30 நிமிடங்களில் விண்ணப்பிக்க வேண்டும்.. செட்டிங்கா? - சர்ச்சைக்குள்ளான ஊரக வளர்ச்சித்துறை டெண்டர்

  • சென்னை: தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறையின் ஒரு டெண்டர் அறிவிப்பில், டெண்டரை சமர்ப்பிக்க 30 நிமிடங்கள் மட்டுமே கால அவகாசம் வழங்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. குமரி மாவட்டத்தில் ரூ.4 லட்சம் மதிப்பிலான பணிக்கான ஒப்பந்த விண்ணப்பம் வரும் 13 ஆம் தேதி மாலை 3 மணிக்கு தொடங்கி 3.30 மணிக்கு முடிவடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Advertisement

    குறிப்பிட்ட நபருக்கு டெண்டர் வழங்கவே, இப்படி செய்யப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. புஸ்ஸி ஆனந்த் பொறுப்பில் உள்ள ஊரக வளர்ச்சித்துறையில் செட்டிங் டெண்டர் செய்யப்படுகிறதா என விமர்சனங்கள் எழுந்துள்ளன.

    Advertisement

    தமிழகத்​தில் புதிய அரசு பொறுப்​பேற்​றதை தொடர்ந்​து பல்வேறு துறைகளிலும் புதிய பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்தவகையில் புதிய திட்டங்களுக்கான டெண்டர் அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தான் வெறும் 30 நிமிடங்கள் கால அவகாசம் வழங்கப்பட்டு டெண்டர் அறிவிக்கப்பட்டுள்ளது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

    English Summary

    A tender notification issued by the Tamil Nadu Rural Development Department has sparked controversy, as only a 30-minute window was allotted for bid submission. It was announced that the application process for a contract worth ₹4 lakh in Kanyakumari district would open at 3 PM and close at 3:30 PM on the 13th. Allegations have arisen that this was done specifically to award the tender to a particular individual.