முதியோர் சமூகமாக மாறும் தமிழ்நாடு.. இளைஞர்கள் எண்ணிக்கை சரிவு.. பெரிய சிக்கல்! வெள்ளை அறிக்கை லிஸ்ட்

  • சென்னை: நிதி அமைச்சர் மரிய வில்சன் இன்று தமிழக நிதி நிலை பற்றிய வெள்ளை அறிக்கையை வெளியிட்டார். இந்த அறிக்கையில், இந்தியாவில் முக்கிய மாநிலங்கள் அனைத்தையும் விட வேகமாக முதியோர் சமூகமாக மாறிக்கொண்டு இருப்பது தமிழ்நாடுதான் என்ற பரபரப்பு தகவலை வெளியிட்டார். 2100 ஆம் ஆண்டளவில் தமிழ்நட்டின் மக்கள் தொகையில் கிட்டத்தட்ட பாதி பேர் முதியோர்களாக இருப்பார்கள். அதேபோல, தேசிய சராசரி சுமார் 27 சதவீதம் மட்டுமே இருக்கும் என்றும் நிதி அமைச்சர் கூறினார்.

    Advertisement

    தமிழகத்தின் நிதி நிலை குறித்த வெள்ளை அறிக்கையை அமைச்சர் மரிய வில்சன் வெளியிட்டார். அதில் கூறியிருப்பதாவது:-

    Advertisement

    பாதி பேர் முதியோர்களாக இருப்பார்கள்

    இந்தியாவில் முக்கிய மாநிலங்கள் அனைத்தையும் விட வேகமாக முதியோர் சமூகமாக மாறிக்கொண்டு இருப்பது தமிழ்நாடுதான். 2011 ஆம் ஆண்டு 10.6 ஆக இருந்த மக்கள் தொகை பங்கு 2031 ஆம் ஆண்டு 18.2 ஆக உயரும் என கணிக்கப்படுகிறது. மேலும் 2100 ஆம் ஆண்டளவில் தமிழ்நாட்டின் மக்கள் தொகையில் கிட்டத்தட்ட பாதி பேர் முதியோர்களாக இருப்பார்கள்.

    அதேபோல, தேசிய சராசரி சுமார் 27 சதவீதம் மட்டுமே இருக்கும். வேலை செய்யும் வயதினரின் பங்கு ஏற்கனவே உச்ச நிலையை எட்டியுள்ளது. இனி அது குறையத்தொடங்கும். அதேசமயம் முதியோர் சார்பு விகிதம் 20.6 ல் இருந்து 32.7 ஆக உயரும். வருவாய் ஈட்டுபவர்கள் குறைவாகவும் அவர்களை சார்ந்து வாழ்பவர்கள் எண்ணிக்கை அதிகமாக இருக்கும். இதனுடன் சுகாதார செலவுகள் ஓய்வூதிய செலவுகள் தொடர்ந்து உயரும்.

    Advertisement

    ஓய்வு பெறும் வயதை எட்டிவிட்டனர்

    இரண்டு கத்திரிகோல்கள் ஒன்று நோக்கி ஒன்று மூடப்படும் நிலை. அதாவது இதை "சிசர்ஸ் எபெக்ட்" என்று சொல்வார்கள். ஒருபக்கம் வருவாய் ஈட்டுபவர்கள் குறைகிறார்கள். மற்றொரு பக்கம் செலவுகள் அதிகரிக்கின்றன. இதுவே கடன் வலையின் டெப்ட் டிரப்ட் ஆகும். இன்று தமிழ்நாடு மக்கள் தொகை அமைப்பின் வளத்தை டெமாகிராபிக் ஸ்ட்ரெந்த் இருக்கும் போதே நிதிநிலையை சீர் செய்வதற்கான வாய்ப்பு உள்ளது.

    ஆனால் அந்த வாய்ப்பின் சாரம் ஆண்டு தோறும் சுருங்கி கொண்டே வருகிறது. தாமதம் ஆகும் ஒவ்வொரு ஆண்டும் பின்னர் செலுத்த வேண்டிய விலையை மேலும் அதிகரிக்கிறது. எளிய வார்த்தைகளில் சொல்ல வேண்டும் என்றால் தமிழ்நாட்டின் மிகப்பெரிய ஆபத்து என்னவென்றால் செல்வந்த மாநிலமாக மாறுவதற்கு முன்னால் முதியோர் மாநிலமாக மாறிவிடுகிறது.

    Advertisement

    ஒரு குடும்பத்தின் முக்கிய வருமானம் ஈட்டும் நபர்கள் ஓய்வு பெறும் வயதை எட்டிவிட்டனர். ஆனால் அவர்களுக்கு மாற்றாக புதிய வருமானம் ஈட்டும் நபர்கள் உருவாகவில்லை என்று நினைத்து பாருங்கள். அப்படிப்பட்ட குடும்பம் தனது முதிய வயதிற்காக பாதுகாப்பாக சேமிக்க வேண்டிய நேரம் எப்போது? வருமானம் இன்னும் கிடைத்துகொண்டு இருக்கும் இப்போதுதான், வருமானம் நின்ற பிறகு அல்ல. அதேபோலவே தமிழ்நாட்டின் நிதி நிலையை சீர்செய்வதற்கான சிறந்த நேரம் இதுதான்" என்றார்.

    English Summary

    Ageing Society: Tamil Nadu is ageing faster than any other major Indian state, according to the state's financial white paper. By 2100, nearly half of the state's population could be elderly, while the youth population continues to decline, posing long-term economic and social challenges.