பிஎம்ஸ்ரீ திட்டம்.. எந்த அழுத்தத்திற்கும் அடிபணிய மாட்டோம்! அமைச்சர் ராஜ்மோகன் திட்டவட்டம்

  • சென்னை: மத்திய அரசின் பிஎம் ஸ்ரீ திட்டத்தின் கீழ் வரும் மறைமுக அழுத்தங்களுக்கு தமிழக அரசு அடிபணியாது என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் கூறினார். மேலும், இருமொழிக் கொள்கை என்பது தவெகவின் கொள்கை என்றும், அதில் எந்த சமரசமும் இல்லை எனவும் அவர் உறுதிபடக் கூறியுள்ளார்.

    Advertisement

    சென்னை நுங்கம்பாக்கம் டி.பி.ஐ. வளாகத்தில் அமைச்சர் ராஜ்மோகன், இன்று 1 முதல் 3-ம் வகுப்பு வரை மாநில அளவில் புதிய பாட நூல்களுக்கான அறிமுக பயிற்சியை தொடங்கி வைத்து ஆசிரியர்களுக்கான கையேட்டினை வெளியிட்டார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர் கூறியதாவது:-

    Advertisement

    சமரசமற்ற நிலை

    10 ஆம் வகுப்பு தேர்வு ரிசல்ட் நாளை திட்டமிட்டபடி, காலை 9.30 மணியளவில் வெளியாகும். அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் 10 ஆம் வகுப்பு ரிசல்டை வெளியிட இருக்கிறோம். தமிழகம் முழுக்க அரசு பள்ளிகள் எண்ணிக்கையானது அதிகமாக உள்ளது. அதே சமயம், மாணவர்களின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது. இந்த சமரசமற்ற நிலையை முதலில் சரிசெய்ய நடவடிக்கை எடுக்க இருக்கிறோம்.

    பி.எம்.ஸ்ரீ திட்டத்தை ஏற்றுக்கொள்வீர்களா?

    ஒன்று முதல் 3ஆம் வகுப்புக்கான பாடத்திட்டம் இன்று அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இன்று முதல் கருத்தாளர்கள் ஆசிரியர்களுக்குப் பயிற்சி அளிப்பார்கள். பின்னர் இவர்கள் இங்கு பயிற்சி பெற்று மாவட்டம் தோறும் சென்று ஆசிரியர்களுக்கு பயிற்சி வகுப்புகளை வழங்க இருக்கிறார்கள். பள்ளிக்கூடங்களில் அடிப்படை வசதிகள் என்று சொல்லக்கூடிய அனைத்து வசதிகளும் உறுதி செய்யப்பட்டு வருகிறது.

    Advertisement

    பொருளாதார, சமூகம் உள்ளிட்ட காரணங்களுக்காக இடைநிற்றல் இருக்க கூடாது.. அதை அதிகப்படுத்த ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது" என்று கூறினார். அப்போது செய்தியாளர்கள், சுமார் ரூ.2,500 கோடி நிதிக்காக பி.எம்.ஸ்ரீ திட்டத்தை ஏற்றுக்கொள்வீர்களா?, சமரசம் செய்து கொள்வீர்களா? என்று கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த ராஜ்மோகன், "கடந்த 2 ஆண்டுகளாக நிதி வரவில்லை. இது எந்தவிதத்திலும் ஏற்புடையது கிடையாது.

    அடிபணிய போவதில்லை

    நாங்கள் எந்த மறைமுக அழுத்தத்திற்கும் அடிபணிய போவதில்லை. இருமொழி கொள்கை தான் தவெகவின் பிரகடனப்படுத்தப்பட்ட கொள்கை. எனவே எந்த இடத்திலும் அதில் சமரசமே இல்லை. கொள்கை சமரசத்திற்கு எந்த இடத்திலும் இடமில்லை. சுமார் ரூ.2,500 கோடி நிதியை நிறுத்தி வைத்து இருப்பது மிகப்பெரிய துயரம். இது எனக்கோ ஆசிரியர்களுக்கான நிதி அல்ல, மாணவர்களுக்கான நிதி. அதனை நிறுத்திவைப்பதை ஏற்றுக்கொள்ளவே முடியாது" என்றார்.

    Advertisement

    மேலும் கூறிய அவர், "ஆசிரியர்களின் பிரச்சினைகள் பற்றி எனக்கு நன்றாக தெரியும். அவர்க ளின் பிரச்சினைகளை பேசி தீர்க்க முடியும். பள்ளிக் கூடங்களில் மாணவர்களின் பாதுகாப்பு மிக முக்கியம். பள்ளி வாகனங்களை சரி வர பராமரிக்காவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" இவ்வாறு அவர் கூறினார்.

    English Summary

    Rajmohan: School Education Minister Rajmohan has asserted that the Tamil Nadu government will not yield to any indirect pressure from the Centre under the PM SHRI scheme. He also reaffirmed that the two-language policy remains the core stand of the TVK government and there will be no compromise on it.