சென்னை: இந்திய அளவில் பிரபலமான ஒரு கட்சியைச் சேர்ந்த முக்கிய நிர்வாகி பதவியில் இருந்து வெளியேறி இருக்கிறார். இல்லை.. இல்லை வெளியேற்றப்பட்டு இருக்கிறார். கட்சியிலும் ஆட்சியிலும் கில்லி மாதிரி வலம் வந்தவர் தற்போது டம்மியாக இருக்கிறார். இதற்கெல்லாம் காரணம் கோடம்பாக்கம் மாஃபியா என்கின்றனர்.
இஞ்சினியரிங் படித்த அல்லக்கை ஒருவர் மூலம் அந்த புள்ளிக்கு அறிமுகமான கலகல டான்ஸ் மாஸ்டர், இட்லி நடிகை மற்றும் தில்லானா நடிகை தான் அவர் பதவி பறிபோனதற்கு காரணம் என்கின்றனர் டெல்லி அரசியலை உன்னிப்பாகக் கவனிக்கும் அரசியல் புள்ளிகள்.
"கொடுக்குற தெய்வம்.. கூரைய பிச்சிகிட்டு கொடுக்கும்" என்பார்கள். அப்படி அட்ரஸ் இல்லாமல் இருந்த ஒரு இளைஞர் திடீரென தேசிய அரசியலில் பிரபலமாக தொடங்கினார். அவர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. தேசிய கட்சி ஒன்றின் தலைவராகவும், பின்னர் எம்பி, அமைச்சர் என பல பதவிகளை வகித்தவர். திடீரென தனது பதவியை பறிகொடுத்திருக்கிறார். ராஜினாமா செய்வதாக சொன்னாலும் உண்மையில் அவர் வெளியேற்றப்பட்டு இருக்கிறார் என்கின்றனர் விவரம் அறிந்த அரசியல் புள்ளிகள். இந்தியாவின் பெரும் புள்ளியும், சாணக்கியரும் அவர் வீட்டுக்கு செல்வதை வழக்கமாக வைத்திருந்த நிலையில், கோடம்பாக்கம் சகவாசத்தால் தற்போது நடுரோட்டுக்கு வந்திருக்கிறார் என்கின்றனர். கட்சிக்கு பின்னணியில் செயல்படும் அமைப்பு ஒன்றில் பயணித்த அவரை தேசிய அளவில், கமிஷன் ஒன்றின் துணைத் தலைவராக்கி அழகு பார்த்தது டெல்லி தலைமை. பின்னர் கட்சியின் முக்கிய முகமாகவும் அவரை முன்னிறுத்தியது. இவரும் தமிழகம் முழுவதும் 'சில பல' வேலைகளை பார்த்தார். ஆனால் ஒன்றும் எடுபடவில்லை. இதை அடுத்து அவரை டெல்லிக்கு மாற்றி விட்டு தலைமை பதவிக்கு ஒரு இளைஞரை களம் இறக்கியது. இதற்கிடையே டெல்லியில் சினிமா அவார்டு சார்ந்த துறைகளை கவனித்து வந்த அந்த முக்கிய புள்ளி, நடிகர் நடிகைகளுடன் பலமான தொடர்பை ஏற்படுத்திக் கொண்டார். என்ஜினியரிங் பட்டதாரி ஒருவரை தனது பிஏவாகவும் அமர்த்தி கொண்டார். அப்போதுதான் அவருக்கு ஏழரை ஆரம்பித்தது. சினிமா பிஆர்ஓ மூலம் சில நடிகர் நடிகைகளை அந்த பிஏ அந்த அரசியல் புள்ளிக்கு அறிமுகப்படுத்தி இருக்கிறார். குறிப்பாக கலகலப்பான டான்ஸ் மாஸ்டர் ஒருவர், பல கட்சிகளில் பயணித்த இட்லி நடிகை, உச்ச நட்சத்திரம் உடன் தில்லானா பாடிய நடிகை அந்த அரசியல் புள்ளிக்கு