மொத்தம் ரூ.2,86,000 கோடியாமே.. தமிழக கிரெடிட் கார்டு கடன் எவ்வளவு தெரியுமா? ஷாக் டேட்டா

  • சென்னை: தமிழகத்தில் உள்ள மக்கள் கிரெடிட் கார்டு வழியாக வாங்கும் மொத்த கடன் தொகை ரூ. 2 லட்சத்து 86 ஆயிரம் கோடியை தொட்டுள்ளதாகவும், இது கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் இருமடங்காக உயர்ந்துள்ளதாக நாடாளுமன்றத்தில் மத்திய நிதி அமைச்சகம் திடுக்கிடும் தகவலை தெரிவித்துள்ளது.

    Advertisement

    நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நடந்து வருகிறது. இந்த கூட்ட தொடரில் ராமநாதபுரம் தொகுதியின் எம்பியான இந்தியன் முஸ்லிம் லீக் கட்சியை சேர்ந்த நவாஸ்கனி முக்கிய கேள்வி ஒன்றை எழுப்பினார்.

    Advertisement

    தமிழகத்தில் கிரெடிட் கார்டு வழியாக வாங்கப்படும் கடன் தொகைகள் பற்றிய விவரங்களை நவாஸ் கனி எம்பி கோரியிருந்தார். இதற்கு மத்திய நிதி அமைச்சகம் பதிலளித்தது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:

    தமிழகத்தில் கிரெடிட் கார்டுகள் மூலம் பெறப்படும் கடன்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த கடன் தொகை கடந்த 5 ஆண்டுகளில் 2 மடங்காக உயர்ந்துள்ளது. 2022ம் ஆண்டு மார்ச் மாதம் கிரெடிட் கார்டு கடன் ரூ.1.47 லட்சம் கோடியாக இருந்த நிலையில் 2026 மார்ச் மாதம் ரூ. 2.86 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது.

    இதில் பொதுத்துறை வங்கிகளை ஒப்பிடும்போது தனியார் வங்கிகள் தான் அதிக கடன் வழங்கி உள்ளன. கடந்த 2022 மார்ச் மாதம் நிலவரப்படி பொதுத்துறை வங்கிகள் கிரெடிட் கார்டு வழியாக ரூ.1,123 கோடி கடன் வழங்கிய நிலையில் 2026 மார்ச் மாதத்தில் ரூ.5,667 கோடியை வழங்கி உள்ளது. அதேவேளையில், தனியார் வங்கிகள் சார்பில் கடந்த 2022ம் ஆண்டு மொத்தம் ரூ1.46 லட்சம் கோடி கடன் வழங்கப்பட்டது.
    இது 2026 மார்ச் மாதம் ரூ.2.81 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது.

    Advertisement

    தனியார் வங்கியை எடுத்து கொணடால் எச்டிஎப்சி வங்கி ரூ. 1.12 லட்சம் கோடியும், 2022 மார்ச் மாதம் ரூ. 71,928 கோடியாக இருந்தது), ஐசிஐசிஐ வங்கி ரூ. 54,865 கோடியும், ஆக்சிஸ் வங்கி ரூ. 49,702 கோடியும் கடன் வழங்கி உள்ளன'' என்று கூறப்பட்டுள்ளது.

    நிதி சார்ந்த அறிவு, பொறுப்பான வகையில் கடன் பெறுதல், இணைய வழி மோசடி தடுப்பு உள்ளிட்டவை தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இதற்காக தமிழ்நாட்டில் 128 'Centres for Financial Literacy' (CFLs) மற்றும் 75 'Financial Literay Centres' (FLCs) செயல்பட்டு வருகின்றன. 2025-26 நிதி ஆண்டில் மட்டும் சிஎஃப்எல்கள் சார்பில் 92,096 விழிப்புணர்வு முகாம்களும், எஃப்எல்சிக்கள் வழியாக 10,419 முகாம்களும் நடத்தப்பட்டன. ராமநாதபுரம் மாவட்டத்தில், 2025-26 காலகட்டத்தில் மூன்று சிஎஃப்எல்கள், 2 எஃப்எல்சிகள் சார்பில் முறையே 2,160 மற்றும் 809 விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட்டன.

    English Summary

    The Union Ministry of Finance has revealed startling data indicating that the total Outstanding credit card receivables held by people in Tamil Nadu stands at Rs.2.86 lakh crore, having doubled in just the last five years.