சென்னை: சட்டமன்றத்தில் இன்று பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, தமிழ்த்தாய் வாழ்த்து குறித்து தவறான தகவலை கூறியிருந்தார். இது பெரிய விவாதமாக வெடிக்க இருந்த நிலையில், உடனடியாக குறுக்கிட்ட சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர், தவறை திருத்தியிருக்கிறார்.
தமிழ்நாடு சட்டமன்றத்தின் 17வது கூட்டத்தொடர் கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கியது. இரண்டாவது நாளாக இன்று அவை கூடிய நிலையில், மேகதாது அணை குறித்து விவாதங்கள் வெடித்தன.
இதற்கிடையில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேசுகையில், தமிழ்த்தாய் வாழ்த்து குறித்து தவறான தகவலை கூறியிருந்தார். அவர் பேசியதாவது, "கடந்த 3-4 ஆண்டுகளாக இங்கு தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படவில்லை. ஆளுநரை எதிர்த்தீர்கள், அவர் வெளிநடப்பு செய்திருந்தார்" என்று கூறியிருந்தார். இதையடுத்து எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள் மறுப்பு தெரிவித்திருந்தனர். உடனே குறுக்கீடு செய்த சபாநாயகர், தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது என்று கூறி, அமைச்சரின் பேச்சை திருத்தினார். திருத்தத்தை ஏற்றுக்கொண்ட அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, ஆளுநர் முன்பு தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது இல்லை என்று பேசினார். அவரது பேச்சு சட்டமன்றத்தில் சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது. அதேபோல, தவெக ஆட்சியில் குற்றங்கள் அதிகரித்திருக்கிறது என்றும், குற்றச் செயல்களில் தவெகவினர் ஈடுபடுவதாகவும் எதிர்க்கட்சிகள் விமர்சித்திருந்தனர். இது குறித்து பேசிய ஆதவ் அர்ஜுனா, திமுகவினர் கூட குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார்கள். 2 வயது குழந்தையை கூட திமுகவை சேர்ந்தவர் வன்கொடுமை செய்திருக்கிறார் என்று எங்களால் கூற முடியும் என்று பதில் சொன்னார். உடனே குறுக்கிட்ட சபாநாயகர், ஆதாரம் இல்லாமல் எதையும் பேச கூடாது என்றும், ஆதாரத்துடன் பேச வேண்டும் என்றும் சொல்ல.. நாளை ஆதாரத்துடன் பேசுகிறேன் என ஆதவ் அர்ஜுனா கூறியிருக்கிறார். இதைத் தொடர்ந்து பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மோசமடைந்திருக்கிறது என்றும், மின்வெட்டு பிரச்சனை நீடிக்கிறது என்றும் விமர்சித்து பேசியிருந்தார். அவரின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்த அமைச்சர் நிர்மல் குமார், கடந்த 15 ஆண்டுகளில் மின்துறை மோசமடைந்திருக்கிறது என்றும், ஏராளமான காலிப்பணியிடங்கள் இன்னும் நிரப்பப்படாமல் இருக்கிறது என்றும் கூறியிருந்தார். இதையடுத்து சட்டம் ஒழுங்கு பிரச்சனை குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விளக்கமளித்துள்ளார்.தவறான தகவல்
குறுக்கிட்ட சபாநாயகர்
சபாநாயகர் vs ஆதவ் அர்ஜுனா
மின்வெட்டு பிரச்சனை