மாதம் ரூ.2500.. ரேசன் கார்டில் கை வைத்த விஜய்! பரபரவென மீண்டும் தொடங்கிய வேலை! 2 மாதத்தில் அப்டேட்!

  • சென்னை: தமிழகத்தில் புதிய குடும்ப அட்டை சேவைகள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவல், பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த இரண்டு மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த குடும்ப அட்டை தொடர்பான சேவைகள், கடந்த மே 15 முதல் மீண்டும் முழுமையாக செயல்பாட்டுக்கு வந்துள்ளன. இதனால் புதிய குடும்ப அட்டை பெற காத்திருந்த ஆயிரக்கணக்கான மக்களுக்கு நிம்மதி கிடைத்துள்ளது. ஏற்கனவே திமுக அரசு அறிவித்த 1000 ரூபாய் தற்போது மகளிருக்கு வரவு வைக்கப்பட்டு வரும் நிலையில் புதிய விண்ணப்பங்கள் பரிசளிக்கப்பட்டு ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்டவுடன், 2500 ரூபாய் என்ற விஜயின் தேர்தல் வாக்குறுதியும் நிறைவேற்றப்பட வாய்ப்பு இருப்பதாக சொல்கின்றனர்.

    Advertisement

    தமிழகத்தில் பொதுவிநியோகத் திட்டத்தின் கீழ் செயல்படும் ரேஷன் கடைகள், கூட்டுறவுத் துறை மற்றும் உணவு வழங்கல் துறையின் கட்டுப்பாட்டில் இயங்கி வருகின்றன. இந்த திட்டத்தின் மூலம் அரிசி, பருப்பு, பாமாயில் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் குறைந்த விலையில் வழங்கப்பட்டு வருகின்றன.

    Advertisement

    சென்னை உள்ளிட்ட 38 மாவட்டங்களில் மொத்தம் 34 ஆயிரத்து 792 ரேஷன் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இதில் பெரும்பாலான கடைகள் கூட்டுறவுத் துறை மூலம் நேரடியாக நடத்தப்படுகின்றன. தமிழகம் முழுவதும் தற்போது 2 கோடியே 23 லட்சம் குடும்ப அட்டைதாரர்கள் உள்ளனர்.

    குடும்ப அட்டை

    இதன் மூலம் சுமார் 7 கோடி மக்கள் அரசின் பொதுவிநியோக திட்டத்தின் பயனை பெற்று வருகின்றனர். குறிப்பாக மகளிர் உரிமைத்தொகை, இலவச அரிசி, மானிய பொருட்கள், பல்வேறு அரசு நலத்திட்டங்கள் ஆகியவற்றிற்கு குடும்ப அட்டை முக்கிய ஆவணமாக இருப்பதால், புதிய குடும்ப அட்டைக்கான விண்ணப்பங்கள் கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்து வருகின்றன.

    Advertisement

    புதிய குடும்ப அட்டை

    கடந்த 2023 முதல் 2024 ஜூலை வரை மட்டும் தமிழகம் முழுவதும் சுமார் 8 லட்சம் பேர் புதிய குடும்ப அட்டைக்காக விண்ணப்பித்திருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. ஒரே குடும்பமாக இருந்த பலரும் தற்போது தனித்தனி குடும்ப அட்டைகளுக்காக விண்ணப்பித்து வருகின்றனர். குறிப்பாக திருமணமான மகள்கள் தனியாக பிரிந்து வசிப்பது, அரசின் நலத்திட்ட பயன்களை தனியாக பெற வேண்டிய அவசியம், மகளிர் உரிமைத்தொகை போன்ற திட்டங்கள் ஆகியவை இதற்கான முக்கிய காரணங்களாக பார்க்கப்படுகின்றன.

    2026 சட்டமன்றத் தேர்தல்

    இதற்கிடையில், 2026 சட்டமன்றத் தேர்தல் அறிவிப்பு வெளியானதைத் தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்ததால், புதிய குடும்ப அட்டை தொடர்பான சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தன. இதனால் ஆயிரக்கணக்கான விண்ணப்பங்கள் நிலுவையில் இருந்தன. ஜனவரி முதல் ஏப்ரல் வரை மட்டுமே ஏராளமான மக்கள் புதிய ரேஷன் கார்டு கேட்டு விண்ணப்பித்திருந்தனர்.

    Advertisement

    ஸ்மார்ட் ரேஷன் கார்டு

    இப்போது தேர்தல் முடிந்து புதிய அரசு பொறுப்பேற்றுள்ள நிலையில், நிலுவையில் உள்ள விண்ணப்பங்களை மீண்டும் ஆய்வு செய்ய அதிகாரிகள் பணிகளை தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது. இதன் மூலம் பல மாதங்களாக காத்திருந்த பொதுமக்களுக்கு விரைவில் புதிய குடும்ப அட்டைகள் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    பெயர் சேர்த்தல்

    மேலும், புதிய குடும்ப அட்டை விண்ணப்பிப்பதுடன் மட்டுமல்லாமல், பல்வேறு திருத்த சேவைகளும் மீண்டும் தொடங்கப்படுகின்றன. அதன்படி, புதிய குடும்ப அட்டை விண்ணப்பம், குடும்ப உறுப்பினர் பெயர் சேர்க்கை, பெயர் நீக்கம், முகவரி மாற்றம், குடும்ப அட்டை விவரங்களில் திருத்தங்கள் மேற்கொள்ளுதல் போன்ற சேவைகள் மீண்டும் செயல்பாட்டுக்கு வர உள்ளன. இதனால் திருமணம், முகவரி மாற்றம், குடும்ப பிரிவு உள்ளிட்ட காரணங்களால் குடும்ப அட்டை திருத்தம் செய்ய காத்திருந்த மக்களுக்கு இது மகிழ்ச்சி செய்தியாக இருக்கும் என கூறப்படுகிறது.

    Advertisement

    மாதம் ரூ.2500

    தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் தேர்தல் பிரச்சாரத்தின் போது மகளிர்க்கு மாதம் 2500 ரூபாய் வழங்கப்படும் எனக் கூறியிருந்தார். இந்த நிலையில் மே மாதத்திற்கான ஆயிரம் ரூபாய் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை வரவு வைக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த திட்டத்தை விரிவாக்கம் செய்ய வேண்டி உள்ளதால் புதிய விண்ணப்பங்களின் பரிசீலனை நிறைவடைந்து குடும்ப அட்டைகள் வழங்கப்படும். அதற்குப் பிறகு பயனாளிகள் குறித்த முழு அறிக்கையை தயார் செய்யப்பட்டு 2500 ரூபாய் உதவித்தொகை அவரவர் வங்கி கணக்குகளில் வரவு வைப்பதற்கான உத்தரவை விஜய் வெளியிடுவார் என சொல்லப்படுகிறது.

    English Summary

    Tamil Nadu government to restart ration card services including new smart card applications and corrections from May 15.