தமிழக நிதிநிலை கவலைக்கிடம்?.. கடன் வளர்ச்சி 14.3%.. வெள்ளை அறிக்கை தகவல்

  • சென்னை: தமிழ்நாட்டின் நிதி நிலைமை குறித்து நிதியமைச்சர் மரியவில்சன் இன்று தலைமைச் செயலகத்தில் வெள்ளை அறிக்கை வெளியிட்டு, மாநிலத்தின் தற்போதைய பொருளாதார சூழல் குறித்து விரிவாக விளக்கமளித்தார். இந்த அறிக்கையில் மாநிலத்தின் கடன் சுமை, வருவாய் பற்றாக்குறை மற்றும் நிதி மேலாண்மை தொடர்பான பல முக்கிய தகவல்கள் இடம்பெற்றுள்ளன. கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் திமுக ஆட்சிக்காலத்தில் ரூ.5 லட்சம் கோடி அளவிற்கு கடன்கள் பெறப்பட்டுள்ளதாகவும், மாநிலத்தின் மொத்த கடன் வளர்ச்சி 14.3 சதவீத அளவிற்கு சென்றுள்ளதாகவும் நிதியமைச்சர் தெரிவித்தார்.

    Advertisement

    வெள்ளை அறிக்கையை வெளியிட்டு பேசிய நிதியமைச்சர், தமிழ்நாட்டின் வருவாய் பற்றாக்குறை வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்துள்ளதாக தெரிவித்தார். கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் மாநிலத்தின் மொத்த கடன் சுமை இரு மடங்காக அதிகரித்துள்ளதாகவும் அவர் கூறினார்.

    Advertisement

    மேலும், "வரவை விட செலவைக் கட்டுப்படுத்துவதே முக்கியம்" என்ற திருக்குறள் கருத்தை மேற்கோள் காட்டிய அவர், தற்போது மாநிலத்தின் செலவினங்கள் வருவாயை விட அதிகமாக உள்ளதாக சுட்டிக்காட்டினார். 2021 முதல் 2026 வரையிலான காலகட்டத்தில் மாநிலத்தின் சொந்த வரி வருவாய் வரலாறு காணாத வகையில் வீழ்ச்சியை சந்தித்துள்ளது.

    தமிழக அரசின் மொத்த நிலுவைக் கடன் தற்போது ரூ.10 லட்சம் கோடியாக உள்ளது. மாநிலத்தின் வருவாய் பற்றாக்குறை ரூ.78,326 கோடியாக உள்ளது. வருவாய் பற்றாக்குறை முன்பு எப்போதும் இல்லாத வகையில் அதிகரித்துள்ளது. அதேபோல், மாநிலத்தின் மொத்த உற்பத்தி மதிப்பில் கடன் சுமை 28.3 சதவீதமாக உள்ளதாகவும், இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் அதிக கடன் உள்ளது. ஒவ்வொரு குடிமகனின் மீதான கடன் சுமையும் கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் இரு மடங்கு உயர்ந்துள்ளது.

    Advertisement

    மேலும், கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் திமுக ஆட்சிக்காலத்தில் ரூ.5 லட்சம் கோடி அளவிற்கு கடன்கள் பெறப்பட்டுள்ளது. மாநிலத்தின் மொத்த கடன் வளர்ச்சி 14.3 சதவீத அளவிற்கு சென்றுள்ளதாகவும் நிதியமைச்சர் தெரிவித்தார்.

    English Summary

    Tamil Nadu Finance Minister Marie Wilson released a white paper highlighting the state's financial condition. The report states that Tamil Nadu's debt growth has reached 14.3%, with total outstanding debt touching ₹10 lakh crore and revenue deficit rising to ₹78,326 crore, raising concerns over the state's fiscal health.