கடன் வாங்கும் அளவை 21 சதவீதம் குறைந்த தமிழ்நாடு.. சென்ற ஆண்டை ஒப்பிடும் போது உண்மை என்ன?

  • சென்னை: 2026-27 நிதியாண்டின் முதல் அரையாண்டில் வளர்ச்சித் திட்டங்களுக்காகக் கடன் வாங்குவதை தமிழ்நாடு அரசு கணிசமாக குறைத்திருப்பதாக புள்ளி விவரங்கள் வெளியாகி உள்ளன. கடந்த ஆண்டுகளில் நாட்டில் அதிகம் கடன் வாங்கும் மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாடு இரண்டாமிடத்தில் இருந்த நிலையில், நடப்பு நிதியாண்டின் அரையாண்டில் (ஏப்ரல் - செப்டம்டர்) வளர்ச்சித் திட்டங்களுக்காகக் கடன் வாங்கும் விகிதத்தை தமிழ்நாடு அரசு 21 சதவிகிதம் குறைத்துள்ளது.

    Advertisement

    கடந்த 2025-26 முதல் அரையாண்டு காலக்கட்டதில் ரூ. 51,300 கோடியாக இருந்த கடன்தொகை, 2026-27 நிதியாண்டின் முதல் அரையாண்டில் நி ரூ. 40,500 கோடியாகச் சரிந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதன்மூலம், அதிகம் கடன் வாங்கும் மாநிலங்களின் பட்டியலில் இரண்டாம் இடத்தில் இருந்து ஐந்தாம் இடத்துக்கு தமிழ்நாடு இறங்கியிருப்பதாகவும் அரசு வட்டாரங்கள் கூறுகின்றன. மாநில அரசு பத்திரங்கள் மூலம் பெறற கடன்கள் 21 சதவீதம் குறைந்துள்ளது.

    Advertisement

    அதிகம் கடன் வாங்கும் பட்டியலில் தற்போது முதலிடத்தில் மகாராஷ்டிரமும், இரண்டாமிடத்தில் ஆந்திர பிரதேசமும், மூன்றாமிடத்தில் தெலங்கானாவும், நான்காமிடத்தில் ராஜஸ்தானும், ஐந்தாமிடத்தில் தமிழ்நாடும் இருப்பதாக புள்ளி விவரங்கள் மூலம் சுட்டிக்காட்டப்படுகிறது. தமிழ்நாடு அரசு திடீரென கடன் வாங்க வேண்டிய தேவை குறைந்ததற்கு ஜிஎஸ்டி வரி வசூல், சீரான வரி வருவாய், மத்திய அரசிடமிருந்து தடையின்றி கிடைத்த வரிப் பங்கீடு ஆகியவற்றால் கடன் தேவை குறைந்ததாக சொல்லப்படுகிறது. எனினும் இருப்பினும், அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான மூன்றாம் காலாண்டில் ரூ. 48,000 கோடி கடன் வாங்கவும் மாநில அரசு திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.

    Advertisement

    தமிழ்நாட்டின் மொத்தக் கடன் ₹13.18 லட்சம் கோடியாக இருக்கிறது. இதில் நேரடிக் கடன் ₹10 லட்சம் கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது. பொதுத்துறை நிறுவனங்களின் கடன் ₹3.18 லட்சம் கோடியாக இருக்கிறது. இதில் மின்சாரத் துறை கடன் ₹2.47 லட்சம் கோடியாகும். போக்குவரத்து நிறுவனங்கள் கடன் ₹43,865 கோடியாகும். குடிமைப் பொருள் வழங்கல் கழகம் கடன் ₹27,181 கோடியாகும்.

    எனினும் எதிர்க்கட்சிககள் இது தவறான தகவல் என்று குற்றம்சாட்டுகிறார்கள். இதுபற்றி அவர்கள் கூறுகையில், தமிழ்நாட்டின் நிதி நிலை அறிக்கைகள் மற்றும் ரிசர்வ் வங் வெளியிடும் மாநிலங்களின் நிதிநிலை குறித்த புள்ளிவிவரங்களின்படி, அரசின் கடன் அளவு ஆண்டுதோறும் அதிகரித்துக்கொண்டே செல்கிறதே தவிர, ஒட்டுமொத்தமாகப் பெருமளவு குறையவில்லை. மாநிலத்தின் மூலதனச் செலவுகளுக்காகவும், பழைய கடன்களை அடைப்பதற்காகவும் தொடர்ந்து புதிய கடன்கள் பெறப்படுகின்றன.

    Advertisement

    சில குறிப்பிட்ட சில மாதங்களின் சந்தைக் கடன் அளவை மட்டும் காட்டி, ஒட்டுமொத்த அரசு கடன் குறைந்துவிட்டதாகக் காட்டுவது முழுமையான உண்மையைத் தராது. காலாண்டு வாரியான சந்தைக் கடன் எடுக்கும் அளவுகளில் ஏற்ற இறக்கங்கள் இருப்பது இயல்பே. இந்தியாவின் அதிக கடன் பெற்ற மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாடு தொடர்ந்து முதல் சில இடங்களுக்குள் (பொதுவாக முதல் இடத்திலோ அல்லது முன்னணியிலோ) தான் உள்ளது. ரிசர்வ் வங்கியின் சமீபத்திய தரவுகளின்படி இந்தியாவின் மொத்த மாநிலங்களின் கடன் சுமையில் தமிழ்நாடு எப்போதும் அதிக கடன் உள்ள மாநிலங்களில் ஒன்றாகவே இருந்து வருகிறது. 5வது இடத்திற்குச் சென்றுவிட்டது என்பது தவறான புள்ளிவிவரம் என்று குற்றம்சாட்டுகிறார்கள். எனினும் இறுதியான புள்ளி விவரங்களை அரசு வெளியிட்டால் தான் உண்மையான நிலவரம் தெரியவரும்.

    English Summary

    Data reveals that the Government of Tamil Nadu has significantly reduced its borrowing for development projects during the first half of the 2026-27 financial year. While Tamil Nadu had previously ranked among the states with the highest borrowing in the country, the state government has cut its borrowing for development projects by 21 percent during the first half (April–September) of the current financial year.