ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு.. ஊழியர்கள் ஸ்ட்ரைக்.. 3 நாட்கள் ரேஷன் கடைகள் இயங்காது!

  • சென்னை: தமிழ்நாடு முழுவதும் ரேஷன் கடை ஊழியர்கள் 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 3 நாட்கள் தொடர் வேலைநிறுத்தம் போராட்டத்தில் ஈடுபடபோவதாக அறிவித்துள்ளனர். வரும் நவம்பர் 2, 3, 4 ஆகிய நாட்களில் ஸ்ட்ரைக் அறிவிக்கப்பட்டுள்ளதால் பெரும்பாலான ரேஷன் கடைகள் இயங்காது எனத் தெரிகிறது.

    Advertisement

    தமிழகம் முழுவதும் 26 ஆயிரத்து 618 முழுநேர கடைகள், 10 ஆயிரத்து 710 பகுதிநேர கடைகள் என மொத்தம் 37 ஆயிரத்து 328 ரேஷன் கடைகள் இயங்கி வருகின்றன. தமிழக ரேஷன் கடைகளில், 2.21 அரிசி கார்டுதாரர்களுக்கு மாதந்தோறும் இலவச அரிசி வழங்கப்பட்டு வருகிறது. மேலும், கோதுமை, பருப்பு, உப்பு, சேமியா உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களும் விநியோகம் செய்யப்படுகின்றன.

    Advertisement

    இந்நிலையில் தமிழகம் முழுவதும் ரேஷன் கடை ஊழியர்கள் 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 3 நாட்கள் தொடர் வேலைநிறுத்தம் போராட்டத்தில் ஈடுபடபோவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

    தமிழ்நாடு அரசு நியாய விலைக்கடை பணியாளர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் கூட்டுறவுத் துறை கட்டுப்பாட்டில் இயங்கி வரும் நியாய விலைக்கடைகளில் பணிபுரியும் நியாய விலைக்கடை பணியாளர்களின் நீண்ட கால கோரிக்கையான அத்தியாவசிய பொருள்கள் அனைத்தும் பொட்டலமாக வழங்குதல் பலதுறை கட்டுப்பாட்டில் செயல்படும் பொது விநியோகத் திட்டத்திற்கென தனித்துறையை உருவாக்க வேண்டும், அனைத்து நியாய விலைக்கடைகளுக்கும் எடையாளரை நியமனம் செய்யப்பட வேண்டும், கல்வித் தகுதியற்ற ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற நவம்பர் 2, 3, 4 ஆகிய தேதிகளில் தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளது.

    Advertisement

    இந்த மூன்று நாட்கள் வேலைநிறுத்தமும், முதல் நாளில் மாவட்ட தலைநகரங்களிலும், 2-வது நாளில் கோட்ட அளவிலும், 3-வது நாளில் வட்ட அளவிலும் ஆர்ப்பாட்டமும் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    12 அம்சக் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி பல கட்ட போராட்டங்கள், பேச்சுவார்த்தைகள் நடத்தி எவ்வித தீர்வு எட்டப்படாததால் வேலை நிறுத்த போராட்டம் செய்யும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.

    கோரிக்கைகள் குறித்து இதுநாள் வரை எந்தவித முன்னேற்றமான செய்தியும் வெளிவராத காரணத்தினால் அடுத்த கட்ட போராட்டமாக வரும் நவம்பர் 2,3,4 தேதிகளில் தொடர் வேலை நிறுத்தம் செய்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும் தமிழ்நாடு நியாயவிலைக்கடை பணியாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

    Advertisement
    Diwali: தீபாவளிக்கு ரேஷன் கடைகளில் மளிகை பொருட்கள் சிறப்பு தொகுப்பு? தமிழக அமைச்சரவையில் முடிவு?

    ரேஷன் ஊழியர்களின் முக்கியக் கோரிக்கைகள்:

    * +2 கல்வித் தகுதியுடைய விற்பனையாளர் இன்றும் ஒரு அலுவலக உதவியாளர் ஊதியம் கூட பெற முடியாத சூழல் நிலவி வருகிறது. 10ஆம் வகுப்பு கல்வித் தகுதியுள்ள எடையாளருக்கும் (Packers) கிராம உதவியாளர் ஊதியம் கூட பெற முடியாமல் இருக்கிறார்கள். 9வது ஊதிய மாற்றக்குழுவில் ரேஷன் ஊழியர்கள் சேர்க்கப்பட வேண்டும்.

    * தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக எடை தராசும், நியாய விலைக்கடைகளில் உள்ள விற்பனை முனையத்தையும் புளுடூத் முறையில் இணைத்து சரியான எடையில் அனைத்து பொருள்களும் பொட்டலமாக வழங்க வேண்டும்.

    Advertisement

    * அனைத்து நியாய விலைக்கடைகளுக்கும் எடையாளரை நியமனம் செய்யப்பட வேண்டும்.

    * ரேஷன் கடைகளுக்கு விநியோகிக்கப்படும் பொருட்களின் தரம் மற்றும் கொள்முதல் நடைமுறைகளில் உள்ள குறைபாடுகளுக்கு, கடைநிலை ஊழியர்களை மட்டும் தண்டிப்பதோ அல்லது பழிவாங்குவதோ கூடாது என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டுள்ளது.

    * நியாய விலைக்கடை பணியாளருக்கு தனியாக நிதி ஒதுக்கி மாதாமாதம் ஊதியம் வழங்க வேண்டும்.

    * ஓய்வூதியம் ரூ. 10,000 வழங்கப்பட வேண்டும்.

    * நியாயவிலைக் கடைகளின் செயல்பாடுகளை மேம்படுத்த பொது விநியோகத் திட்டத்திற்கென (PDS) தனியாக ஒரு துறையை உருவாக்க வேண்டும்.

    * நியாய விலைக்கடைகளில் கழிப்பிட வசதி செய்து தரப்பட வேண்டும்

    Advertisement

    * அவர்கள் ஊதியத்தில் பிடித்தம் செய்யும் வருங்கால வைப்பு நிதியை அலுவலகத்தில் செலுத்தப்பட வேண்டும்.

    கடந்த சில மாதங்களாகத் தங்களின் கோரிக்கைகள் குறித்து அரசிடமிருந்து எவ்வித சாதகமான முடிவுகளும் அறிவிக்கப்படாததால், அடுத்த கட்ட நடவடிக்கையாக இந்த மூன்று நாள் தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தை ஊழியர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

    இதற்கிடையே இந்த 3 நாட்கள் தொடர் போராட்டத்தின் காரணமாக தமிழகம் முழுவதும் உள்ள நியாயவிலைக் கடைகளின் செயல்பாடுகள் மற்றும் பொதுமக்களுக்கான அத்தியாவசியப் பொருட்கள் விநியோகம் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது எனத் தெரிகிறது.

    English Summary

    Across Tamil Nadu, ration shop employees have announced a three-day continuous strike to press for a list of demands. As the strike is scheduled for November 2, 3, and 4, most ration shops will remain closed.