டெண்டர் சமர்ப்பிக்க வெறும் 30 நிமிடங்கள் அவகாசம்.. சர்ச்சையை தொடர்ந்து 2 அதிகாரிகள் சஸ்பெண்ட்!

  • சென்னை: தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறையில் டெண்டரை சமர்ப்பிக்க 30 நிமிடங்கள் மட்டுமே கால அவகாசம் வழங்கப்பட்ட சர்ச்சையில் 2 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். உதவி பொறியாளர் சுசிலா மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் தங்கராஜ் ஆகியோரை பணியிடை நீக்கம் செய்து ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஆனந்த் உத்தரவிட்டுள்ளார்.

    Advertisement

    தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறையின் ஒரு டெண்டர் அறிவிப்பில், டெண்டரை சமர்ப்பிக்க 30 நிமிடங்கள் மட்டுமே கால அவகாசம் வழங்கப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. குமரி மாவட்டத்தில் ரூ.4 லட்சம் மதிப்பிலான பணிக்கான ஒப்பந்த விண்ணப்பம் வரும் 13 ஆம் தேதி மாலை 3 மணிக்கு தொடங்கி 3.30 மணிக்கு முடிவடையும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

    Advertisement

    அதாவது, டெண்டர் சமர்ப்பிக்க தொடங்கும் நேரம் 13.07.2026 - பிற்பகல் 3 மணி

    டெண்டர் சமர்ப்பிக்க கடைசி நேரம் 13.07.2026 - பிற்பகல் 3. 30 மணி

    டெண்டர் திறக்கப்படும் நேரம் 13.07.2026 - மாலை 4 மணி

    டெண்டர் சமர்ப்பிப்பதற்கு வெறும் அரை மணி நேரம் தான் அவகாசம் வழங்கப்பட்டது. முன்பே தீர்மானித்து வைத்திருந்தால் மட்டுமே இந்த டெண்டர் கிடைக்கும் என்ற நிலையில் இந்த அறிவிப்பு இருந்தது.

    குறிப்பிட்ட நபருக்கு டெண்டர் வழங்கவே, இப்படி செய்யப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துது. புஸ்ஸி ஆனந்த் பொறுப்பில் உள்ள ஊரக வளர்ச்சித்துறையில் செட்டிங் டெண்டர் செய்யப்படுகிறதா என விமர்சனங்கள் எழுந்தன.

    Advertisement

    இந்நிலையில், டெண்டரை சமர்ப்பிக்க 30 நிமிடங்கள் மட்டுமே கால அவகாசம் வழங்கப்பட்ட சர்ச்சையில் 2 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். உதவிப் பொறியாளர் சுசிலா மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் தங்கராஜ் ஆகியோரை பணியிடை நீக்கம் செய்து ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஆனந்த் உத்தரவிட்டுள்ளார்.

    English Summary

    Two officials have been suspended following a controversy regarding the allocation of only 30 minutes to submit a tender in the Tamil Nadu Rural Development Department. Minister Anand ordered the suspension of Assistant Engineer Susila and Block Development Officer Thangaraj.