ஒரே நாளில் புதிதாக 228 பேருக்கு டெங்கு! தமிழகத்தில் தீவிரமாக பரவும் காய்ச்சல் பாதிப்பு!

  • சென்னை: தமிழகத்தில் டெங்கு பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்றைய தினம் ஒரே நாளில் 228 பேருக்கு புதியதாக டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. சென்னையில் மட்டும் புதியதாக 79 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.

    Advertisement

    தமிழகத்தில் மொத்தமாக 17,277 பேருக்கு டெங்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருக்கிறது. நாளொன்றுக்கு சராசரியாக 200 என்கிற எண்ணிக்கையில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு பதிவு செய்யப்பட்டு வருகிறது. தொடர்ந்து காய்ச்சல் பாதிப்புகள் அதிகரித்திருப்பதால் மக்கள் அச்சமடைந்திருக்கின்றனர்.

    Advertisement

    டெங்கு பாதிப்பு அதிகரித்திருப்பதால், அரசு மருத்துவமனைகளில் சிறப்பு வார்டுகள் அமைக்கப்பட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதேபோல சுகாதாரத்துறை அதிகாரிகள் டெங்கு பாதிக்கப்பட்டவர்களை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். போதுமான அளவுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தாலும் டெங்கு பாதிப்பு குறையவில்லை என்பது குற்றச்சாட்டாக இருக்கிறது.

    டெங்கு காய்ச்சலை பரவும் கொசுக்கள் உற்பத்தியை கட்டுப்படுத்துவதன் மூலம்தான் டெங்கு பாதிப்பை குறைக்க முடியும் என்று சுகாதார நிபுணர்கள் கூறுகின்றனர். சாக்கடை தண்ணீர் இல்லாத.. நன்னீரில்தான் டெங்குவை உருவாக்கும் கொசுக்கள் வளர்கின்றன. எனவே, மழைநீர் தேங்கும் இடங்களை கண்டறிந்து நீர் தேங்காமல் பார்த்துக்கொண்டாலே டெங்கு பாதிப்பை கட்டுப்படுத்திவிட முடியும் என்றும் கூறுகின்றனர். எனவே தமிழக சுகாதாரத்துறை இதற்கான உரிய நடவடிக்கைகளை சீக்கிரம் எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்துகின்றனர்.

    English Summary

    Dengue cases continue to rise in Tamil Nadu. Yesterday alone, 228 new cases of dengue fever were detected. In Chennai alone, 79 new cases were reported.