வந்தாச்சு முக்கிய அறிவிப்பு.. நாளை முதல் பரபரபாகும் கிளாம்பாக்கம் - பக்ரீத் சிறப்பு பேருந்துகள்

  • தமிழ்நாட்டில் பக்ரீத் பண்டிகை மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு, மக்கள் பாதுகாப்பாகவும் வசதியாகவும் பயணம் செய்ய தமிழ்நாடு அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் (TNSTC) சிறப்பு பேருந்துகளை இயக்கத் தொடங்கியுள்ளது.

    Advertisement

    நாளை முதல் மே 31-ம் தேதி வரை இந்த சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என்று தமிழ்நாடு போக்குவரத்து துறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பண்டிகை காலத்தில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்கவும், பயணிகளுக்கு போதுமான வசதியை ஏற்படுத்தவும் நடவடிக்கையை முன்கூட்டியே எடுக்கப்பட்டுள்ளது.

    Advertisement

    கிளாம்பாக்கம் பேருந்து நிலையம்

    சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய 11 முக்கிய நகரங்களுக்கு இந்த சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

    தினசரி இயக்கப்படும் சாதாரண பேருந்துகளுடன், இந்த கூடுதல் சிறப்புப் பேருந்துகளும் இயக்கப்படும் என்பதால், பயணிகளுக்கு அதிக சீட்டுகள் பயணிக்க கிடைக்கும். இந்த நடவடிக்கை மூலம், பண்டிகை காலத்தில் ஏற்படும் அதிகமான பயணிகள் எண்ணிக்கையை சமாளிக்க முடியும் என்று போக்குவரத்துத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    ள விஜய் தமிழன் பார்த்திபன் முதல் சவால்

    தமிழ்நாட்டின் போக்குவரத்துத் துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ள விஜய் தமிழன் பார்த்திபன் அவர்களின் முக்கியமான சவால் இது. சேலம் தெற்கு தொகுதியைச் சேர்ந்த இவர், முதலமைச்சர் விஜய் தலைமையிலான புதிய அமைச்சரவையில் இணைந்த முக்கிய தலைவர் ஆவார்.

    Advertisement

    தேர்தல் நேரத்தில் நடந்த பிரச்சனை

    ஏப்ரல் 2026-ல் நடைபெற்ற தேர்தல் வாக்குப்பதிவுக்கு முந்தைய நாள், சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. போதுமான அளவு பேருந்துகள் இயக்கப்படாததால், சொந்த ஊர்களுக்குச் செல்ல விரும்பிய மக்கள் விடிய விடிய காத்திருக்க வேண்டிய நிலை உருவானது.

    வாக்குப்பதிவிற்காக தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்ல முண்டியடித்த வாக்காளர்கள் எண்ணிக்கை எதிர்பார்த்ததை விட பல மடங்கு அதிகரித்தது. இதனால் பயணிகள் நீண்ட நேரம் காத்திருந்து, சில இடங்களில் போராட்டத்தில் ஈடுபடும் அளவுக்கு நிலைமை மோசமடைந்தது.

    இந்த நெரிசல் பிரச்சனை, தமிழகத்தின் போக்குவரத்து அமைப்பில் உள்ள குறைபாடுகளை வெளிச்சம் போட்டுக் காட்டியதாக கிளாம்பாக்கத்தில் இருந்த மக்கள் குற்றம்சாட்டினர். குறிப்பாக, பண்டிகை மற்றும் தேர்தல் காலங்களில் மக்களின் பயணத் தேவை அதிகரிக்கும் போது, போதுமான பேருந்துகள் இயக்கப்படாதது தொடர்ந்து பிரச்சனையாக இருந்து வருகிறது.

    Advertisement

    பக்ரீத் பண்டிகை

    பக்ரீத் பண்டிகை மற்றும் வார இறுதி நாட்களில் குடும்பத்தினருடன் சொந்த ஊர்களுக்குச் செல்லும் மக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என கணிக்கப்பட்ட நிலையில் சிறப்பு பேருந்து இயக்கபட உள்ளது.

    டிக்கெட் புக்கிங்

    மக்கள் கடைசி நேரக் கூட்ட நெரிசலைத் தவிர்க்க, முன்கூட்டியே தங்களது பயணத்தைத் திட்டமிட்டு டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள். டிக்கெட் முன்பதிவு செய்ய TNSTC-வின் அதிகாரப்பூர்வ இணையதளம் மற்றும் TNSTC Official App (Google Play Store-ல் கிடைக்கும்) ஆகியவற்றைப் பயன்படுத்தலாம்.

    English Summary

    Tamil Nadu State Transport Corporation (TNSTC) has launched special buses from Kilambakkam to 11 major cities including Madurai, Coimbatore and Tirunelveli from May 26 to 31 ahead of Bakrid and weekend holidays, addressing severe congestion issues seen during April 2026 polling. New Transport Minister Vijay Tamilan Parthiban, representing Salem South, is expected to focus on improving public transport reliability and online booking systems to prevent last-minute chaos.