பதவியே வேண்டாம்.. தமிழக திட்டக்குழு செயல் துணை தலைவர் ஜெயரஞ்சன் உள்பட அனைவரும் ராஜினாமா.. விஜய் ஜெயித்ததால் குட்பை

  • சென்னை: தமிழ்நாடு திட்டக்குழுவின் செயல் துணை தலைவராக இருந்த பொருளாதார நிபுணர் ஜெயரஞ்சன் உள்பட 9 பேர் மொத்தமாக தங்களின் பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர். இதனால் அந்த திட்டக்குழுவின் பொறுப்புகள் அனைத்தும் காலியாகி உள்ளன.

    Advertisement

    தமிழகத்தில் மாநில திட்டக்குழு செயல்பட்டு வருகிறது. இதன் பணி என்பது மாநிலத்தில் பல்வேறு வளர்ச்சி திட்டங்களுக்கு தங்களின் பரிந்துரைகளை வழங்குவதாகும்.

    Advertisement

    இதுதவிர அரசின் திட்டம் சார்ந்த செயல்பாட்டை கண்காணிப்பது, மதிப்பீடு செய்வது, அரசு கொள்கைக்கு ஆலோசனைகளை வழங்குது, சிறப்பு திட்டங்களை செயல்படுத்துதல் உள்ளிட்ட பணிகளை இந்த குழு மேற்கொண்டு வருகிறது.

    இந்த திட்டக்குழுவில் பல்வேறு துறைகளை சேர்ந்தவர்கள் உறுப்பினர்களாக இருப்பார்கள். இந்த திட்டக்குழுவின் தலைவராக முதல்வர் செயல்படுவார். முதல்வருக்கு கீழ் துணை தலைவர், நிரந்தர உறுப்பினர்கள், பகுதிநேர உறுப்பினர்கள் செயல்படுவார்கள். அந்த வகையில் கடந்த திமுக ஆட்சியில் திட்டக்குழுவின் தலைவராக முதல்வர் ஸ்டாலின் செயல்பட்டார்.

    ஸ்டாலினுக்கு கீழ் திட்டக்குழுவின் துணை தலைவராக பொருளாதார நிபுணர் ஜெ. ஜெயரஞ்சன், கல்வியாளர்கள் ஆர் சீனிவாசன், எம் விஜயபாஸ்கர் ஆகியோர் முழு நேர உறுப்பினர்களாகவும், ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி தீனபந்து, தொழிலதிபர் மல்லிகா சீனிவாசன், நர்த்தகி நடராஜ், சுற்றுச்சூழல் ஆர்வலர் சுல்தான் அகமது இஸ்மாயில், அமலோற்பநாதன், சிவராமன் உள்ளிட்டவர்கள் பகுதிநேர உறுப்பினர்களாக இருந்தனர்.

    Advertisement

    அதன்பிறகு உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வரான நிலையில் அவரும் இந்த திட்டக்குழுவின் துணை தலைவராக நியமனம் செய்யப்பட்டார். இதனால் திட்டக்குழுவின் துணை தலைவராக இருந்த பொருளாதார நிபுணர் ஜெ ஜெயரஞ்சன் செயல் துணை தலைவராக்கப்பட்டார். இந்நிலையில் தான் தற்போது ஆட்சி மாற்றம் நிகழ்ந்த நிலையில் திட்டக்குழுவின் செயல் துணை தலைவர் ஜெயரஞ்சன், நிரந்தர உறுப்பினர்கள், பகுதிநேர உறுப்பினர்கள் என அனைவரும் மொத்தமாக ராஜினாமா செய்துள்ளனர்.

    இது அரசு சார்ந்த நியமனம் பொறுப்புகளாகும். இதனால் தற்போது முதல்வர் விஜய் தலைமையில் தவெக ஆட்சி நடப்பதால் இந்த திட்டக்குழுவில்அங்கம் வகித்தவர்கள் ராஜினாமா செய்துள்ளனர். தவெக சார்பில் திட்டக்குழுவின் துணை தலைவர், உறுப்பினர்களை நியமனம் செய்யும் வகையில் அவர்கள் ராஜினாமா செய்துள்ளனர். இதன்மூலம் விரைவில் முதல்வர் விஜய் மாநில திட்டக்குழுவில் இடம்பெறுபவர்களின் பெயர்களை அறிவிப்பு செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    English Summary

    Tamil Nadu State Planning Commission: A total of nine individuals, including economist Jayaranjan-who served as the Vice-Chairman of the Tamil Nadu State Planning Commission-have resigned from their posts. Consequently, all positions within the Planning Commission are now vacant.