குடும்ப அட்டைதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு.. நாளை வெள்ளிக்கிழமை ரேஷன் கடைகள் இயங்குமா?

  • சென்னை: வரும் ஞாயிற்றுக்கிழமை அன்று தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட இருக்கும் நிலையில், தமிழ்நாட்டில் நாளை (வெள்ளிக்கிழமை) ரேஷன் கடைகள் அனைத்தும் இயங்கும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.

    Advertisement

    தமிழ்நாடு முழுவதும் 26 ஆயிரத்து 618 முழுநேர கடைகள், 10 ஆயிரத்து 710 பகுதிநேர கடைகள் என மொத்தம் 37 ஆயிரத்து 328 ரேஷன் கடைகள் இயங்கி வருகின்றன. தமிழக ரேஷன் கடைகளில், 2.21 அரிசி கார்டுதாரர்களுக்கு மாதந்தோறும் இலவச அரிசி வழங்கப்பட்டு வருகிறது. மேலும், கோதுமை, பருப்பு, உப்பு, சேமியா உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களும் விநியோகம் செய்யப்படுகின்றன.

    Advertisement

    தமிழ்நாட்டில் ஒவ்வொரு முதல் மற்றும் இரண்டாவது வெள்ளிக்கிழமைகள் விடுமுறை நாளாகவும், அதற்கு பதிலாக ஞாயிற்றுக்கிழமைகள் வேலை நாளாகவும் இருக்கும் நிலையில், இந்த ஆண்டு தீபாவளிப் பண்டிகை ஞாயிற்றுக்கிழமை வருவதால், வெள்ளிக்கிழமை நியாய விலைக் கடைகள் செயல்படுமா என்ற கேள்வி மக்களிடையே எழுந்தது.

    இந்நிலையில், தமிழ்நாடு அரசின் உணவுப் பொருள் வழங்கல் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், நாளை வெள்ளிக்கிழமை, தமிழ்நாடு முழுவதும் அனைத்து ரேஷன் கடைகளும் இயங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    1500 கிலோ ரேஷன் அரிசி கடத்தல்! தடுக்க முயன்ற கம்பம் தவெக எம்எல்ஏவை கார் ஏற்றி கொல்ல முயற்சி!
    Advertisement

    தமிழகத்தில் செயல்படும் நியாய விலைக் கடைகளுக்கு மாதத்தின் முதல் மற்றும் இரண்டாம் வெள்ளிக்கிழமை விடுமுறை நாள். அதுபோல, மாதத்தின் முதல் மற்றும் இரண்டாம் ஞாயிற்றுக் கிழமை வேலை நாள்கள் என்பது நடைமுறையில் இருந்து வருகிறது.

    எனவே, எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (08.11.2026) அன்று தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுவதை முன்னிட்டு குடும்ப அட்டைதாரர்கள் அத்தியாவசியப் பொருள்கள் பெறுவதற்கு ஏதுவாக இம்மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமையான (06.11.2026) அன்று தமிழகத்தில் உள்ள அனைத்து நியாய விலைக் கடைகளுக்கும் வேலை நாளாக அறிவிக்கப்படுகிறது என்று உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை ஆணையர் அறிவித்துள்ளார் என்று கூறப்பட்டுள்ளது.

    English Summary

    With the Diwali festival set to be celebrated this coming Sunday, it has been announced that all ration shops in Tamil Nadu will remain open tomorrow (Friday).