தவெக அரசின் காலை சுற்றும்.. மின்வெட்டு பிரச்சனை! என்ன செய்யப்போகிறார் விஜய்? நிர்மல்குமார் விளக்கம்

  • சென்னை: ஏராளமான சவால்களோடு தவெக அரசு புதியதாக பொறுப்பேற்றிருந்தது. இப்படி இருக்கையில், மின்வெட்டு பிரச்சனை பெரியதாக வெடித்திருக்கிறது. இந்த பிரச்சனையை சரி செய்ய எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் என்ன என்பது குறித்து மின்சாரத்துறை அமைச்சர் நிர்மல்குமார் விளக்கமளித்துள்ளார்.

    Advertisement

    தமிழ்நாட்டில் ஒவ்வொரு கோடை காலத்திலும் மின்வெட்டு பிரச்சனை தீவிரமாக இருக்கும். இந்த கோடையிலும் பிரச்சனை கையை மீறி சென்றிருக்கிறது. புதிய அரசு பொறுப்பேற்றிருப்பதால், நிர்வாக ஒழுங்குமுறையில் ஏற்பட்டிருக்கும் தொய்வு இதற்கு காரணமாக சொல்லப்படுகிறது.

    Advertisement

    சென்னையில் பல்வேறு பகுதிகளில் திடீர் மின்வெட்டு மற்றும் நீண்ட நேர மின்வெட்டு மக்களை பாதித்திருக்கிறது. ஒரு கட்டத்திற்கு மேல் டென்ஷன் ஆன மக்கள், நேரடியாக துணை மின் அலுவலகங்களை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டிருந்தனர். இப்படி இருக்கையில், இந்த பிரச்சனையை சரி செய்வது குறித்து அமைச்சர் நிர்மல்குமார் இன்று செய்தியாளர்களை சந்தித்து விளக்கமளித்திருந்தார்.

    தமிழ்நாட்டில் மின் பற்றாக்குறை இல்லை என்றும், போதிய அளவு மின்சாரம் இருப்பதாகவும் அவர் தெரிவித்திருந்தார். அதேநேரம், பழைய மின்மாற்றிகள், சேதமடைந்த மின்கம்பங்கள்தான் மின்வெட்டுக்கு காரணம் என்றும் கூறியிருந்தார். மேலும், மின்துறையை சீரமைக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம் என்றும், 1.4 லட்சம் பேர் பணியாற்ற வேண்டிய இடத்தில் வெறும் 40 ஆயிரம் பேர்தான் இருக்கிறார்கள் எனவும் நிர்மல்குமார் கூறியிருக்கிறார்.

    English Summary

    The new TVK government had assumed office amidst numerous challenges. Against this backdrop, the issue of power outages has erupted into a major crisis. Minister Nirmalkumar has provided an explanation regarding the measures that need to be taken to resolve this issue.