சென்னையில் வரும் 24 ஆம் தேதி வரை மழை எப்படி இருக்கும்? செம்பரம்பாக்கம் ஏரி எப்படி இருக்கிறது?

  • சென்னை: சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் வரும் அக்டோபர் 23 அல்லது 24 ஆம் தேதி வரை நல்ல மழை இருக்கும் என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். அத்துடன் சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளின் இன்றைய நிலவரம் குறித்தும் அவர் அப்டேட் செய்துள்ளார்.

    Advertisement

    இதுகுறித்து அவர் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: புழல் ஏரிக்கு நீர்வரத்து 1000 கனஅடிக்கு மேல் வந்துக் கொண்டிருக்கிறது. அது போல் பூண்டி ஏரிக்கு 500 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது.

    Advertisement

    வரும் 23 அல்லது 24 வரை சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களுக்கு கனமழை பெய்யும். அக்டோபர் 20 அல்லது 21, மற்றும் 21 அல்லது 22 ஆகிய தேதிகளில் இருந்து நல்ல மழையை எதிர்பார்க்கலாம்.

    சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளின் மொத்த கொள்ளளவு 37 சதவீதத்தை தாண்டியுள்ளது. இவ்வாறு கூறியிருக்கும் வெதர்மேன், 6 ஏரிகளின் நிலவரங்களை கொடுத்துள்ளார்.

    ரெட்டேரி அல்லது புழல்

    ரெட்டேரியின் மொத்தம் ஆழம் 21.20 அடியாகும். அதில் தற்போது 15.41 அடிக்கு தண்ணீர் இருக்கிறது. இந்த ஏரியின் மொத்த கொள்ளளவு 3.300 டிஎம்சியாகும். தற்போது 2,117 டிஎம்சி தண்ணீர் இருக்கிறது. 1125 கனஅடி நீர் வரத்து வருகிறது. 197 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. இங்கு மழை பெய்யவில்லை.

    Advertisement
    ரெட் அலர்ட் கொடுத்தும் சென்னையில் ஒரு சொட்டு மழை கூட இல்லை! தப்பிக்க பயன்படுத்தப்படுகிறதா RED ALERT?

    சோழவரம்

    சோழவரம் ஏரியின் மொத்தம் ஆழம் 18.86 அடியாகும். அதில் தற்போது 3.07 அடிக்கு தண்ணீர் இருக்கிறது. இந்த ஏரியின் மொத்த கொள்ளளவு 1.081 டிஎம்சியாகும். தற்போது 0.134 டிஎம்சி தண்ணீர் இருக்கிறது. 60 கனஅடி நீர்வரத்து வந்து கொண்டிருக்கிறது. ஆனால் 8 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. இங்கும் மழை பெய்யவில்லை.

    செம்பரம்பாக்கம்

    செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்தம் ஆழம் 24 அடியாகும். அதில் தற்போது 14.28 அடிக்கு தண்ணீர் இருக்கிறது. இந்த ஏரியின் மொத்த கொள்ளளவு 3,645 டிஎம்சியாகும். தற்போது 1,402 டிஎம்சி தண்ணீர் இருக்கிறது. 265 கனஅடி நீர் வரத்து வருகிறது. 187 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. இங்கு நேற்று மழை பெய்யவில்லை.

    Advertisement

    பூண்டி

    பூண்டி ஏரியின் மொத்தம் ஆழம் 35 அடியாகும். அதில் தற்போது 21.75 அடிக்கு தண்ணீர் இருக்கிறது. இந்த ஏரியின் மொத்த கொள்ளளவு 3.231 டிஎம்சியாகும். தற்போது 0.427 டிஎம்சி தண்ணீர் இருக்கிறது. 580 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. 230 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. இங்கு மழை பொழிவு இல்லை.

    அதிகாலையில் வந்த அலர்ட்.. சென்னை உட்பட 23 மாவட்டங்களில் சம்பவம்.. 3 மணி நேரத்திற்கு மழை வெளுக்கும்!

    வீராணம்

    வீராணம் ஏரியின் மொத்தம் ஆழம் 15.60 அடியாகும். அதில் தற்போது 11.55 அடிக்கு தண்ணீர் இருக்கிறது. இந்த ஏரியின் மொத்த கொள்ளளவு 1.465 டிஎம்சியாகும். தற்போது 0.581 டிஎம்சி தண்ணீர் இருக்கிறது. 340 கனஅடி நீர் வரத்து வருகிறது. 155 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. இங்கு மழைப் பதிவு இல்லை.

    Advertisement

    கண்ணன்கோட்டை

    கண்ணன்கோட்டை தேர்வாய் கண்டிகை ஏரியின் மொத்தம் ஆழம் 36.61 அடியாகும். அதில் தற்போது 27.81 அடிக்கு தண்ணீர் இருக்கிறது. இந்த ஏரியின் மொத்த கொள்ளளவு 0.500 டிஎம்சியாகும். தற்போது 0.232 டிஎம்சி தண்ணீர் இருக்கிறது. 20 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. 19 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. இங்கும் கடந்த 24 மணி நேரத்தில் மழை பெய்யவில்லை.

    மொத்த கொள்ளளவு

    ஆக, மொத்தம் இந்த 6 ஏரிகளின் மொத்த கொள்ளளவு 13.222 டிஎம்சி. அதில் 4.893 டிஎம்சி தண்ணீர் இருப்பு இருக்கிறது. அதாவது மொத்த கொள்ளளவில் 37 சதவீதம் நீர் இருப்பு உள்ளது. மொத்த 6 ஏரிகளில் நீர் வரத்து 2,390 கனஅடியாக உள்ளது. அது போல் 796 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இவ்வாறு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.

    English Summary

    Tamil nadu Weatherman Pradeep John says that there will be rains in Chennai upto October 24. He also updated the inflow of water supplying lakes to Chennai.