மின் துறை வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு உச்ச விலையில் மின்சாரம் வாங்க ஒப்பந்தம்.. ஒரு யூனிட் ரூ.35!

  • சென்னை: தமிழ்நாடு மின்சாரத் துறை வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு உச்ச விலையில் வெளிச் சந்தையில் இருந்து மின்சாரம் வாங்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அக். 12 முதல் 31 ஆம் தேதி வரை 1500 மெகா வாட் மின்சாரம், யூனிட்டுக்கு சராசரியாக ரு.35 என்ற விலையில் வாங்கப்பட்டுள்ளது.

    Advertisement

    இதே கால கட்டத்தில் 150 மெகாவாட் மின்சாரத்தை யூனிட்டுக்கு ரூ.16 - ரூ.20 விலையில் ஆந்திரப் பிரதேசம் வாங்குகிறது. மின் தேவையை கணித்து கடந்த மாதமே இதற்கான ஒப்பந்தம் செய்ததால் குறைந்த விலையில் அவர்களுக்கு கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    Advertisement

    சென்னை தொடங்கி தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் அறிவிக்கப்படாத மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் அனைத்துத் தரப்பு மக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். தவெக அமைச்சர்கள் பங்கேற்ற நிகழ்ச்சிகளிலேயே மின் வெட்டு ஏற்பட்டது. தமிழ்நாட்டின் தலைமைச் செயலகத்திலும் இன்று திடீர் மின் தடை ஏற்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

    கடுமையான மின்சார தட்டுப்பாட்டையடுத்து மின் தேவையை சமாளிக்க வெளிசந்தையில் குறு கால அடிப்படையில் மின்சாரத்தை வாங்க தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் திட்டமிட்டது. 4,500 மெகாவாட் மின்சாரத்தை வெளிச் சந்தையில் கொள்முதல் செய்ய கடந்த வாரம் டெண்டர் கோரியது மின்சார வாரியம்.

    Advertisement

    இந்த டெண்டரின் அடிப்படையில், தனியார் நிறுவனங்கள் ஒரு யூனிட் மின்சாரத்தை 31 ரூபாய் 99 காசுகள் முதல் 37 ரூபாய் வரை விற்பனை செய்ய தயாராக இருப்பதாக தெரிவித்து விண்ணப்பித்திருந்தன. இதனையடுத்து, மின்வாரிய அதிகாரிகள் தீவிர ஆலோசனை மேற்கொண்டு, இறுதியாக ஒரு யூனிட் மின்சாரத்தை 35 ரூபாய்க்கு கொள்முதல் செய்யும் வகையில் டெண்டரை இறுதி செய்து ஒப்பந்தம் செய்துள்ளனர்.

    மின்சார தேவையை ஈடுகட்ட, மிக அதிக விலையில், ஒரு யூனிட் ரூபாய் 35க்கு வாங்க உள்ளது தமிழக மின் வாரியம். மின்சார வாரியம் எடுத்துள்ள இந்த நடவடிக்கை காரணமாக, வரும் நாட்களில் மின்வெட்டு பிரச்சனை பெருமளவு குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    Advertisement

    அக். 12 முதல் 31 ஆம் தேதி வரை 1500 மெகா வாட் மின்சாரம், யூனிட்டுக்கு சராசரியாக ரு.35 என்ற விலையில் வாங்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு மின்சாரத் துறை வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு உச்ச விலையில் வெளிச் சந்தையில் இருந்து மின்சாரம் வாங்கப்படுவது இப்போதுதான்.

    இதே கால கட்டத்தில் 150 மெகாவாட் மின்சாரத்தை யூனிட்டுக்கு ரூ.16 - ரூ.20 விலையில் ஆந்திரப் பிரதேசம் வாங்குகிறது. மின் தேவையை கணித்து கடந்த மாதமே இதற்கான ஒப்பந்தம் செய்ததால் குறைந்த விலையில் அவர்களுக்கு கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    English Summary

    Reports indicate that an agreement has been reached to purchase electricity from the open market at a record-high price, Rs.35 per unit, unprecedented in the history of Tamil Nadu's power sector. In contrast, during the same period, Andhra is purchasing 150 MW of power at rates ranging from ₹16 to ₹20 per unit.