விஜய் ஆட்சியில் மீண்டும் ஒரு வரலாற்று நிகழ்வு.. தமிழ்நாட்டில் முதன்முறையாக..1952ல் நடந்த அதே விஷயம்!

  • சென்னை: தமிழ்நாட்டில் முதல் முறையாக கூட்டணி அமைச்சரவை உருவாகும் வரலாற்று நிகழ்வு இன்று நடைபெற உள்ளது. இன்று காலை 10 மணிக்கு ஆளுநர் மாளிகையில் பதவி ஏற்பு விழா நடைபெற்றது, இன்று 23 புதிய அமைச்சர்களின் பதவியேற்ற நிலையில் விரைவில் இவர்களுக்கான துறைப் பொறுப்புகள் அறிவிக்கப்பட உள்ளது.

    Advertisement

    தமிழக வெற்றி கழகம் தலைவர் விஜய் தலைமையிலான அமைச்சரவை இன்று விரிவாக்கம் செய்யப்பட்ட நிலையில், தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றில் ஒரு முக்கிய மைல்கல்லாகவும், முன்மாதிரியாகவும் அமைந்துள்ளது. பொதுவாக கூட்டணி கட்சிகள் மூலம் ஆட்சி அமைத்தாலும் அமைச்சரவையில் பங்கு அளிக்கப்படாது. முதல் முறையாக தமிழ்நாட்டில் அமைச்சரவை கூட்டணி கட்சிகளுக்கு பங்கு அளிக்கப்படுகிறது.

    Advertisement

    தற்போது விஜய் தலைமையிலான அமைச்சரவையில் 9 அமைச்சர்கள் மட்டுமே பொறுப்பில் உள்ளனர். இந்த எண்ணிக்கை 33 ஆக உயர்ந்துள்ளது. தமிழக அமைச்சரவை இன்று விரிவாக்கம் செய்யப்படும் சூழலில் 23 பேர் அமைச்சர்களாக பதவி ஏற்றனர். அவர்களது பெயர் பட்டியலை கவர்னர் மாளிகை இன்று காலை வெளியிட்டு 10 மணிக்கு கவர்னர் மாளிகையில் கவர்னர் பதவி பிரமாணம் செய்து வைத்தார். இதன் மூலம் தமிழக அமைச்சரவை அதிகாரப்பூர்வமாக 33 ஆக உயர உள்ளது.

    இந்தக் கூட்டணி அமைச்சரவையில் காங்கிரஸ் கட்சி முக்கிய இடம் பெறுகிறது. காங்கிரஸ் தரப்பில் ராஜேஷ் குமார் மற்றும் விஸ்வநாதன் ஆகிய இருவர் அமைச்சர்களாகப் பொறுப்பேற்க உள்ளனர். சுமார் 59 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ்நாடு அமைச்சரவையில் காங்கிரஸ் கட்சி இடம்பெறுவது குறிப்பிடத்தக்கது. காங்கிரஸ் மூத்த தலைவர் கே.சி. வேணுகோபால் இதை வரவேற்று, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே உள்ளிட்ட தலைமையின் ஒப்புதலுடன் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.

    Advertisement

    கூட்டணி அரசியலின் அடிப்படையில், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் உள்ளிட்டோர் அமைச்சரவையில் இடம்பெற கோரிக்கை வைத்துள்ளனர். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (ஐயூஎம்எல்) உள்ளிட்ட பிற கூட்டணிக் கட்சிகளும் அழைக்கப்பட்டுள்ளன. சில கட்சிகளின் முடிவில் தாமதம் ஏற்பட்டால், அமைச்சரவை மேலும் விரிவாக்கம் செய்யப்படும் வாய்ப்பும் உள்ளது.

    இந்த கூட்டணி அமைச்சரவை நிகழ்வுக்கு வரலாற்றுப் பின்னணி மிக முக்கியமானது. நாடு சுதந்திரம் அடைந்த பிறகு, 1952-ம் ஆண்டு தமிழ்நாடு ஒரு கூட்டு மாநிலமாக இருந்தபோது கூட்டணி அமைச்சரவை அமைக்கப்பட்டது. அதன்பின், தனி மாநிலமாக உருவான பின்னர் இப்போது மீண்டும் கூட்டணி அமைச்சரவை உருவாகியுள்ளது.

    Advertisement

    இன்றைய பதவி ஏற்பு விழாவில் ஆளுநர் புதிய அமைச்சர்களுக்கு பதவிப் பிரமாணம் மற்றும் ரகசிய காப்பு உறுதிமொழியை 23 அமைச்சர்களையும் ஏற்கவைத்து அமைச்சராக்கியுள்ளார். புதிய அமைச்சர்களுக்கு எந்தெந்த துறைகள் ஒதுக்கப்படுகின்றன என்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. கல்வி, சுகாதாரம், உள்கட்டமைப்பு, விவசாயம் உள்ளிட்ட முக்கிய துறைகளில் புதிய மாற்றங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.

    முழு பட்டியல்

    23 புதிய அமைச்சர்கள் இன்று காலை 10 மணிக்கு பதவி ஏற்க உள்ளனர்.

    ஸ்ரீநாத் (தூத்துக்குடி எம்எல்ஏ)
    கமலி (அவிநாசி எம்எல்ஏ)
    விஜயலட்சுமி (குமாரபாளையம் எம்எல்ஏ)
    ரஞ்சித்குமார் (காஞ்சிபுரம் எம்எல்ஏ)
    வினோத் (கும்பகோணம் எம்எல்ஏ)
    ராஜிவ் (திருவாடானை எம்எல்ஏ)
    ராஜ்குமார் (கடலூர் எம்எல்ஏ)
    காந்திராஜ் (அரக்கோணம் எம்எல்ஏ)
    மதன் ராஜா (ஒட்டப்பிடாரம் எம்எல்ஏ)
    ஜெகதீஸ்வரி (ராஜபாளையம் எம்எல்ஏ)
    ராஜேஷ் குமார் (கிள்ளியூர் எம்எல்ஏ)
    விஜய் பாலாஜி (ஈரோடு கிழக்கு எம்எல்ஏ)
    லோகேஷ் தமிழ்செல்வன் (ராசிபுரம் எம்எல்ஏ)
    விஜய் தமிழன் பார்த்திபன் (சேலம் தெற்கு எம்எல்ஏ)
    ரமேஷ் (ஸ்ரீரங்கம் எம்எல்ஏ)
    விஸ்வநாதன் (மேலூர் எம்எல்ஏ)
    குமார் (வேளச்சேரி எம்எல்ஏ)
    தென்னரசு (ஸ்ரீபெரும்புதூர் எம்எல்ஏ)
    சம்பத் குமார் (கோவை வடக்கு எம்எல்ஏ)
    முகமது பர்வேஸ் (அறந்தாங்கி எம்எல்ஏ)
    சரத்குமார் (தாம்பரம் எம்எல்ஏ)
    மரிய வில்சன் (ஆர்கே நகர் எம்எல்ஏ)
    விக்னேஷ் (கிணத்துக்கடவு எம்எல்ஏ).

    English Summary

    In a landmark political development, Tamil Nadu is set to witness its first-ever coalition cabinet under Chief Minister Vijay as the ministry expands significantly today. Congress leaders Rajesh Kumar and Viswanathan take oath after 59 years, marking a major shift in state politics with expectations of portfolio reshuffle and broader alliance representation.