சென்னை: தமிழகம் முழுவதும் பொதுமக்களின் வசதிக்காக பண்டிகைக் காலங்கள், வார இறுதி நாட்கள், முகூர்த்த தினங்கள் உள்ளிட்ட முக்கிய நாட்களில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், வார இறுதி நாள்கள், முகூா்த்தம், பௌா்ணமியை தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் இன்று முதல் முதல் ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 25) வரை 2,725 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளதாக போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது: வார இறுதி நாள்கள், அக்டோபர் 25 ஆம் தேதி முகூா்த்த தினம் மற்றும் பௌா்ணமியை முன்னிட்டு, சென்னையிலிருந்து பிற ஊா்களுக்கும், பிற ஊா்களிலிருந்து சென்னைக்கும் அதிக அளவில் பயணிகள் பயணம் மேற்கொள்வாா்கள் என்பதால் வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்புப் பேருந்துகள் இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி உள்ளிட்ட இடங்களுக்கு இன்று 775 பேருந்துகளும், நாளை (அக்டோபர் 24) 485 பேருந்துகளும் இயக்கப்பட உள்ளன. கோயம்பேட்டில் இருந்து நாகை, வேளாங்கண்ணி, ஒசூா், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு இன்று 95 பேருந்துகளும், நாளை 85 பேருந்துகளும் இயக்கப்பட உள்ளன. ஞாயிற்றுக்கிழமை திருவண்ணாமலைக்கு 250 சிறப்புப் பேருந்துகளும், பெங்களூரு, திருப்பூா், ஈரோடு, கோவை ஆகிய இடங்களிலிருந்து பல்வேறு ஊா்களுக்கு 100 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. மாதவரத்திலிருந்து கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், வேலூா், ஒசூா், புதுச்சேரி ஆகிய இடங்களுக்கு இன்று, நாளை தலா 65 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. இதுதவிர ஞாயிற்றுக்கிழமை சொந்த ஊா்களிலிருந்து சென்னை, பெங்களூரு திரும்பும் பயணிகளின் வசதிக்காக, பயணிகளின் தேவைக்கேற்ப பல்வேறு இடங்களிலிருந்து 805 சிறப்புப் பேருந்துகள் என மொத்தம் 2,725 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.2,725 சிறப்பு பேருந்துகள்
பயணிகளின் வசதிக்காக