் பாகங்கள் இருந்தது கண்டறியப்பட்டது.

    இதை கைப்பற்றிய ஆக்ரா போலீஸார் இந்த சம்பவம் குறித்து விசாரித்த போது பல்வேறு திடுக் தகவல்கள் கிடைத்தன. அதாவது ஒடிஸா மாநிலத்தைச் சேர்ந்த ஹயாதுன் நிஷா (38) என்பவர்தான் கொல்லப்பட்டவர். இவரை கொன்றுவிட்டு தலைமறைவாக இருந்த மாணிக் லஸ்கர், அவரது மனைவி ஒடிஸாவை சேர்ந்த பகபதி மாஜி ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

    இதில் மாணிக் லஸ்கர், மணிப்பூர் மாநிலம் ஜிரிபாம் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட நக்சல் ஆதிக்கம் நிறைந்த பகுதியில் பதுங்கியிருந்தது தெரியவந்தது. இதனால் ஏ.கே.47 துப்பாக்கியுடன் அவர் பதுங்கியிருந்த பகுதிக்கு போலீஸார் சென்றனர். அப்போது போலீஸாரை பார்த்ததும் மாணிக் லஸ்கர் தப்பியோடினாராம். எனினும் அவரை எப்படியோ துரத்தி பிடித்தனர்.

    Advertisement

    அவர் கொடுத்த தகவலின்பேரிலே பகபதி மாஜியும் கைது செய்யப்பட்டார். ஹயாதுன் நிஷா கொலை குறித்து மாணிக் லஸ்கரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் தெரியவந்தது. அவர் அளித்த வாக்குமூலத்தில், நிஷாவுக்கும் மாணிக்கிற்கும் தகாத உறவு ஏற்பட்டதாம்.

    இந்த நிலையில் நிஷா கர்ப்பமான நிலையில் அவர் மாணிக்கிடம் போய் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கேட்டாராம். அதற்கு மாணிக், தனக்கு ஏற்கெனவே திருமணமாகி மனைவி இருப்பதால், திருமணம் செய்து கொள்ள முடியாது என மறுத்தாராம். இதனால் கோபமடைந்த ஹயாதுல் நிஷா, மாணிக்கையும் பகபதியையும் மிரட்டினாராம்.

    இதனால் நிஷாவை எப்படி கொலை செய்வது அவரது உடலை எப்படி கூறுபோடுவது என்பதை யூடியூப் வீடியோ பார்த்து கற்று கொண்டு அதை அப்படியே செயல்படுத்தினராம்.

    Advertisement

    சடலத்தை கூறு போட்டதும் அதில் இருந்து துர்நாற்றம் வீசக் கூடாது என்பதற்காக அந்த துண்டாக்கப்பட்ட உடல் உறுப்புகளில் வினிகரை ஊற்றி சமைக்க முற்பட்டனராம்.

    இதனிடையே இந்த கொலை குறித்தும் தாங்கள்தான் சூட்கேஸை ரயிலில் வைத்தது என்பது குறித்தும் போலீஸாருக்கு தகவல் கிடைத்த நிலையில் வெட்டி கூறு போட்டப்பட்ட நிஷாவின் உடல் பாகங்களை அப்புறப்படுத்தாமல், பிரியாணி அண்டாவில் காய்கறிகள், அரிசி சேர்த்து சமைத்தனராம். அது போல் சூட்கேஸில் சில உடல் பாகங்களை வைத்து எப்படி என்பது குறித்து நடித்து காட்ட இருவரையும் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு போலீஸார் அழைத்துச் சென்றனர்.

    Advertisement

    அங்கு அவர்கள் எப்படி பெட்டியை வைத்தனர் என்பதை நடித்து காட்டினர். அது போல் அவர்களது கூடுவாஞ்சேரி வீட்டிற்கு இருவரையும் அழைத்துச் சென்ற போலீஸார், அங்கு நிஷாவை எப்படி கொலை செய்தனர் என்பது குறித்தும் தம்பதி நடித்து காட்டினர்.

    இதையடுத்து அவர்களிடம், நிஷாவின் தலை எங்கே என போலீஸார் கேட்டதற்கு, தலையை சிவப்பு நிற சூட்கேஸில் வைத்து ஆக்ரா ரயிலில் அனுப்பியதாக தம்பதி தெரிவித்தனர். இதையடுத்து ஆக்ரா ரயிலில் வந்த சிகப்பு நிற சூட்கேஸில் வந்த உடல் பாகங்களையும் தலையையும் தந்துவிடுமாறு ஆக்ரா போலீஸுக்கு தமிழக போலீஸார் கடிதம் எழுதியுள்ளனர்.

    English Summary

    Tamil nadu Police writes letter to Agra police regarding the red suitcase in which Nisha's body parts and head sealed at.