சென்னை: தமிழகத்தின் நிதி நிலைமை குறித்து நிதியமைச்சர் மரிய வில்சன் வெளியிட்ட வெள்ளை அறிக்கை மாநில பொருளாதாரத்தின் உண்மை நிலவரத்தை பகிரங்கமாக அம்பலப்படுத்தியுள்ளது. மொத்த கடன் சுமை ரூ.13.18 லட்சம் கோடியைத் தொட்டுள்ளதாகவும், பொதுத்துறை நிறுவனங்களின் கடன்களையும் சேர்த்து இந்த எண்ணிக்கை அதிர்ச்சியூட்டும் அளவில் உள்ளதாகவும் அறிக்கை தெரிவிக்கிறது.
முந்தைய திமுக ஆட்சியில் சொந்த வரி வருவாய் கணிசமாகக் குறைந்து, வட்டி செலுத்தலுக்கே கஜானாவின் பெரும் பகுதி செலவழிவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக (தவெக) அரசுக்கு இந்த இமாலய நிதிப் பற்றாக்குறை பெரும் தலைவலியாக மாறியுள்ளது. வருவாய்ப் பற்றாக்குறை ரூ.78,324 கோடியை நெருங்கும் சூழலில், மாநிலத்தை நிதிப் பாதாளத்தில் இருந்து மீட்க தவெக அரசு மூன்று முக்கிய உத்திகளைப் பரிசீலித்து வருவதாக அரசியல் மற்றும் பொருளாதார வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. நிதி நெருக்கடியைச் சமாளிக்க உடனடி வருவாய் அதிகரிப்பு அவசியம். அரசுப் பேருந்துகள் ஒரு கிலோமீட்டர் ஓட ஒரு ரூ.53 நட்டம் ஏற்படுவதாக அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. இதனைத் தீர்க்க பேருந்து கட்டணங்கள் விரைவில் உயர்த்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், வணிக வரிகள், முத்திரைத் தாள் கட்டணங்கள், உள்ளாட்சி வரிகள் உள்ளிட்டவற்றை சீரமைக்கும் நடவடிக்கைகள் எடுக்கப்படலாம். இந்த முடிவுகள் மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தினாலும், கஜானாவைப் பாதுகாக்க இது தவிர்க்க முடியாத கசப்பான மருந்தாகக் கருதப்படுகிறது. தேர்தல் அறிக்கையில் பெண்களுக்கு மாதம் ரூ.2,500 மகளிர் உரிமைத் தொகை வழங்குவதாக தவெக வாக்குறுதி அளித்தது. ஆனால் தற்போதைய நிதி நிலைமையில் இதை உடனடியாக நிறைவேற்றுவது சவாலானதாக உள்ளது. பொருளாதார நிபுணர்கள், வருவாய் ஆதாரங்கள் அதிகரிக்காமல் பெரும் தொகையை ஒதுக்கினால் மாநிலம் முடங்கும் அபாயம் இருப்பதாக எச்சரிக்கின்றனர். எனவே, தகுதியானவர்களுக்கு மட்டும் குறைந்த அளவில் தொடக்க கட்டமாக வழங்குவது அல்லது நிதி நிலை சீரடையும் வரை தற்காலிகமாக தள்ளிப்போடுவது (Postpone) குறித்து ஆலோசனை நடைபெறுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. போக்குவரத்துக் கழகங்களின் கடன் ரூ.61,642 கோடியாகவும், தமிழ்நாடு மின்சார வாரியத்தின் (TNEB) கடன் ரூ.2.47 லட்சம் கோடியாகவும் உயர்ந்துள்ளது. இத்தகைய நஷ்ட நிறுவனங்களைத் தொடர்ந்து அரசு சுமப்பது சாத்தியமில்லை என்பதால், சில பேருந்து வழித்தடங்களை ஒழுங்குபடுத்துதல், மின்சாரம் மற்றும் போக்குவரத்துத் துறையில் பொதுத் தனியார் கூட்டு (PPP Model) அல்லது தனியார்மயமாக்கல் ஆகியவை பரிசீலிக்கப்படலாம். இது நிர்வாக திறனை அதிகரித்து கசிவுகளைக் குறைக்க உதவும் என அரசியல் பார்வையாளர்கள் இந்த வெள்ளை அறிக்கையை முதல்வர் விஜயின் தந்திரோபாய நகர்வாகக் கருதுகின்றனர். முந்தைய ஆட்சியின் கடன் சுமையை மக்களுக்கு எடுத்துரைத்து, வரும் கடுமையான முடிவுகளையும் வாக்குறுதிகளில் ஏற்படும் தாமதத்தையும் நியாயப்படுத்த இதைப் பயன்படுத்தலாம் என்பது அவர்களின் கருத்து. தமிழகத்தின் நிதி மீட்சிக்கான பாதை என்னவாக இருக்கும்? வாக்குறுதிகளை எந்த அளவுக்கு நிறைவேற்ற முடியும் என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும். தவெக அரசின் ஒவ்வொரு நடவடிக்கையும் மக்களின் கண்காணிப்பில் இருக்கும்.முதல் திட்டம்: வரிகள் மற்றும் கட்டணங்கள் உயர்வு
இரண்டாவது திட்டம்: மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500 - வாக்குறுதி தள்ளிப்போகுமா?
மூன்றாவது திட்டம்: நஷ்ட பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்கல்
எதிர்பார்க்கப்படுகிறது.