திமுக ஆட்சியில்.. உடல் உறுப்பு தானத்தில் தமிழ்நாடு முதலிடம்.. விருது வாங்கிய அமைச்சர் அருண்ராஜ்

  • சென்னை: இந்தியாவில் கடந்த 2025ம் ஆண்டில் அதிகளவில் உடல் உறுப்பு தானம் நடைபெற்ற மாநிலமாக தமிழ்நாடு முதலிடத்தைப் பிடித்துள்ளது. அதேபோல் நாடு முழுவதும் நடைபெற்ற உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகளில் டெல்லிக்கு அடுத்தபடியாக தமிழ்நாடு 2வது இடத்தைப் பெற்றுள்ளது. அதிகளவில் உடலுறுப்பு தானம் செய்த சிறந்த மாநிலம் விருதும் தமிழகத்திற்கு வழங்கப்பட்டது.

    Advertisement

    16வது இந்திய உறுப்பு தான தினத்தை முன்னிட்டு, மத்திய சுகாதார அமைச்சகம் மற்றும் தேசிய உறுப்பு மற்றும் திசு மாற்று அமைப்பு நாடு முழுக்க நடந்த உடல் உறுப்பு தானம் குறித்த விவரங்களை வெளியிட்டது. அதில் கடந்த 2025ம் ஆண்டு நாட்டிலேயே உடல் உறுப்பு தானம் அதிகம் செய்த மாநிலம் என்ற சாதனையை தமிழ்நாடு படைத்துள்ளது.

    Advertisement

    உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை

    கடந்த 2025ம் ஆண்டு இந்தியா முழுவதும் 20,138 உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகள் நடைபெற்றுள்ளன. இந்திய வரலாற்றிலேயே ஒரே ஆண்டில் நடத்தப்பட்ட அதிகபட்ச உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை இதுவாகும்! 2013ல் வெறும் 4,990 ஆக இருந்த இந்த எண்ணிக்கை, இப்போது நான்கு மடங்கிற்கு மேல் அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக டெல்லி 4,564 உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகளுடன் முதலிடத்தில் உள்ளது. அதனை தொடர்ந்து தமிழ்நாட்டில் 2,796 உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கள் நடந்துள்ளன. தொடர்ந்து மகாராஷ்டிரா 2,136, தெலுங்கானா 1,523 மற்றும் கேரளா 1,489 அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.

    Advertisement

    உடல் உறுப்பு தானம்

    பொதுவாக மூளைச்சாவு அடையும்போது, அவர்களின் இதர உடல் உறுப்புகளை மற்றவர்களுக்கு தானம் செய்யலாம். குடும்ப உறுப்பினர்களின் ஒப்புதலின்படி இது செய்யப்படும். மூளைச்சாவுக்கு பிறகான உடல் உறுப்பு தானத்தில் தமிழ்நாடு நாட்டிலேயே முதலிடம் பிடித்துள்ளது. 2025ல் 266 பேர் இதுபோல மூளைச்சாரவை தொடர்ந்து உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டுள்ளன. இதில் தெலங்கானா (205) இரண்டாவது இடத்திலும், கர்நாடகா (198) மூன்றாவது இடத்திலும் உள்ளன. தொடர்ந்து மகாராஷ்டிரா (154), குஜராத் (152), ஆந்திரப் பிரதேசம் (93), டெல்லி NCR (33), கேரளா (25) மற்றும் பஞ்சாப் (20) மாநிலங்கள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.

    Advertisement

    தமிழ்நாடு

    நாட்டில் உள்ள 800க்கும் மேற்பட்ட உறுப்பு மாற்று மையங்களில் 172 மையங்கள் தமிழ்நாட்டிலேயே செயல்பட்டு வருகின்றன. இதனால் சிறுநீரகம், கல்லீரல், இதயம், நுரையீரல், கணையம் மற்றும் சிறுகுடல் உள்ளிட்ட பல்வேறு உறுப்புகளுக்கான மாற்று அறுவை சிகிச்சைகளிலும் தமிழ்நாடு முன்னணியில் உள்ளது. மேலும், 2025ல் 63 நாடுகளை சேர்ந்த வெளிநாட்டு நோயாளிகளுக்கு நடைபெற்ற 1,560 உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகளில் 135 அறுவை சிகிச்சைகள் தமிழ்நாட்டில் நடைபெற்றுள்ளன.

    ஆண்கள்- பெண்கள்

    NOTTO வெளியிட்டுள்ள டேட்டாவின்படி,உயிருடன் இருக்கும் உறுப்பு தானதாரர்களில் 68 சதவீதம், அதாவது 11,316 பேர் பெண்களாக உள்ளனர். ஆண்கள் 32 சதவீதம், அதாவது 5,298 பேர் மட்டுமே தானம் செய்கிறார்கள். மறுபுறம் உடல் உறுப்புகளை தானம் பெற்றவர்களில் 78 சதவீதம், அதாவது 12,903 பேர் ஆண்களாக உல்ளனர். வெறும் 22 சதவீதம், அதாவது 3,707 பேர் மட்டுமே பெண்களாக உள்ளனர்.!

    Advertisement

    2025-ல் நடைபெற்ற மொத்த உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகளில் 62.03 சதவீதம் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைகளாகவே உள்ளன. தொடர்ந்து கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைகள் 20.46 சதவீதமாக இருந்தன. மூளைச்சாவு தானம் மூலம் நடைபெற்ற உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகளும் 2013ல் 837 ஆக இருந்த நிலையில், 2025-ல் 3,526 ஆக உயர்ந்துள்ளது.

    English Summary

    Tamil Nadu emerged as India's leading state in organ donation in 2025 with the highest number of organ donors(உடல் உறுப்பு தானம் செய்தவர்களில் தமிழ்நாடு முதலிடம்): Organ Donation in Indian Tamil Nadu Tops the list.