மிகவும் நெருக்கமாக இருந்திருக்கிறார்கள். அது மட்டும் அல்லாமல் கட்சி மற்றும் அரசு நிகழ்ச்சிகளில் இந்த மூவரும் தங்கள் ஆதிக்கத்தை செலுத்தி இருக்கிறார்கள். மேலும், கட்சியின் நிழல் அமைப்பு ஒன்றின் தலைவர் வீட்டிலும் இவர்கள் உலா வந்திருக்கிறார்கள். தமிழகத்துக்கும் டெல்லிக்கும் தாங்கள் தான் பாலம் என்பது போல இவர்கள் நடந்து கொண்டதாக சொல்லப்படுகிறது. இவர்களை வைத்துதான் அந்த அரசியல் புள்ளி பல காரியங்களை சாதித்துக் கொண்டாராம். மேலும் அடிக்கடி சில அரசியல் புள்ளிகள் 'அந்த' அரசியல் புள்ளியின் வீட்டுக்கு வந்து நடிகைகளுடம் ஆலோசனை நடத்தி விட்டு போயிருக்கிறார்கள். அதனை 'ஹனி டிராப்' வீடியோக்களாக எடுத்து வைத்ததாகவும் சொல்லப்படுகிறது. அந்த வீடியோக்களை வைத்து பல பதவிகளையும் பல கோடிகளையும் அரசியல் புள்ளி வளைத்து போட்டுக் கொண்டாராம். மேலும் இதற்கு கைமாறாக அரசு நிறுவனங்களிலும் சில பல நிகழ்ச்சிகளிலும் கோடிக்கணக்கான ரூபாய் வரும் அளவுக்கு கோடம்பாக்கம் குரூப்பைக் கவனித்துக் கொண்டாராம் அரசியல் புள்ளி. இதனால் தங்கள் தான் எல்லாமே என அந்த கோடம்பாக்கம் குரூப் கொடிகட்டி பறக்க. 'சாணக்கியர்' இந்த விவகாரத்தை கையில் எடுத்திருக்கிறார். தமிழகத்தைச் சேர்ந்த சில புள்ளிகள் சாணக்கியரின் கவனத்திற்கு இந்த தகவலை எடுத்துச் செல்ல.. ஏஜென்சிகள் மூலம் ரகசிய கண்காணிப்பு வளையத்தில் வந்திருக்கிறார் அரசியல் புள்ளி. புகார்கள் வந்தது உண்மைதான்.. தங்களிடம் ஆதாரம் இருக்கிறது என சாணக்கியிடம் ஏஜென்சிகள் சொல்லி வைக்க முதலில் பிஏவையும், கோடப்பாக்கம் குரூப்பையும் வெளியேற்ற வேண்டும் என சொல்லியிருக்கிறார் சாணக்கியர். ஆனால் ருசிகண்ட பூனையான அந்த அரசியல் புள்ளி இதற்கு ஒத்துக் கொள்ளவில்லையாம். இதனால்தான் பல ஆண்டுகால பதவி இருந்தும்.. உடனடியாக வெளியேறிவிடுங்கள் இல்லையென்றால் 'களி' திங்க வேண்டி இருக்கும் என சாணக்கியர் சொன்னதால் தற்போது பதவி பறிபோகி இருக்கிறது என்கின்றனர். இது மட்டுமில்லாமல் ஹனி டிராப் வீடியோக்களை ஏஜென்சிகள் கைப்பற்றி சாணக்கியரிடம் கொடுத்து இருக்கிறதாம். இதனால் கலக்கத்தில் இருக்கிறது கோடம்பாக்கம் குரூப் என்கின்றனர்.உங்க கட்சி மாதிரி நினைச்சீங்களா? மேடையிலயே கண்டிச்சாரே கனிமொழி! கீர்த்தனாவுக்கு திமுக மகளிரணி பதிலடி
பதவி வாங்கித் தருவதாக பலாத்காரம்.. கலைந்து போன கரு! தவெக ஒன்றிய செயலாளர் மீது பெண் பரபர புகார்!