சென்னை: சென்னையில் நேற்று பெய்த அதி கனமழை காரணமாக சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளான பூண்டி ஏரி, புழல் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது என தமிழ்நாடு வெதர்மேன் டேட்டாவுடன் குறிப்பிட்டுள்ளார்.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. அந்த வகையில் கடந்த இரு தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளின் நீர் மட்டம் உயர்ந்து வருகிறது.
அந்த வகையில் சென்னைக்கு குடிநீர் கொடுக்கும் 6 ஏரிகளில் பூண்டி, புழல் ஏரிகளுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது என தமிழ்நாடு வெதர்மேன் டேட்டாவுடன் தனது எக்ஸ்வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
ரெட்டேரியின் மொத்தம் ஆழம் 21.20 அடியாகும். அதில் தற்போது 14.95 அடிக்கு தண்ணீர் இருக்கிறது. இந்த ஏரியின் மொத்த கொள்ளளவு 3.300 டிஎம்சியாகும். தற்போது 2,037 டிஎம்சி தண்ணீர் இருக்கிறது. 1485 கனஅடி நீர் வரத்து வருகிறது. 196 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. இங்கு மழையின் அளவு 119 மி.மீ. ஆகும். சோழவரம் ஏரியின் மொத்தம் ஆழம் 18.86 அடியாகும். அதில் தற்போது 2.91 அடிக்கு தண்ணீர் இருக்கிறது. இந்த ஏரியின் மொத்த கொள்ளளவு 1.081 டிஎம்சியாகும். தற்போது 0.130 டிஎம்சி தண்ணீர் இருக்கிறது. 102 கனஅடி நீர்வரத்து வந்து கொண்டிருக்கிறது. ஆனால் 8 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. நேற்று பெய்த மழையின் அளவு 68 மி.மீ. ஆகும். செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்தம் ஆழம் 24 அடியாகும். அதில் தற்போது 14.21 அடிக்கு தண்ணீர் இருக்கிறது. இந்த ஏரியின் மொத்த கொள்ளளவு 3,645 டிஎம்சியாகும். தற்போது 1,390 டிஎம்சி தண்ணீர் இருக்கிறது. 655 கனஅடி நீர் வரத்து வருகிறது. 203 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. நேற்று பெய்த மழையின் அளவு 54 மி.மீ. ஆகும். பூண்டி ஏரியின் மொத்தம் ஆழம் 35 அடியாகும். அதில் தற்போது 21.47 அடிக்கு தண்ணீர் இருக்கிறது. இந்த ஏரியின் மொத்த கொள்ளளவு 3.231 டிஎம்சியாகும். தற்போது 0.397 டிஎம்சி தண்ணீர் இருக்கிறது. 980 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. 530 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. மழையின் அளவு 32 மி.மீ. ஆகும். வீராணம் ஏரியின் மொத்தம் ஆழம் 15.60 அடியாகும். அதில் தற்போது 11.47 அடிக்கு தண்ணீர் இருக்கிறது. இந்த ஏரியின் மொத்த கொள்ளளவு 1.465 டிஎம்சியாகும். தற்போது 0.568 டிஎம்சி தண்ணீர் இருக்கிறது. 980 கனஅடி நீர் வரத்து வருகிறது. 530 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. இங்கு மழைப் பதிவு இல்லை. கண்ணன்கோட்டை தேர்வாய் கண்டிகை ஏரியின் மொத்தம் ஆழம் 36.61 அடியாகும். அதில் தற்போது 27.81 அடிக்கு தண்ணீர் இருக்கிறது. இந்த ஏரியின் மொத்த கொள்ளளவு 0.500 டிஎம்சியாகும். தற்போது 0.232 டிஎம்சி தண்ணீர் இருக்கிறது. 20 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. 18 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. இங்கு மழையின் அளவு 14 மி.மீ. என பதிவாகியுள்ளது. ஆக, மொத்தம் இந்த 6 ஏரிகளின் மொத்த கொள்ளளவு 13.222 டிஎம்சி. அதில் 4.754 டிஎம்சி தண்ணீர் இருப்பு இருக்கிறது. அதாவது மொத்த கொள்ளளவில் 35.9 சதவீதம் நீர் இருப்பு உள்ளது. இவ்வாறு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.ரெட்டேரி அல்லது புழல்
சோழவரம்
செம்பரம்பாக்கம்
சென்னையை மொத்தமாக நனைத்த மழை.. தேங்கி நிற்கும் நீர்! உதவி எண்கள் அறிவிப்பு
பூண்டி
வீராணம்
சென்னையில் நேற்று பெய்தது மேகவெடிப்பு இல்லையாம்! அப்படியென்றால் அது என்ன மாதிரியான மழை?
கண்ணன்கோட்டை