சென்னை: சென்னை முதல் குமரி வரை தமிழகம் முழுக்க பரவலாக மழை பெய்ய தொடங்கியுள்ளது. இந்த நிலையில் பிரபல தனியார் வானிலை ஆய்வாளரான தமிழ்நாடு வெதர்மேன், சென்னை முதல் தூத்துக்குடி வரை புளு மேகங்கள் காணப்படுவதாகவும், இப்போது தான் பருவமழை தொடங்குகிறது, குடைகளை ரெடியாக வையுங்கள் என கூறியுள்ளார்.
தமிழகத்தில் நாளை வடகிழக்கு பருவமழை தொடங்குகிறது. இன்றே அதற்கான அறிகுறிகள் வந்துவிட்டதாகவும் தமிழகம் முழுக்க மழை மேகங்கள் சூழ்ந்து காணப்படுவதாகவும் வானிலை ஆய்வாளர்கள் கூறி வருகிறார்கள். இதுமட்டுமில்லாமல் தமிழக பகுதிகளில் இருந்து எல். நினோவும் விலகிவிட்டதாக வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
ஏற்கனவே தென் மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி மாவட்டங்களில் கடலோர மற்றும் டெல்டா மாவட்டங்களில் கடந்த ஒரு வாரமாகவே மழை பெய்து வருகிறது. நேற்றும் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்தது. இன்று சென்னையிலும் மழை பெய்தது. கடந்த ஒரு வாரமாகவே சென்னையில் மழை பெய்யாத நிலையில் இன்று பல்வேறு இடங்களில் மழை கொட்டியது. இந்த நிலையில் தான், சென்னை முதல் தூத்துக்குடி வரை புளு மேகங்கள் காணப்படுவதாகவும், இப்போது தான் பருவமழை தொடங்குகிறது, குடைகளை ரெடியாக வையுங்கள் என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதவில் கூறியிருப்பதாவது:- சென்னையிலிருந்து தூத்துக்குடி வரை கண்கவர் மேகக் கூட்டங்கள் தென்படுகின்றன. திடீர் மழை, சூரிய வெளிச்சம், மீண்டும் திடீர் மழை என மாறி மாறி சூழல் அமையும். அதிகாலை மற்றும் இரவு நேரங்களில் மழையின் தீவிரம் சற்று அதிகமாக இருக்கலாம். இது வடகிழக்கு பருவமழையின் இயல்பான தன்மையாகும். இது கடலோர மாவட்டங்களுக்கு மட்டும் கிடையாது. தமிழகத்தின் உள்மாவட்டங்களிலும் மழை பெய்யும். குடைகளைத் தயாராக வைத்துக்கொள்ளுங்கள், பருவமழை இப்பதான் தொடங்கியுள்ளது." என்று கூறியுள்ளார். நாளை 15 ஆம் தேதி தமிழகம், கர்நாடகம், புதுவை என தென் இந்திய பகுதிகளில் வடகிழக்கு பருவமழை முழுமையாக தொடங்கும். இன்று முதல் அடுத்த ஒரு வாரத்திற்கு தமிழகத்தில் பரவலாக மழை பெய்யும். குறிப்பாக வட கடலோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் கூறியுள்ளார். சென்னை முதல் குமரி வரை கடலோர மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. டெல்டா மற்றும் உள் மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. டிசம்பர் வரை பார்க்கும் போது 6 முதல் 7 சுற்றுகளாக மழை பெய்ய வாய்ப்பு உள்ளது எனவும் அவர் கூறியுள்ளார்.தமிழ்நாடு வெதர்மேன் ட்வீட்
வரப் போகுது வடகிழக்குப் பருவமழை! சம்பவத்துக்கு ரெடியாகும் தமிழ்நாடு! லிஸ்ட் போட்ட வானிலை ஆய்வு மையம்
குடைகளை தயாராக வையுங்கள்
கனமழை பெய்யும்
மழை காலம் பொறக்குது.. மழை காலம் பொறக்குது! வெளுத்து வாங்கப் போகுது கனமழை! மெட் கொடுத்த அப்டேட்!