சென்னை வரலாற்றில் இதுவரை அப்படி நடந்ததில்லை! இன்று நடக்குமா? வெதர்மேன்

  • சென்னை: சென்னையில் அடுத்த முக்கியமான நாள் அக்டோபர் 21 அல்லது 22. நேற்று போல் இன்றும் கனமழை பெய்யுமா என்பது குறித்தும் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் விளக்கியுள்ளார்.

    Advertisement

    இதுகுறித்து அவர் தனது செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: சென்னையில் அடுத்து முக்கியமான தேதி அக்டோபர் 21 அல்லது 22 ஆகும். சென்னையில் இன்று இரவும் மழை பெய்யுமா, ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதே மழை வருமா என்றெல்லாம் கேள்விகள் எழும்.

    Advertisement

    ஆனால் சென்னை வரலாற்றில் இதுவரை அடுத்தடுத்து மழையை சந்தித்ததில்லை. வளி மண்டல மேலடுக்கு சுழற்சியால் 200 மி. மீ. மழை வரை நேற்று பெய்தது. அது போல் அடுத்த நாளே இடைவெளி இல்லாமல் மழை பெய்யாது, இதுவரை பெய்ததில்லை. வளி மண்டல மேலடுக்கு சுழற்சி சென்னைக்கு அருகே உள்ளது.

    மேகவெடிப்பு மழை இல்லையா? Cloud burst-க்கு இந்திய வானிலை மையம் வரையறுத்த அளவுகளை பாருங்க! வெதர்மேன்

    அப்படியென்றால் அதன் மழை மேக குவியல்கள் சென்னை வடக்கு பகுதிக்கு அருகே உள்ளது. இன்று மழை பெய்தாலும் நேற்று மழையை போல் அதிக அளவு பெய்யாது. இந்த வளி மண்டல மேலடுக்கு சுழற்சி மூலம் தெற்கு ஆந்திரா, திருவள்ளூர் மாவட்டங்களில் நல்ல மழையை கொடுக்கும். எனவே இன்று இரவு மீண்டும் ஒரு பெரு மழை என்பதற்கு வாய்ப்பே இல்லை. அப்படி ஒரு வேளை இருப்பதற்கான திடீர் சாத்தியக்கூறுகள் இருந்தால் அப்டேட் செய்கிறேன் என தெரிவித்துள்ளார்.

    Advertisement

    வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் தொடங்கி ஆங்காங்கே பெய்து வருகிறது. கடந்த 2 தினங்களாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மழை பெய்கிறது. இத்தனை நாட்களாக வாட்டிய வெயிலுக்கு இந்த மழை குளிர்ச்சியை கொடுத்துள்ளது.

    இந்த நிலையில் சென்னையில் காலை வேளைகளில் லேசான வெயில் இருந்தாலும் மாலை 5 மணிக்கெல்லாம் இருட்டிக் கொண்டு மழை பெய்யத் தொடங்குகிறது. நேற்றும் அதே போல்தான் காலையில் வெயில் இருந்தது. மாலையில் கருமேகங்கள் சூழத் தொடங்கி மழை கொட்டத் தொடங்கியது.

    சென்னையில் வெளுத்த மழை! பூண்டி, புழல் ஏரிக்கு நீர்வரத்து எவ்வளவு தெரியுமா? வெதர்மேன் டேட்டா
    Advertisement

    அதிலும் மழையின் டார்கெட் வடசென்னை என்பதை போல் அங்குதான் கொட்டித் தீர்த்தது. சென்னையில் கடந்த 24 மணிநேரத்தில் பாரிமுனையில் 36 செ.மீ., கத்திவாக்கத்தில் 34.4 செ.மீ., மீனம்பாக்கத்தில் 29 செ.மீ., சென்னை சென்ட்ரலில் 27 செ.மீ., சாத்தாங்காட்டில் 26 செ.மீ, திருவொற்றியூரில் 22 செ.மீ., எண்ணூரில் 21 செ.மீ., கார்கில் நகர் 19 செ.மீ., சைதாப்பேட்டை 17 செ.மீ., வடபழனி 16 செ.மீ., நுங்கம்பாக்கம் 15 செ.மீ., மழை பதிவாகியுள்ளது.

    மேகவெடிப்பின் காரணமாக சென்னையில் கனமழை கொட்டித் தீர்த்ததாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் கூறியிருந்தார். ஒரு மணி நேரத்திற்குள்ளாகவே வடசென்னையில் 100 மி.மீ அளவுக்கு மேகவெடிப்பு மழை பெய்துள்ளது. கார்கில் நகரில் 109 மி.மீ. மழையும் சாத்தாங்காடு பகுதியில் 106 மி.மீ.மழையும் திருவள்ளூர் மாவட்டம் மப்பேடு பகுதியில் 100 மி.மீ. மழையும் பெய்துள்ளது என கூறியிருந்தார்.